பூக்காரம்மா கேரக்டரா? ஜட்ஜம்மா ரோலா? கூப்பிடுங்க அந்த ரெய்க்கி டாக்ரம்மாவை! ஆஹா என்னா நடிப்பு!
சென்னை: பூக்கராம்மா கேரக்டராக இருந்தாலும் ஜட்ஜம்மா கேரக்டராக இருந்தாலும் டாக்டர் ரெய்ச்சல் ரெபக்காவை கூப்பிடுங்க என சொல்லும் அளவுக்கு அவர் எந்த வேடம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிடுகிறார்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: புதிதாக அப்பா வாங்கித்தந்த போனை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த பள்ளிப் பருவப்பெண். அப்பாவும், அம்மாவும் வெளியே போயிருந்தார்கள். மொபைல் பாரர்க்கும் ஆசையில் வாசல் கதவை மூட மறந்து விட்டாள் அவள்.

அப்போது கத்தியோடு பாய்ந்த அந்த உருவம் யாரென புரிந்து விட்டது. தன் பின்னாலேயே நடந்து ஒரு தலைக் காதலை சொல்லி திரும்ப காதலிக்கச்சொல்லும் சைக்கோ டார்ச்சர் அவன். அன்று அந்த பிஞ்சு உடல் முழுவதும் கொடூரமாக தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுறுமானாள்.
'மெய்யழகன்' படத்தில் அரவிந்த்சாமி மனக்குழப்பத்தோடு பீர் குடித்த போதையோடு ஓடி வந்து கோவில் வாசலில் நிற்கும் போது தான் அந்த பூக்காரம்மாவை பார்ப்பான். கோவிலுக்கு போய் சாமியை பார்க்கச் சொல்வாளள் அவள். எப்படியாவது கார்த்தி விழித்து தேடும் முன் இந்த இடத்திலிருந்து ஓடி விட துடிக்கும் மனதோடு இருப்பவனுக்கு கடவுள் நினைவு வருமா?.
"குளிக்கவில்லை" என்பான். "நம்ம சாமி தானே" என பூக்காரம்மா விளக்கினாலும் அர்விந்த்சாமி மனம் சமாதானமடையாது. உடனே பணம் கொடுத்து அர்ச்சனை செய்ய சொல்வான். யார் பெயருக்கு என பூக்காரம்மா கேட்டதும்...அது தான் பிரச்சினை....'சாமிபெயருக்கு' என்கிற பதிலுடன் பூக்காரம்மா அருகில் அமர்வான். அவனின் சகல தவிப்புகளும் மாற விபூதி எடுத்து பூசுவாள் பூக்காரப்பெண். அது தான் கடவுளிடமிருந்து கிடைத்த கை குலுக்கல்.
'கடைசி விவசாயி' மாயாண்டி நீதிமன்றத்துக்கு காவலரால் கொண்டு வரும் போது அவருக்கு பயமே இருக்காது. ஆனால் அவர் மாட்ட வைக்கப்பட்டிருக்கிறார் என்பது ஜட்ஜம்மாவுக்கு தெரியும். "அய்யா..மயிலை கொன்னீங்களா?" என ஜட்ஜம்மா கேட்டதும் "சாமி வாகனத்தை யாராவது கொல்லுவாங்களா?" என்கிற பதிலில் ஜட்ஜம்மாவுக்கு எல்லாம் புரிந்து விடும்.
"குலதெய்வத்துக்கு நெல்லு போட்டிருக்கேன். அதுக்கு தண்ணி பாய்ச்சணும்..." என்கிற போது "அதெல்லாம் போக முடியாது.." என ஜட்ஜம்மா சொன்னதும் "அதுவும் உசுரு தானுங்களே...தண்ணி இல்லைன்னா செத்துரும்"னு சொன்ன போது ஜட்ஜம்மாவுக்கு மாயாண்டியை புரிந்து விடும். 15 நாள் ரிமாண்டிற்கு பிறகு மாயாண்டியை அனுப்பினாலும் இந்த காவலர்கள் எதுவும் செய்வார்கள் என அவரை கூடவே சேர்ந்து வந்து வயல் வரைக்கும் அனுப்புவதோடு அருகில் நிற்கும் காவலரை "நீங்களும் உதவி பண்ணுங்க" என பயிரெடுக்க அனுப்பும் அந்த ஜட்ஜம்மா செயல் மாயாண்டிக்கு கடவுள் தந்த கை குலுக்கல்.
இந்த ஜட்ஜம்மாவும், பூக்காரம்மாவும் குழப்பமான சூழ்நிலையில் மனிதனுக்குஉதவ கடவுள் அனுப்பும் விந்தை மனிதர்கள். அப்படிப்பட்ட பாத்திரத்தை யார் செய்வது என்பதிலும் கடவுளிடம் ஒரு நீதி இருக்கிறது. சல்லடையாக்கப்பட்ட உடலோடும், காயங்களோடும் உயிரைக்காப்பாற்றிக்கொண்ட அந்த பள்ளிப்பருவப்பெண் தன் வாழ்க்கை வலிகளை தோற்கடிக்க எடுத்த ஆயுதம் படிப்பு..படிப்பு..படிப்பு... இன்று மருத்துவம் படித்து டாக்டராகி இருக்கும் அந்தப்பெண் தான் பூக்காரம்மா, ஜட்ஜம்மா...
தான் மருத்துவரென்றாலும் தன் கதாபாத்திரங்களால் மனித மனங்களின் மேன்மைகளை வெளிப்படுத்திய அந்த டாக்டர் நடிகை ரெய்ச்சல் ரெபெக்கா. காயங்களிலிருந்து மீண்டு பிடித்த வாழ்க்கையை வாழும் பெண். கடவுளும் இயக்குனர் தான் போல.. இதனை இவள் நடிப்பாள் என்றாய்ந்து அதனை அவள்கண் விடல்... இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications