Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிதன்யாவின் ஓவர் சென்சிடிவ்.. கணவர் கவின் சொல்றதை பாருங்க.. அப்ப வரதட்சணை வாங்கலயா? பிரபலம் பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிதன்யா மாமியார், கணவர், மாமனாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தோம். ஆனால், ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் கொடுத்துவிட்டது. இது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை தந்துள்ளது. மகளை இழந்துவிட்டேன். அந்த வருத்தத்தில் இருந்து இன்னும் மீளமுடியாமல் இருக்கிறேன். ஆனால் இருந்தாலும் சட்டத்தையும், நீதியையும் மதிக்கிறேன். சட்டப்படி அடுத்து நாங்கள் போராட தயாராகி வருகிறோம் என்று ரிதன்யாவின் அப்பா கண்ணீர் மல்க பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. இந்நிலையில், ரிதன்யாவின் வழக்கு விசாரணை இனி எப்படி நகர போகிறது? என்பது குறித்து வழக்கறிஞர் ஷைனி ஜே ஜே சேவியர் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.

ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் தங்களுக்கு ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதனை விசாரித்த ஐகோர்ட்டு, கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ரா தேவி ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Television Rithanya Tiruppur

அதன்படி மூவரும் காலை, மாலை போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளிடம் விசாரணையும் முடிவடைந்து விட்டது என்பதால் மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க அவசியம் இல்லை என்று சொல்லி மூவருக்கும் ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ரிதன்யாவின் மனநிலைமை சரியானதா

இந்நிலையில், AV Nellai Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள வழக்கறிஞர் ஷைனி ஜே ஜே சேவியர், " ரிதன்யா வழக்கை பொறுத்தவரை, சாட்சிகளை ஓரளவு விசாரித்துவிட்டார்கள்.. அதனை பதிவும் செய்துள்ளனர்.. இதன்காரணமாகவே ஜாமீன் தரப்பட்டுள்ளது..

எனினும், இந்த வழக்கின் விசாரணையின்போதுதான், யார் மீது தவறு? உள்ளது என்பது தெரியவரும்.. அதேபோல, ரிதன்யாவுக்கு இதற்கு முன்பு ஏதாவது மனரீதியான பாதிப்பு இருந்திருக்கிறதா? அல்லது சரியான மனஓட்டத்தில்தான் இருந்தாரா? ரிதன்யா மிகவும் சென்சிடிவ் நபரா? எப்படிப்பட்ட பெண்? என்பது குறித்தும் விசாரிக்கிறார்கள்.. ரிதன்யாவுடன் பள்ளி, கல்லூரிகளில் படித்தவர்கள் உள்ளிட்ட வட்டாரங்களில் இதுகுறித்து விசாரணை நடக்கிறது..

வரதட்சணை கொடுமையின்கீழ் வழக்கு இப்போது பதிவாகவில்லை.. வேறு வேறு 3 வழக்குகளின்கீழ்தான் பதிவாகியிருப்பதால், விசாரணையும் அது தொடர்பாகவே இருக்கும்..

ரிதன்யா இறப்பதற்கு முன்பு ஆடியோ மெசேஜ் மூலம் பல்வேறு விஷயங்களை சொல்லியிருந்தார்.. இந்த ஆடியோ மெசேஜ் பிரதான ஆதாரமாக இருந்தாலும், அதை மட்டுமே வழக்கின் முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.. ஆடியோ மெசேஜ் குறித்த உண்மைத்தன்மை என்ன என்பதற்கான தடவியல் நிபுணர்களின் அறிக்கையும் இன்னும் வரவில்லை..

3 சிம்கார்டு எதுக்கு

ரிதன்யா 3 சிம்கார்டு வைத்திருந்ததாக சொல்லப்படும் நிலையில், அதுகுறித்த விசாரணையும் இனிமேல்தான் நடக்கும்.. கவின் தரப்பில் வரதட்சணையை மறைமுகமாக கேட்டார்கள் என்றால், எப்படி கேட்டார்கள்? அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால் அந்த ஆதாரத்தையும் ரிதன்யாவின் தரப்பில் சமர்ப்பிக்க வேண்டிவரும்.

ஆக, ரிதன்யாவுக்கு மனரீதியான பாதிப்பு ஏற்கனவே இருந்ததா? இல்லையா என்பது குறித்து கவின் தரப்பில் நிரூபிக்க வேண்டியிருக்கிறது.. அதேபோல வரட்சணையை மறைமுகமாக கவின் தரப்பினர் கேட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தையும் ரிதன்யா தரப்பில் நிரூபிக்க வேண்டும்.. இதுபோக சாட்சிகளிடமும் முறையான விசாரணையும் நடைபெறும்..எப்படியும் இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு வருடத்துக்குள் வெளியாகும்.

வழக்கறிஞரை அணுகவில்லை

ஆனால் ஆரம்பத்திலேயே, ரிதன்யா குடும்பத்தினர் திணறியிருக்கிறார்கள்.. இதற்காக வழக்கறிஞர் யாரையும் முறைப்படி நியமிக்கவில்லை.. தடயவியல் அறிக்கை போன்றவற்றை தரும்போதுதான், தனியாகவே போலீஸ் ஸ்டேஷன் சென்றிருக்கிறார்கள்..முதலிலேயே வழக்கறிஞர் யாரையாவது வைத்து, இந்த வழக்கை அணுகியிருந்தால், வரதட்சணை விவகாரத்தையும் அப்போதே வழக்கில் சேர்த்திருப்பார்கள்.

எனவே, எப்ஐஆரில் உள்ளதுதான், சார்ஜ் ஷீட் வரை பேசும்.. சார்ஜ் ஷீட்டில் விசாரணையின் அடிப்படையில் எப்படி எழுதுகிறார்களோ, அதுதான் டிரையர் ஜட்ஜ்மென்ட்வரை பேசும்.. எனவே எப்ஐஆர் கொடுக்கும்போதே, வழக்கறிஞரை அணுகி அனைத்தையும் முறைப்படி செய்திருந்தால்தான், ரிதன்யா தரப்பு வாதத்தை முழுமையாக நிலைநிறுத்த முடியும்.

2 தரப்புமே நிரூபிக்க வேண்டும்

ஆனால், காவல்துறையிலிருந்து கூப்பிடும்போது, நாங்கள் ஆதாரத்துடன் உடனே சென்றுவிட்டோம்.. பதற்றத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை.. எங்களுக்கு கைடு செய்ய யாருமில்லை என்று ரிதன்யா குடும்பத்தினர் சொன்னதாக, தகவல்களும் வெளியாகியிருந்தன.

கவின் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.. சாட்சிகளை கலைக்கவும் வாய்ப்பு உள்ளது.. ஆனால், அனைத்துமே விசாரணையில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.. அதேபோல கவின் தரப்பில் உருட்டி மிரட்டி எது செய்தாலும், அதை நீதிமன்றம் கண்டுபிடித்துவிடும்.. கோகுல்ராஜ் வழக்கில், சுவாதி சொன்னதை அப்படித்தான் நீதிமன்றம் கண்டுபிடித்து கண்டித்தது.

கவின் சொன்னது என்ன?

அதேபோல, தன்னுடைய நண்பர்களிடம் கவின், "நாங்கள் இதற்கு பொறுப்பே கிடையாது.. ரிதன்யா மிகவும் சென்சிடிவ்.. சின்ன விஷயத்துக்கும் உணர்ச்சி வசப்பட்டுவிடுவார்.. வரதட்சணையை நாங்கள் கேட்கவுமில்லை.. இதை நாங்கள் நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.. இதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் தங்களிடம் உள்ளதால், விசாரணையின்போது சட்டப்படி நிரூபிப்போம்:" என்று சொல்லியிருக்கிறாராம். கவினின் நண்பர்கள் வட்டாரத்தில் இந்த தகவல் கிடைத்துள்ளது..

எனவே, இரு தரப்பிலும் விசாரித்து, மதிப்பிற்குரிய நீதிபதி ஐயா இதில் நியாயமான தீர்ப்பை வழங்குவார் என்று நம்புவோம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+