அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை, இதைத்தான் செய்யணும்! ஷாலினி சூட்டிங் ஸ்பாட்டில் இப்படித்தான்! சபாஷ்! பிரபலம் ஓபன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஷாலினி குறித்து நடிகை ரிஹானா பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். தற்போது அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை அளவுக்கு அதிகமாக இருக்கும் நிலையில் அதற்கு ஷாலினியை போல சூட்டிங் ஸ்பாட்டில் நடந்து கொள்ள வேண்டும் என்று ரிஹானா அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
அட்ஜஸ்மென்ட் பிரச்சனை என்பது எல்லா துறைகளிலும் பெண்களுக்கு இருக்கிறது. அதிலும் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற தொந்தரவுகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் சினிமா துறையில் இது அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஆரம்பத்தில் இது பற்றி பேசுவதற்கு பல நடிகைகள் தயங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது தங்களுக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கி இருக்கிறார்கள்.

துணைக்கு ஆள் வேண்டும்
அதுபோலத்தான் சீரியல் நடிகை ரிஹானா பல பேட்டிகளில் சினிமா சின்னத்திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும் போது அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை எப்போதுமே நடிகைகளுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நடிகைகள் அவர்களுடைய உறவினர்கள் அல்லது கணவன் மாமியார் யாரையாவது ஒருவரை கூட்டிக்கொண்டு வரவேண்டும்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி
தயாரிப்பாளரோ, நடிகரோ, இயக்குனரோ ஒருவர் நம்மிடம் நேரடியாக நெருங்க முடியாத வகையில் நாம் இருந்து கொள்ள வேண்டும் என்று ரிஹானா கூறியிருக்கிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ராஜி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் ஷாலினி இந்த விஷயத்தில் பக்காவாக செயல்படுகிறார். அதை நானே கண்ணால் பார்த்திருக்கிறேன். நானும் பாண்டியர் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்திருந்தேன் அப்போது அந்த பொண்ணு நடிக்க வந்த புதியதில் எப்படி மேக்கப் போடணும் என்று கூட தெரியாது.
ரிஹானா பேட்டி
அந்த பொண்ணு விஜய் டிவியில் கதாநாயகி என்ற நிகழ்ச்சி மூலமாக தான் வெற்றி பெற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க வந்தது. சூட்டிங் ஸ்பாட்டுக்கு எப்போதும் அவருடைய மாமியாருடன் தான் வரும். மாமியாரை அம்மா என்றுதான் கூப்பிடும். அவங்க மாமியார் ஒரு நிமிடம் கூட ஷாலினியை விட்டு தள்ளிப் போக மாட்டாங்க. ஷாலினிக்கு எது தேவையோ எல்லாவற்றையும் அவங்க தான் பாத்துக்குவாங்க. ஆரம்பத்தில் மேக்கப் போன்ற பொருட்களை என்னிடம் தான் வாங்கிட்டு வர சொன்னாங்க.

ரசிகர்கள் கருத்து
நான் மேக்கப் பொருள்கள் வாங்கி கொடுத்ததும் அவங்க காசு தந்துட்டாங்க. இதுபோல சூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒருவரை துணையோடு கூட்டிக்கொண்டு வந்தால் அட்ஜஸ்ட்மெண்ட் தொந்தரவு செய்பவர்களால் நம்மிடம் நெருங்க முடியாது என்று ரிஹானா பேசியிருக்கிறார். ரிஹானா சொல்வது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது இந்த கருத்து தவறு என்று நினைக்கிறீர்களா? சொல்லுங்க பாஸ்.












Click it and Unblock the Notifications