திருமணத்திற்கு பிறகு மீண்டும் சீரியலுக்கு வரும் ரித்திகா.. ஆனால் அந்த இடம் எதிர்பார்க்காதது.. செம ட்விஸ்ட்
சென்னை: சமீபத்தில் திருமணம் முடிந்த ரித்திகா மீண்டும் அவர் நடித்து வந்த பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வருகிறார்.
ரித்திகா கூறிய செய்தியை கேட்டு ரசிகர்கள் வாழ்த்து கூறி வரவேற்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியலில் ஊரை விட்டு கிளம்பி போன ரித்திகா இப்போது கிராமத்தில் புது கதையோடு வர இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு காணவில்லை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வந்த ரித்திகா சமீபத்தில் திருமணம் முடிந்திருந்த நிலையில் இந்த சீரியலில் இருந்தும் சில மாதங்களாக காணாமல் போயிருந்தார். இவருடைய திருமணத்திற்கு முந்தின வாரம் வரைக்கும் இவருடைய எபிசோடுகள் இருந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு எபிசோடுகளில் இவரை காட்டாமல் அமிர்தா சொந்த ஊருக்கு சென்று விட்டார் என்று மட்டும் கூறி வந்தனர். இந்த நிலையில் முதல் முறையாக மீண்டும் தான் இந்த சீரியலில் வர இருக்கிறேன் என்று வீடியோ ஒன்றை ரித்திகா வெளியிட்டு இருக்கிறார்.

தேடும் ரசிகர்கள்
சமூக வலைத்தளத்தில் ரித்திகா திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பாரா? இல்லையாயட? என்று ரசிகர்கள் அதிகமாக கேள்வி கேட்டுக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது ரித்திகா நான் மீண்டும் அமிர்தாவாக வரப்போகிறேன் என்று வெளியிட்ட பதிவு பலருடைய வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது இந்த சீரியலில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவை சுற்றியே கதை நகர இருக்கிறது. இனி எழில் மற்றும் அமிர்தாவின் திருமணம் தான் அடுத்த திருப்புமுனையாக இருக்கும் நிலையில் அமிர்தாவை காணவில்லையே என்று ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் தேடிக் கொண்டிருந்தனர்.

பெற்றோரின் உறுதியான முடிவு
பாக்கியலட்சுமி சீரியலில் வர்ஷினி அமிர்தாவின் வீட்டில் தான் எழிலை விரும்புவதாகவும் எழில் வீட்டில் அனைவரும் எங்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார்கள். அதனால் எங்களுடைய திருமணத்திற்கு அமிர்தா தான் என்னுடைய தோழியாக வரவேண்டும் என்று பேசிய அடுத்த நாளிலிருந்து ரித்திகா அந்த சீரியலில் இல்லை. எழில் தினமும் அமிர்தாவுக்கு போன் செய்து பார்த்துக் கொண்டிருந்தாலும் அமிர்தா ஃபோனை எடுக்கவில்லையே என்று பீல் பண்ணிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று எபிசோட்டில், அமிர்தாவின் பெற்றோர் இந்த திருமணம் நடைபெறாது என்று திட்டவட்டமாக கூறியதை தொடர்ந்து இன்று அவர்களும் அந்த வீட்டில் இல்லாமல் கிளம்பி விட்டனர்.

மீண்டும் வந்துவிட்டார்
அனைவரும் சொந்த ஊருக்கு போய்விட்ட நிலையில் எழில் இன்று சோகப் பாட்டோடு சுற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இனி சொந்த ஊரில் இருக்கும் அமிர்தா எபிசோடுகள் வர இருக்கிறது. இதுவரைக்கும் திருமணம் மற்றும் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் என பிசியாக இருந்த ரித்திகா மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஒரு சிலர் ரித்திகாக்கு திருமணம் முடிந்து விட்டதால் இனி நடிக்க மாட்டார் என்று கூறிவந்த நிலையில் தற்போது அதுவெல்லாம் பொய் நான் வந்து விட்டேன் என்று ரித்திகா கூட அவர் வெளியிட்ட வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications