கணவருக்கு கண் தெரியாது, காது கேட்காது! ஆனால் மனைவியின் பெருமையான வார்த்தை! இதுதான் உண்மையான காதல்
சென்னை: பொதுவாக காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆனால் கண் தெரியாதவர்கள் இந்த உலகத்தில் எவ்வளவு கஷ்டங்களை சந்திக்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்த உலகத்தை எதிர்த்து அவர்கள் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல கண்ணு தெரியாமல், காது கேட்காத ஒருவருடைய வாழ்க்கையில் ஒரு தேவதையே மனைவியாக கிடைத்திருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இருக்கும் காதலை ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சி வெளிகொண்டு வந்திருக்கிறது. இது இப்போதைய தலைமுறைகள் பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறது.
தற்போதைய அவசர உலகத்தில் பலருக்குள் பொறுமை இருப்பதில்லை. காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுக்குள் ஒரு சில மாதங்களுக்குள் பிரச்சனை வெடிக்க தொடங்கிவிட்டது. மனைவி கணவனிடம் உண்மையாகவும் காதலோடும் இருந்தால் கணவன் அது பல இருப்பதில்லை. கணவன் மனைவியை உண்மையாக காதலித்து தியாகங்கள் செய்தால் மனைவி அதை பொருட்படுத்தவில்லை. இப்படி நம்மை சுற்றி பலரை நாம் பார்த்து இருப்போம்.

ஆனால் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஒரு உண்மையான காதல் தம்பதி தங்கள் இருவருக்கும் இருக்கும் காதலை சொல்லி பலரையும் வியக்க வைத்திருக்கிறார். அதில் அந்த கணவருக்கு பிறவியிலேயே கண் தெரியாதாம். பிறகு நாட்கள் போகப்போக காதும் கேட்காமல் போயிருக்கிறது. அவருடைய மனைவி எந்த குறைபாடும் இல்லாதவர். அவர் கல்லூரி படிப்பிற்காக அவருடைய கணவரிடம் தான் மாணவியாக சேர்ந்திருக்கிறார்.
மாற்றுத்திறனாளிகளை புரிந்து கொள்வது எப்படி என்பது போன்ற ஒரு ட்ரைனிங்காக அவருடைய கணவரிடம் சென்று இருக்கிறார். அங்கு (அந்த ஆணிடம்) அவரிடம் கல்வி பயின்றவர்கள் எல்லோருமே எந்த குறைபாடும் இல்லாதவர்கள். ஆனால் தன்னிடம் படிப்பவர்களுக்கு எளிமையாக புரியும் படியே அந்த நபர் பாடம் நடத்துவாராம். பிறகு அவருடைய மனைவிக்கு டிரெய்னிங் முடிந்ததும் அவர் வீட்டிற்கு போய்விட்டாராம். அதற்குப் பிறகு இமெயிலில் தன்னுடைய கணவருக்கு (ஆரம்பத்தில் நண்பன்) மெசேஜ் அனுப்புவாராம். அதற்கு அவருடைய கணவர் போனில் பதில் சொல்வாராம். ஆனால் போனில் உடனுக்குடன் பதில் கொடுக்க முடியாதாம்.
காரணம் அவருக்கு காது கேட்காது என்பதால் போனில் பேசுவது புரியாது. அதனால் மெயிலில் பதில் அனுப்புவாராம் ஒரு நாள் முழுக்க காத்திருந்துதான் அடுத்த நாள் அந்த பதிலை படிக்க முடியுமாம். எப்படி இவரால் படிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கலாம் தொடுத்துறையோடு கூடிய ஒரு பிரத்தியோக கருவியை அப்போது பயன்படுத்தி இருக்கிறார்கள். முதலில் அந்த கணவர் தான் தன்னுடைய காதலை சொல்லி இருக்கிறார். அப்போது அந்த பெண் அவருடைய அம்மாவிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் குடும்பத்தினர் எல்லோருமே இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

அதனால் இவர்கள் இருவரும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துவிட்டார்களாம். கல்யாணத்திற்கு பிறகு வீடு வாடகைக்கு எடுக்க போனால் கூட இவரை நம்பி எப்படி வீடு தர முடியும்? இவரால் வாடகை கொடுக்க முடியுமா? என்று பலர் கேட்பார்களாம். இப்போது அவர் காலேஜ் ப்ரொபஷனராக இருக்கிறார். அவரிடம் படிக்கும் மாணவர்கள் இதுவரைக்கும் யாருமே ஃபெயில் ஆனதே கிடையாதாம். அந்த அளவிற்கு தன்னுடைய மாணவர்களுக்கு அழகாக கல்வியை கற்றுக் கொடுக்கிறாராம்.
இது பற்றி அந்தப் பெண் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். எந்த இடத்திலும் தன்னுடைய கணவருடைய நிலையை பரிதாபமாகவோ அல்லது அவருக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என்பது போல பெருமையாகவோ அவர் பேசவே இல்லை. இருவருக்கும் இருக்கும் காதல் மற்றும் அன்பை மட்டுமே இருவரும் பகிர்ந்து கொண்டனர். இவர்கள் இருவரையும் பார்க்கும் பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.
அழகு இல்லை என்றும், வசதி வாய்ப்பு, படிப்பு இல்லைன்னு பலர் காதலை தூக்கி எறிந்து விட்டு போகும் நிலையில் எவ்வளவோ பிரச்சனைகளை தாண்டி இந்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். உண்மையில் இவர்கள்தான் நிஜ காதலர்கள். இவர்கள் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பது பலருடைய வாழ்த்தாக இருக்கிறது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications