மீம்ஸில் ட்ரெண்டான, வசூல்ராஜா MBBS பட ‘சாம்பு மவன்’ நடிகரை நினைவு இருக்கா? அவர் இறந்து விட்டாரா? அதிர்ச்சி தகவல்
சென்னை: கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன், பிரபு, சினேகா, பிரகாஷ்ராஜ், மாளவிகா நடிப்பில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் மரணம் அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வசூல்ராஜா திரைப்படத்தில் நடித்து அதிகமாக மீம்ஸுகளில் இடம் பிடித்த சாம்பு மவன் கேரக்டரில் நடித்த நடிகர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடிக்கும் நடிகர்கள் அவர்களே எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அதில் முதல் திரைப்படத்தில் பிரபலமான பிறகு அடுத்தடுத்து அவர்கள் திரைப்படங்களில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிலர் காணாமல் போய்விடுகிறார்கள். அவர்களுடைய காட்சிகளை பார்க்கும்போதெல்லாம் இந்த நடிகரை காணவில்லையே எங்கே போனார் என்று பலரும் தேடி வருகிறார்கள்.

காணாமல் போகும் நடிகர்கள்
சில நடிகைகளும் முதல் திரைப்படத்தில் பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டு பிறகு சினிமாவைவிட்டு காணாமல் போய்விடுகிறார்கள். அதுபோலத்தான் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் சுவாமிநாதன் என்ற கேரக்டரில் நடித்த நடிகரை காணவில்லை என்று ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி தேடி வருகிறார்கள். ஆனால் இப்போது அவர் பற்றி அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகி இருக்கிறது.
ஹிட்டான வசூல்ராஜா எம்பிபிஎஸ்
அதாவது சமீபத்தில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் இடம் பெற்ற காட்சிகள் மீம்ஸ்களில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அந்த மீம்ஸ் ஒரு சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடப்பட்டிருக்கிறது. அப்போது அதை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த நடிகரின் பெயர் என்ன? இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு எந்த திரைப்படத்திலும் காணவில்லையே அவர் எங்கே போனார் என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்.

அதிர்ச்சி செய்தி
அதற்கு மற்றொரு ரசிகர் அந்த நடிகர் என்னுடைய சகோதரரின் கிளாஸ்மெட்டுதான். அவர் பெயர் "ரத்தின சபாபதி" அவர் சாலை விபத்தில் இறந்துவிட்டார் என்று பதில் கொடுத்து இருக்கிறார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் வசூல்ராஜா திரைப்படத்தில் கமல், ஆரம்பத்தில் கந்துவட்டி வாங்கிக்கொண்டு சுற்றி திரிவார். ஆனால் தன்னுடைய அப்பாவிடம் தான் ஒரு டாக்டர் என்று ஏமாற்றி இருக்கிறார்.

கமல்ஹாசன் ரூம் மேட்
தன்னுடைய அப்பா சென்னைக்கு வந்தபோது கமல்ஹாசன் டாக்டர் இல்லை என்று தெரியவந்துவிடும். ஆனால் தன்னுடைய அப்பாவிற்காக எப்படியாவது டாக்டராக வேண்டும் என்பதற்காக கல்லூரியில் சேர்வார். காலேஜில் சீட்டு வாங்குவதற்கு கூட பல தில்லாலங்கடி வேலைகளை செய்துதான் கமல்ஹாசன் கல்லூரியில் சேர்வார். அப்போது ஹாஸ்டலில் ஒரு ரூம் கமல்ஹாசனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அந்த ரூமில் தான் சுவாமிநாதன் என்று கேரக்டரில் ஒரு படிப்பாளி கேரக்டர் இருப்பார்.
மறக்க முடியாத சாம்பு மகன்
அவரை கமல்ஹாசன் சாம்பு மவனே என்று தான் கூப்பிடுவார். அதுபோல நாம இனி பிரண்ட்ஸ் என்று அவரிடம் கமல்ஹாசன் கைகொடுக்கும் புகைப்படங்கள் பல மீம்ஸ்களில் இடம் பெறுவதை பார்க்க முடிகிறது. இந்த திரைப்படம் வந்து 20 வருடங்களை கடந்துவிட்ட போதிலும் இந்த திரைப்படத்தில் பல காட்சிகள் மீம்ஸ்களில் இப்போதும் டிரண்டாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த கேரக்டரில் நடித்த நடிகர் பற்றிய தகவல்கள் இப்போது இணையத்தில் பலரையும் வருத்தம் அடைய செய்திருக்கிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications