அழுது அழுது முடியல.. மகாலட்சுமி அப்படி சொன்னாங்க.. அன்பே வா சீரியல் நடிகை எமோஷனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் மூலம் பூமிகா கேரக்டரில் பிரபலமடைந்த நடிகை டெல்னா தான் சீரியலில் இருந்து எதற்காக விலகினேன் என்பது பற்றி பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

அதோடு சீரியலில் தன்னுடைய கேரக்டரை இறந்தது போன்று எதற்காக காட்டினார்கள் என்பது பற்றியும் அதனால் தான் பட்ட கஷ்டங்கள் குறித்தும் டெல்னா பேசியிருக்கிறார்.

 Reason for Delna Exit from Anbe Va Serial

அதுமட்டுமல்லாமல் தான் சீரியலில் மீண்டும் தொடர்வேனா இல்லையா என்பது பற்றியும் டெல்னா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சீரியலுக்கு பெயர் போன சன் டிவியில் நடிக்கும் சீரியல் நடிகர் நடிகைகள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விடுவது வாடிக்கைதான். அந்த வகையில் தான் சன் டிவியில் அன்பே வா சீரியலின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பூமிகாவாக டெல்னா நடித்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட மூன்று வருடங்களை தாண்டி இந்த சீரியலில் பூமிகாவாக அதிகமாக மீம்ஸ் களிலும் டெல்னா இடம்பிடித்து இருந்தார்.

அன்பே வா சீரியலில் வருண் மற்றும் பூமிகாவுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவருடைய க்யூட்டான காதல், ரொமான்ஸ் மற்றும் சண்டை பலருடைய ஃபேவரைட் அதனாலையே பலருடைய வாட்ஸ்அப் ஸ்டோரிகளில் இவர்களுடைய புகைப்படமும், இவர்களுடைய க்யூட்டான வீடியோக்களும் இடம் பிடித்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பூமிகா இந்த சீரியலில் திடீரென்று இறந்து போவது போன்று காட்சிகளை வைத்து விட்டனர்.

இதற்கு சில நாட்களுக்கு முன்பே நடிகர் டெல்னா நான் பூமிகாவாக இந்த சீரியலில் இருந்து விலகப் போகிறேன் என்றும் கூறியிருந்தார். அதனால் என்ன காரணம் இவர் திடீரென்று விலகப் போகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். அதே நேரத்தில் பலர் இனி இந்த சீரியலை பார்க்கவே மாட்டோம் கருத்து கூறிக் கொண்டிருந்தனர்.

இப்படியாக இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில் டெல்னா முதல்முறையாக இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் சீரியலில் கதைப்படி நான் இறப்பது போன்று கதையை மாறி இருக்கிறது. சீரியலின் கதை என்பது ஆரம்பத்திலேயே எழுதியது போன்று கடைசி வரைக்கும் இருக்கப் போறது கிடையாது.

சீரியலில் ஒவ்வொரு வாரமும் டிஆர்பியின் அடிப்படையில் தான் மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்த மாதிரி தான் வரணுக்கு கூட இன்னொரு ஜோடி வந்தாங்க. ஒரு சமயத்தில் வருணுக்கும் பூமிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. பிறகு இருவருக்கும் பிரிவும் ஏற்பட்டது. இப்படித்தான் டிஆர்பிக்கு தகுந்த மாதிரி கதை மாறிக்கொண்டே இருக்கும்.

அதுபோல இப்போது பூமிகா இறப்பது போன்று கதையை வைத்திருக்கின்றனர். ஆனால் இந்த சீரியலில் இருந்து என்னுடைய கதை முடிவடைந்ததும் நான் ரொம்பவே வருத்தப்பட்டேன். தினமும் நான் அழுது கொண்டே இருந்தேன். நான் முழுமையாக பூமிகாவாகவே மாறிவிட்டேன். எனக்குள் பூமிகா கேரக்டர் ரொம்பவே ஆழமாக இறங்கிவிட்டது.

 Reason for Delna Exit from Anbe Va Serial

மூன்று வருடங்களாக நான் முதல் முறை இந்த சீரியலில் தான் நடித்திருக்கிறேன். இதுவரைக்கும் வேறு எந்த சீரியலில் அதிக நாட்கள் தொடர்ச்சியாக நடித்ததில்லை என்பதால் இந்த சீரியலில் நான் ரொம்பவே கேரக்டராக வாழ்ந்து விட்டேன். நான் வெளியே செல்லும்போதெல்லாம் கூட பலரும் என்னிடம் பூமிகா என்று தான் என்னை கூப்பிடுகிறார்கள்.

அப்படியே பழகி விட்டதால் என்னுடைய கடைசி நாள் ஷூட்டிங் போது நான் ரொம்பவே அழுது இருந்தேன். கடைசி நாளில் பூமிகா இறந்து இருப்பார் அவரை கீழே கிடத்தி வைத்திருப்பார்கள். அப்போது வருண் உட்பட எல்லோரும் அழுது கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் என்னுடைய கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்கும்.

அதில் நிஜத்திலேயே வந்ததுதான். அந்த காட்சிகள் முடிவடைந்த பிறகு எனக்கு வில்லியாக இந்த சீரியலில் நடிக்கும் நடிகை மகாலட்சுமி கூட உன்னை அந்த மாதிரி எங்களால பார்க்க முடியல. பூமிகா கேரக்டர் இறந்த பிறகு ஒரு போட்டோ ஒன்று வைத்து கும்பிடுவது போன்று காட்சிகள் வைத்திருக்காங்க. அந்த போட்டோவை என்னால கண் கொண்டு பார்க்கவே முடியல மனசுக்கு ரொம்ப வலியா இருக்கு என்று மகால் சொன்னாங்க என்று அந்த பேட்டியில் நடிகை டெல்னா பகிர்ந்து இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+