வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து ரோபோ சங்கர் வெளியிட்ட வீடியோ... மாஸ் காட்டி இப்படி ஒரு பதிலா?
சென்னை: உடல் எடை குறைத்து இருந்த ரோபோ சங்கர் தற்போது விஜய் டிவியில் ஸ்டார் மியூசிக் சூட்டிங்கில் கலந்து கொண்டு இருக்கிறார்.
சூட்டிங் ஸ்பாட்டில் கெத்தாக தனுஷ் பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ செய்து ரோபோ சங்கர் வெளியிட்டு இருக்கிறார்.
வந்துட்டேன்னு சொல்லு... அதே எனர்ஜியோட வந்துட்டேன்னு சொல்லு என ரோபோ சங்கரின் பஞ்ச் வசனத்தை கேட்டு சமூக வலைத்தளத்தில் கமெண்டுகளில் ஆரவாரம் இடுகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் இந்த உலகம் நல்லா இருந்தாலும் பேசும் கஷ்டப்பட்டாலும் பேசும் என்பது ரோபோ சங்கர் உடைய வாழ்க்கையில் நல்லாவே தெரிகிறது. என்னதான் காமெடி செய்து பலரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தாலும் ரோபோ சங்கருக்கு சில மாதங்களாக அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.
பிரச்சனைகள் இல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தால் அடுத்தடுத்து சமூக வலைத்தளத்தில் ரோபோ சங்கர் பெயர் அடிபட்டுக் கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவமான திறமையால் பலருடைய மனதைக் கவர்ந்த ரோபோ சங்கர் தற்போது திரைப்படங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ரோபோ சங்கர் மட்டுமல்லாமல் அவருடைய மகள் மற்றும் மனைவி எல்லாருமே திரைத் துறையில் பிரபலங்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ரோபோ சங்கர் உடல் எடை குறைந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருந்தனர். இதுவரைக்கும் கொஞ்சம் பூசின மாதிரி இருந்த ரோபோ சங்கர் திடீரென உடல் எடை குறைந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
அதனாலேயே ரோபோ சங்கருக்கு அப்படியா அல்லது இப்படியா என்று விதவிதமான கருத்துகளும் குவிந்து வந்தது. ரோபோ சங்கருக்கு குடித்து உடல்நல குறைவு ஏற்பட்டு இருக்கிறது அதனால் தான் அவர் மெலிந்து போய்விட்டார் என்று சிலர் பக்கத்தில் இருந்து பார்த்தது போல கமெண்ட்களை கொட்ட, இன்னும் ஒரு சிலர் இல்லை இல்லை அவருக்கு மஞ்சள் காமாலை வந்து விட்டது அதனால் தான் இவர் இப்படி இருக்கிறார் என்று கருத்து கூறி வந்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து வெளியாகி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரோபோ சங்கருடைய மனைவி பிரியங்காவும் என்னுடைய கணவருக்கு ஒன்றும் உடல்நலத்திற்கு ஆகவில்லை. அவர் திரைப்பட வாய்ப்புக்காக உடல் எடையை குறைத்திருக்கிறார் என்று விளக்கம் கொடுத்திருந்தார். அதுபோல ரோபோ சங்கர் உடைய நண்பரான போஸ் வெங்கட் எல்லோருக்கும் உடல் நலப் பிரச்சினைகள் வரதான் செய்யும். அதேபோல லேசாக ரோபோ சங்கருக்கும் ஏற்பட்டது. விரைவில் ரோபோ சங்கர் பழைய நிலைக்கு வந்து விடுவார் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று ரோபோ சங்கருடைய மகளான இந்திரஜா சங்கர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய அப்பாவின் கெத்தான வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார். அதில் ரோபோ சங்கர் மீண்டும் விஜய் டிவியில் ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சிக்கான சூட்டிங்கில் கலந்துகொண்டு எடுத்த வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு அவர் திரும்பி வந்து விட்டார் என்று பதிவு வெளியிட்டிருக்க அதை அதிகமான ரசிகர்கள் பாராட்டி லைக் கொடுத்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications