வயசுப்பொண்ணு நடிகை ரோஜா ரமணியா இது? என்னவொரு துணிச்சல்? கழுத்தில் நிஜமான பாம்பை போட்டுட்டாங்களாமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகை ரோஜா ரமணி, தன்னுடைய திரைப்பட அனுபவங்களை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.. அதில், குழந்தையிலேயே நிஜ பாம்புடன் நடித்தது பற்றியும் விலாவரியாக கூறியிருக்கிறார். ரோஜா ரமணி தந்த இந்த பேட்டிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

சென்னையில் பிறந்த ரோஜா ரமணி தெலுங்கு திரைப்படங்களில் பிரபலமாக இருந்தவர்.. தமிழ், மலையாளம் படங்களிலும் ஏராளமாக நடித்திருக்கிறார். தமிழில் இவர நடித்த இரு மலர்கள், துலாபாரம், சாந்தி நிலையம், குழந்தை உள்ளம், எதிரொலி, வயசுப்பொண்ணு, வண்டிக்காரன் மகன், ஆயிரம் வாசல் இதயம் உள்ளிட்ட படங்கள் பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்றவை.. இவர், தன்னுடைய முதல் படமான பக்த பிரஹலாதா (1967) படத்திற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய விருதினை பெற்றிருந்தார்.

Television Roja Ramani actress roja ramani

ரோஜாரமணி: இந்த படத்திற்கான வாய்ப்பு தனக்கு எப்படி கிடைத்தது? முதன்முதலில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானது எப்படி? என்பது குறித்து IndiaGlitz என்ற யூடியூப் சேனலுக்கு ரோஜாரமணி பேட்டி ஒன்றை தந்துள்ளார்..

அதன் சுருக்கம்தான் இது: "GVG என்று மிகப்பெரிய சினிமா பத்திரிகையாளர், என் அப்பாவுக்கு நண்பர்.. அவரது உதவியால் என் அப்பாவும், அவருடன் இணைந்து பணியாற்றி கொண்டிருந்தார்.. எனக்கு 4, 5, வயது இருக்கும்போது, வீட்டு வாசலில் ஒருநாள் தெருவில் பிள்ளைகளுடன் எல்லாரும் விளையாடிட்டு இருந்தோம்..

அப்போது ப்ளூ கலரில் ஒரு வேன் வந்து, சினிமாவில் நடிக்க பிள்ளைகளை தேவை என்று கூறி, எங்கள் எல்லாரையும் வேனில் ஏற்றிக்கொண்டு ஸ்டுடியோ போக முயன்றது. ஆனால் திடீரென என்னை மட்டும் கீழே இறக்கிவிட்டுட்டு அந்த வேன் சென்றுவிட்டது. என்னை மட்டும் இறக்கிவிட்டுட்டதால் நான் அழ ஆரம்பித்துவிட்டேன்.

ஏவிஎம் ஸ்டுடியோ: அந்த நேரம், GVG சார், என் அப்பாவை டூவீலரில் வீட்டில் இறக்கிவிட வந்தார். நான் வீட்டு வாசலில் அழுதுகொண்டிருப்பதை பார்த்து என்ன ஏதென்று விசாரித்தார். அதற்கு என் அம்மா, "வேனில் இருந்து கீழே இறக்கிவிட்டுட்டுங்களாம், சென்னையில் உள்ள ஸ்டுடியோவுக்கு எல்லாம் எங்களை ஒருநாள் கூட்டிட்டு போகக்கூடாதா அண்ணா? நாகேஸ்வரராவ், என்டிஆர், எம்ஜிஆர்த, சிவாஜியை நேரில் பார்க்க ஆசையா இருக்கு.. இந்த குழந்தையையும் கூட்டிட்டு போய் காட்டலாம்" என்றார்.

உடனே அவரும் எங்களை ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு அழைத்து சென்றார்.. அப்போதுதான் ஏவிஎம்மில் பிரகலாதா என்ற பிரம்மாண்ட படத்தை எடுக்க ஏவிஎம் திட்டமிட்டு கொண்டிருந்தார்.

மேக்கப் டெஸ்ட்: ஸ்டுடியோவில் ஒருவர், என்னை பார்த்ததுமே தூக்கி கொண்டு போய், ஸ்டுடியோவிலேயே உள்ள போட்டோ ஸ்டுடியோவில் போட்டோ எடுத்தார்.. பிறகு என்னிடம் பாடுவியா? ஆடுவியா? என்று கேட்டார்.. உடனே மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள். அப்பறம் எங்களை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.

2 நாள் கழித்து ஏவிஎம்மில் இருந்து வண்டி வந்தது.. பாப்பாவை கூட்டிட்டு வர சொன்னாங்க என்றார்கள்.. அப்போதுதான் என்னுடைய போட்டோவை ஏவிஎம் செட்டியாரிடம் காட்டியிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. பிறகு, பிரகலாதா கெட்டப்பில் போட்டோ எடுக்கப்பட்டது.. இதை பார்த்த செட்டியர், 'குழந்தை நல்லா இருக்காள், ஆனால் படத்தில் பாம்பு, யானை, சிங்கம் எல்லாம் இருக்கே? பயந்துடுவாளே.. முதல்ல டெஸ்ட் எடுங்க, அப்புறம் பார்க்கலாம்ன்னு சொல்லிட்டார்.

நிஜ பாம்பு: அதற்கு பிறகு நிஜமான பாம்பை என் கழுத்தில் போட்டார்கள்.. இதை பார்த்ததுமே என் அம்மா மயக்கம் போட்டு கீழே விழுந்துட்டாங்க. ஆனாலும் என் கழுத்தில் பாம்பை போட்டு, பாட்டு சொல்லி தந்து எனக்கு பயிற்சி தந்தார்கள். நான் அதை சரியா செய்ததுமே, செட்டியாரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதுக்கு பிறகே என்னை செட்டியார், அந்த படத்துக்கு ஓகே செய்தார் என்றெல்லாம் அந்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் ரோஜாரமணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+