இடுப்பை வெடுக் வெடுக்குன்னு ஆட்டிய ரேஷ்மா.. ஹெல்மெட்டை தூக்கி மாட்டிய கோபி.. ஒரே காமெடி

Subscribe to Oneindia Tamil

சென்னை : சீரியலில் தான் பாக்கியலட்சுமி கோபி அவருடைய மனைவியை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று பார்த்தால் ரீல்ஸ் வீடியோவிலேயும் ஹெல்மெட் போட்டு ஏமாத்திட்டாரே என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அப்படி ஒரு காமெடியான வீடியோவை போட்டுள்ளார் ரேஷ்மா பசுபுலேட்டி.

பாக்கியலட்சுமி சீரியலின் கோபி கேரக்டரில் நடிக்கும் சதீஷ்குமார் மீது ரசிகர்கள் செம காண்டில் இருக்கின்றனர். எப்பதான் இவர் பாக்கியலட்சுமியிடம் மாட்டுவார் என்று பலர் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் தப்பி விடுகிறார்.

சீரியலில் தான் இவரை பார்த்து ரசிகர்கள் திட்டுகிறார்கள் என்று இருக்கும்போது ரீல்ஸ் வீடியோவிலும் இவர் அந்த மாதிரியே செய்து கொண்டிருக்கிறாரே இவரை என்னதான் சொல்வது என்று இப்போ ரசிகர்களே குழப்பத்தில் இருக்கின்றனர்.

ஒன்னும் தெரியாத பச்ச புள்ளை

ஒன்னும் தெரியாத பச்ச புள்ளை

பாக்யலட்சுமி சீரியலில் புதியதாக ராதிகா கேரக்டரில் அறிமுகமாகியிருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி இந்த சீரியல் டீமுடன் நன்றாகவே செட் ஆகிவிட்டார். சூட்டிங் ஸ்பாட்டில் இவர் எப்போதுமே ஜாலியாகத்தான் இருப்பார். எந்த சீரியலில் நடித்தாலும் அங்கு ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் எல்லாம் போட்டோ ஷூட் எடுத்து முடித்து விடுவதுதான் இவருடைய பொழுது போக்கு. அந்த மாதிரி தான் தற்போது இவர் ஒரு வீடியோவை எடுத்து இருக்கிறார். ஆனால் அதைப் பார்த்து நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கி விட்டனர். இவரை ஒன்னும் தெரியாத ராதிகாவாக நினைத்து கொண்டிருக்கும் ரசிகர்கள் எப்போது இவருக்கு உண்மை தெரியும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அனைவருக்கும் அம்மாவான பாக்கியா

அனைவருக்கும் அம்மாவான பாக்கியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தோடு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். இந்த சீரியலில் பாக்கியலட்சுமி ஆக நடிக்கும் சுசித்ராவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகி விட்டது. இவர் அப்படியே குடும்ப பெண்கள் கஷ்டத்தை பிரதிபலிக்கும் கேரக்டராக நடித்திருப்பதால், குடும்ப பெண்களின் மத்தியில் இவருக்கு நல்ல மரியாதையும் பாசமும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தங்களுடைய அம்மாவை போன்றே இவர்களுடைய எதார்த்தமான நடிப்பு இருப்பதால் இளைஞர்களும் இவரை அதிகமாக விரும்பி வருகின்றனர். அதனால்தான் அவர்களால் இவர் கஷ்டப்படுவதை பார்க்க முடியாமல் கமெண்டுகளை போட்டு வருகின்றனர். இவர் கஷ்டப்படுவதற்கு முழு காரணமும் கோபி தான் என்பதால் கோபியின் மீது பாக்கியாவின் ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர்.

எல்லாம் நடிப்பு தான் விட்ருங்க

எல்லாம் நடிப்பு தான் விட்ருங்க

இந்த சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ்குமாருக்கு எப்போதுமே நெகட்டிவ் கமெண்டுகள் அதிகமாகத்தான் வந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் அது எல்லாம் நடிப்பு மட்டும்தான் அதை மறந்து விடுங்கள் எப்போதுமே என்னுடைய கேரக்டர் அது அல்ல என்று ஜாலியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரைப் பற்றி அதிகமான கமெண்ட்கள் வரும்போதெல்லாம் இவர் ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டு வருகிறார். ஆனாலும் இதில் மன நிறைவு அடையாத ரசிகர்கள் மீண்டும் மீண்டும் இவரை திட்டித் தீர்க்கின்றனர்.

 கோட்டைவிட்ட பாக்கியா

கோட்டைவிட்ட பாக்கியா

அந்த மாதிரிதான் தற்போது கூட இவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் ஜாலியாக ஒரு ரீல்ஸ் வீடியோவை எடுத்திருக்கின்றனர். அதில் கோபியும் ராதிகாவும் கேஷுவலாக பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு பாக்கியாவும் வீட்டு வேலைக்காரப் பெண்ணாக செல்வியும் வந்துவிடுகிறார். ஆனால் கோபியை பார்த்ததும் சுஜித்ரா என்ன பேசிகிட்டு இருக்கீங்களா என்று கையை மடக்கி குத்துவதற்கு ரெடி ஆகிறார். ஆனால் உடனே உஷரான கோபி ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ஆட்டம் போட்டிருக்கிறார். இந்த வீடியோக்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இது ஒரு ஜாலியான வீடியோ என்று ரேஷ்மா பசுபுலேட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கம்பம் மீனாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஐடியில் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதனை அதிகமாக ஷேர் செய்து சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி விட்டனர்.

இந்த நிலைமையிலும் ஆட்டமா

இந்த நிலைமையிலும் ஆட்டமா

சும்மாவே கோபி எது செஞ்சாலும் பிரச்சனையை கிளப்பும் நெட்டிசன்கள் இப்போ இவர் மூன்று பெண்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டதை வைத்து விதவிதமாக திட்டி தீர்த்து வருகின்றனர். சீரியலில் தான் இவர் ராதிகாவுக்கும் பாக்கியலட்சுமிக்கும் இடையில் உண்மை தெரிந்து விடக்கூடாது என்று பாடாய் பட்டுக் கொண்டிருக்கிறார் என்று பார்த்தால்,இப்போது இன்ஸ்டாகிராம் ரசிகர்களிடம் மாட்டிக்கொண்டு பாடாய் படுகிறார். எப்போதுதான் இந்த கோபியின் ஆட்டம் வெளியே தெரியவரும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்குபோது இவர் செழியன் இடம் மாற்றிக் கொண்டாலும் செழியன் பாக்கியாவிடம் சொல்லுவதற்கு முன்பே பாக்கியாவிற்கு ஐஸ் வைத்துவிட்டார். இதனைப் பார்த்து காண்டான ரசிகர்கள் எப்போது தான் பாக்கியலட்சுமிக்கும் ராதிகாவுக்கும் தெரிந்து இருவரும் சேர்ந்து இவரை துவச்சி எடுக்க போறாங்க என்று ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+