விஜய் பற்றி ஓவராக பேசி நெட்டிசன்களிடம் சிக்கிய ரோபோ சங்கர் குடும்பம்.. ஒரு வார்த்தைக்கு இப்படியா?
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் போது நடிகர் விஜய் எதற்காக தங்களுடைய திருமண பங்க்ஷனில் கலந்து கொள்ளவில்லை என்று விளக்கம் கொடுத்திருந்தனர். அது குறித்து இணையத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் திருமணம் சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற போது பல பிரபலங்கள் அதில் கலந்து கொண்டிருந்தனர். ஆனால் நடிகர் விஜய் இந்திரஜாவின் திருமணத்திற்கு வரவில்லை. இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இப்போது ரோபோ சங்கர் குடும்பத்தினர் பதில் கொடுத்து இருக்கின்றனர்.

அந்த வகையில் ஒரு சில நடிகர்கள் தான் இணையத்தில் எப்போதும் அதிகமான சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தான் ரோபோ சங்கர். சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் அனுமதி இல்லாமல் கிளி வளர்த்ததால் அதற்கு பைன் கட்டியிருந்தார். அதற்கு பிறகு ரோபோ சங்கர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்தது பெரிய அளவில் இணையத்தில் பேசப்பட்டது.
அதற்கு பிறகு படிப்படியாக தன்னுடைய பழைய நிலைக்கு ரோபோ சங்கர் மாறி இருக்கும் நிலையில் அவருடைய மகள் என்கேஜ்மென்ட், அதைத் தொடர்ந்து திருமணம் என்று அடுத்தடுத்து ரோபோ சங்கர் குடும்பம் பற்றி இணையத்தில் செய்திகள் வந்த வண்ணமாகவே இருக்கிறது. அதிலும் ரோபோ சங்கர் மகள் என்கேஜ்மென்டில் இந்திரஜா அவருடைய அப்பா ரோபோ சங்கருக்கு உதட்டில் முத்தம் கொடுத்தது பெரிய அளவில் பேசப்பட்டது.
அதற்கு இந்திரஜா விளக்கம் கொடுத்திருந்தார். நான் குழந்தையாக இருக்கும்போது இருந்து எனது அப்பாவுக்கு இப்படித்தான் உதட்டில் முத்தம் கொடுத்து இருக்கிறேன். அப்பாவுக்கு முத்தம் கொடுப்பதில் எந்த ஆபாசமும் இல்லை, காமமும் இல்லை என்பது பார்க்கும் ரசிகர்களுக்கு ஏன் தெரியவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதை தொடர்ந்து இவருடைய திருமணம் பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்தது.
அதாவது இந்திரஜாவின் திருமணத்தில் வீடியோ ஒன்று எடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று ரோபோ சங்கரின் மனைவிக்கு உதட்டில் அவருடைய மருமகன் முத்தம் கொடுத்து இருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் பகிரப்பட்டு சர்ச்சைகளை கிளப்பிக் கொண்டிருந்த நிலையில் அதற்கும் ரோபோ சங்கரின் மருமகன் விளக்கம் கொடுத்திருந்தார்.
அதில் என்னுடைய அக்காவோடு நான் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கும் போது அவருடைய கன்னத்தில் முத்தம் கொடுக்க போனேன். ஆனால் அவர் திடீரென்று திரும்பியதால் அது உதட்டில் கொடுப்பது போன்று காட்சி ஆகிவிட்டது என்று விளக்கம் கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது ரோபோ சங்கரின் குடும்பத்தினர் எல்லோரும் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அப்போது நீங்கள் விஜய்க்கு இன்விடேஷன் கொடுக்கவில்லையா? அவர் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லையே? என்று கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு விளக்கம் கொடுத்த ரோபோ சங்கர் குடும்பத்தினர் நாங்கள் விஜய்க்கு இன்விடேஷன் கொடுக்கவில்லை என்று யார் சொன்னது? நாங்கள் அவர் கேரளாவில் ஷூட்டிங்கில் இருக்கும்போது நேரடியாக சந்தித்து கொடுத்தோம். அப்போது அவர் கோட் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார்.
என்ன கெட்டப்பில் இருந்தார் என்று நாங்கள் மட்டும்தான் பார்த்தோம். அதுபோல அங்கு அமர்ந்து அவருடைய ஷூட்டிங் பார்த்து விட்டு தான் வந்தோம். என்னை பார்த்ததும் பாண்டியம்மா என்று விஜய் கட்டி பிடித்துக் கொண்டார். ஆனால் திருமண நேரத்தில் பிஸியாக இருந்ததால்தான் அவரால் திருமணத்திற்கு வர முடியாமல் போய்விட்டது என்று இந்திரஜா கூறியிருந்தார். இது குறித்து பலரும் நெகட்டிவ் ஆகவே விமர்சித்து வருகிறார்கள்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications