Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் மனைவி செய்த செயல்! அதிரடி கருத்து சொன்ன அறந்தாங்கி நிஷா! செம பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வாலும், உடல்மொழியாலும் ரசிகர்களின் மனதை வென்றவர். மதுரை மண்ணில், கோயில் திருவிழாக்களில் உடலெங்கும் சில்வர் பெயிண்ட் அடித்து ரோபோ போல நடனம் ஆடியதன் மூலம், ரோபோ சங்கர் என்ற பெயருடன் தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். ஆனால்,உடல் நல குறைபாடு காரணமாக 46-வது வயதில் அகால மரணமடைந்தது, திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய இறுதி ஊர்வலத்தில் ரோபோ சங்கரின் மனைவி டான்ஸ் ஆடியது பெரும் விவாதங்களை சந்தித்து வரும் நிலையில் அதற்கு அறந்தாங்கி நிஷா பதிலடி கொடுத்திருக்கிறார்.

Robo Shankar Aranthangi Nisha

ஒரு கலைஞனின் பயணம்

கலக்கப்போவது யாரு, அசத்தப்போவது யாரு போன்ற விஜய் டிவி, சன் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் வரும் "அன்னைக்கு காலையில 6 மணி" என்ற வசனத்தின் மூலம் வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்த அந்த வசனம், மீம் டெம்ப்ளேட் ஆக இன்றும் இணையத்தில் பிரபலமாக உள்ளது. மக்களை மகிழ்ச்சியாக வைத்திருந்த ஒரு கலைஞன், தனது தனிப்பட்ட வாழ்க்கைச் சூழலால் இப்படி ஒரு துயரமான முடிவைச் சந்தித்தது, பலரையும் கண்கலங்க வைத்தது.

துயரமான நடனம்

ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவரது மனைவி பிரியங்கா, கணவரின் உடலுக்கு முன் கண்ணீருடன் நடனம் ஆடியது, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. "ஒரு பெண் எப்படி இறந்த உடலுக்கு முன் இப்படி ஆடலாம்?", "இது கலாச்சாரத்திற்கு எதிரானது", "இப்படி ஆடியிருக்கக் கூடாது", கூத்தாடிங்க எல்லா விஷயத்துலயும் பிரபலமாகுறாங்க எனப் பல எதிர்மறை விமர்சனங்கள் பிரியங்காவை நோக்கி வந்தன.

ஆனால், இதற்குப் பதில் அளிக்கும் விதமாக, விஜய் டிவி காமெடி பிரபலம் அறந்தாங்கி நிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உணர்வுபூர்வமான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். "ஒருத்தர் தவறிட்டா, அவரைப் பத்தி நல்ல கருத்துக்களை மட்டும் பேசுறதுதான் மனுசனுக்கு அழகு" என்று தனது பேச்சைத் தொடங்கினார்.

"தன்னோட கணவர் இறப்புல அந்தப் பொண்ணு ஆடுனது தப்பா? இல்ல ஒரு பொண்ணு ஆடுனதே தப்பா? நாம எல்லோரும் சொல்றோம், காதலை எப்படி வேணா வெளிப்படுத்தலாம்னு. ஆனா, வருத்தத்தை அவள் இப்படி வெளிப்படுத்தினது தப்பில்லை. அவங்க காதலிச்ச மேடையே ஒரு நடன மேடைதான். அந்த மேடையிலதான் அவங்க காதலும், வாழ்க்கையும் ஆரம்பிச்சுது. அந்த இறுதிப் பயணத்துல, காதலோடு சேர்த்து, தன் நடனத்தையும் அவருக்காகக் கொடுத்தது, ஒரு நல்ல காதலுக்கு அழகுதான். இதை ஒரு தவறாகப் பார்க்கக் கூடாது" என்று அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

மற்ற பிரபலங்களின் பதிலடி

இதேபோல, ரோபோ சங்கரின் மனைவிக்கு ஆதரவாகப் பல பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர். "ஒருத்தர் தன்னோட துக்கத்தை எப்படி வெளிப்படுத்துவாங்கன்னு நாம தீர்மானிக்க முடியாது. அவங்க மனம் உடைஞ்சு, என்ன செய்றாங்கன்னு அவங்களுக்கே தெரியாது. அந்த நேரத்துல, ஆடுறதோ, அழுறதோ, கத்துறதோ அவங்களோட தனிப்பட்ட சோகத்தோட வெளிப்பாடு. அதை விமர்சிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை" என்று சில பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.

"ரோபோ சங்கரும், பிரியங்காவும் இணைந்து பல மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியிருக்கிறார்கள். ஒருவேளை, அந்த நடனம் மூலம்தான் அவர் தனது கணவரிடம் கடைசியாக விடை பெற்றிருக்கிறார். அது ஒரு கலையின் வெளிப்பாடாக இருக்கலாம்" என்றும் சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ரோபோ சங்கரின் மறைவு, அவரது மனைவிக்கும், குடும்பத்திற்கும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தை விமர்சிப்பது, மனிதநேயமற்ற செயல். பிரியங்காவின் நடனம், அவளது துயரத்தின் வெளிப்பாடாக இருக்கலாம், அல்லது தனது கணவன் விரும்பிய கலையின் மூலம் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதாக இருக்கலாம். இதுபோன்ற இக்கட்டான தருணங்களில், ஒருவரை விமர்சிப்பதை விட, ஆறுதல் சொல்வதுதான் மனித குலத்திற்கு அழகு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+