ஊசி போட்டு இருக்கேன்.. சாப்பாடுல கை வைக்கும் போது கொடுமை படுத்துறான்! ரோபோ சங்கரின் திடீர் வீடியோ
சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகள் திருமணத்திற்கான பங்க்ஷன்கள் களைகட்டி இருக்கிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரோபோ சங்கர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தான் சூட்டிங் போன இடத்தில் தனக்கு ஏற்படும் அவலங்கள் குறித்து அந்த வீடியோவில் ரோபோ சங்கர் பேசி இருக்கிறார்.
ஊட்டியில் சூட்டிங் போன இடத்தில் 6 மணிக்கே எழுந்து பனியில் தங்களை நடிக்க சொல்கிறார்கள். ஆனாலும் சாப்பாடு தராமல் கொடுமைப்படுத்துகிறார்கள் என்கிற ரீதியில் அந்த வீடியோவில் ரோபோ சங்கர் பேசியிருக்கிறார். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் ரோபோ சங்கர் சமீபத்தில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தனியாக உட்கார்ந்து புலம்பி கொண்டு இருக்கிறார். அப்போது அவரை யாரோ வீடியோ எடுக்கிறார்கள். அதில் என்னங்க இதையெல்லாம் வீடியோ எடுத்துட்டு இருக்கீங்க? ஊட்டில சூட்டிங் என்றால் காலையில் எத்தனை மணிக்கு கூப்பிடனும்...? இது பனி காலம் மெட்ராஸ்லையே கண்ட இடங்கள் எல்லாம் குளிருது.
இங்க ஊட்டியில் காலையில் 6:00 மணிக்கே சூட்டிங்கிற்கு ஆடம்ஸ் கூப்பிடுகிறார். நான் மட்டுமா நான் ஸ்ரீமன் அண்ணன், தம்பி ராமையா, கோவை சரளா, மாறன், கிங்ஸ்லி என எல்லாரையும் இவங்க இப்படித்தான் உட்கார வச்சு இருக்காங்க. இங்க பாருங்க என் கையில இன்ஜெக்ஷன் போட்டு இருக்கேன். நான் பொய் சொல்ல மாட்டேன். எனக்கு பொய் சொல்லுவது பிடிக்கவே பிடிக்காது. நான் இன்ஜெக்ஷன் போட்ட கையோடு இங்க வந்து உட்கார்ந்து இருக்கேன்.
வெள்ளத்துல என் கால்ல அடிபட்டு இருந்து அந்த காலோட தான் நான் இங்க இருக்கேன். ஆனா இங்க என்னன்னா காலையில் 6:00 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரை ஷூட்டிங் எடுக்கணுமாம். ஏன் உங்களுக்கு பகல்ல மேட்ச் பண்ணி எடுக்க தெரியாதா? ஆனாலும் டைட்டில் கேட்கிறேன் அதையும் சொல்ல மாட்டேங்குறான். டயத்தை கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறான்.
சாப்பாடை வாயில வைக்கும் போது தான் கூப்பிடுறான். ஏன் தான் இப்படி பாடா படுத்துறானோ? இங்க என்ன ஆஸ்காருக்கா படம் எடுக்கிறான்? ஆடம்ஸ் தானே படத்தை எடுக்கிறான்..? என்ன பண்ண நானும் தம்பி ஆசைப்பட்டு கூப்பிட்டான்னு வந்துட்டேன். அந்த பொம்பள பாவம் பக்கத்து ஹாஸ்பிடலில் இருந்து வந்து எனக்கு ஊசி போட்டுட்டு போகுது.
நானும் ஊசி போட்டுட்டு தான் நடிச்சிட்டு இருக்கேன். கோவை சரளா அம்மாவை எல்லாம் ஸ்ட்ரக்சர்ல வச்சு கூட்டிட்டு வர்றாங்க. ஸ்ரீமன் அண்ணனுக்கு இ...ன்னு ஒரு பக்கமா இழுத்துட்டு போயிருக்கு. தம்பி ராமையா தத்திதத்தி வராரு. இப்படி ஒவ்வொரு ஆளையா கூட்டிட்டு கூட்டிட்டு வந்து நடிக்க வச்சிட்டு இருக்கீங்களா டயத்துக்கு சோறு போட்டு படுக்க வைக்க வேண்டாமா? இந்த பனியில...
கொஞ்ச நேரம் கேப் விட்டா அந்த குரங்கு வந்துடுது என்று புலம்பி இருக்கிறார். இந்த வகையில் ரோபோ சங்கர் ரீசன்டாக நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படத்தை ஆடம்ஸ் தான் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷனுக்காக ரோபோ சங்கர் இப்படி எல்லாம் பேசினாரா? எந்த கேள்விகள் இணையத்தில் எழுந்து வருகிறது.












Click it and Unblock the Notifications