அச்சச்சோ.. பிரியங்கா கால்ல முள்ளு குத்திருச்சா.. ரசிகர்கள் கவலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியலில் கதாநாயகியாக நடித்தாலும் இன்ஸ்டாகிராமில் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரி போட்டோவை பார்த்த அவரது ரசிகர்கள் அவரது காலுக்கு என்ன ஆச்சு என்று தெரியாமல் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரியங்கா, தெலுங்கில் அறிமுகமாகி பல படங்களில் நடித்திருந்தாலும் அவரது சொந்த மொழியில் அந்த அளவிற்கு இவருக்கு வரவேற்பு கிடைக்காததால் அதிலிருந்து தமிழில் சின்ன ரோலாக இருந்தாலும் பரவாயில்லை என்று நடிக்க ஆரம்பித்த படம்தான் தீயா வேலை செய்யணும் குமாரு.

இந்தப் படத்தில் ஹன்சிகாவின் பிரண்டாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் சிறிய வேடமாக இருந்தாலும் ஓரளவு ரசிகர்கள் மனதில் இவரது முகம் பதிந்தது.

 ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தாலும் அது அவ்வளவு பெரிய வரவேற்பு கொடுக்காததால் தனது கவனத்தை இன்ஸ்டாகிராம் மற்றும் டப்ஸ்மாஷ்களில் மேல் செலுத்தி வந்தார். இந்த நிலையில் இவருக்கு ரோஜா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இவரும் ஓகே சொல்லிவிட்டார். அதுவும் ஹீரோயினி என்றதும் இவருக்கு டபுள் சந்தோசம் தான்.

 ரோஜா பிரபலம்

ரோஜா பிரபலம்

இவர் இந்த சீரியலில் நடிக்க ஆரம்பிக்கும் போது இந்த அளவிற்கு தான் பிரபலமாவோம் என்று அவர் நினைக்கவில்லை. அந்த அளவிற்கு டாப் சீரியல்களில் ஒன்றாக இருக்கும் இவர் நடிக்கும் சீரியல் ரோஜா என்பது இவருக்கு பெருமையாக இருக்கிறது. இவர் சப்பியாக, அழகாக இருப்பதால் நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரம் பெரிதாகி வந்து கொண்டிருக்கிறது.

 போட்டோஷூட்

போட்டோஷூட்

சீரியல்களில் மட்டும் கவனத்தை செலுத்தாமல் இணையத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பதால் ரசிகர்களும் இவரை ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அதை இணையதளத்தில் அப்லோட் பண்ணுவதால் பல ரசிகர்கள் இவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள். நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் காதலும் இவரைப் பற்றிக் கொண்டது. ராகுல் என்பவரை காதலித்து நிச்சயதார்த்தம் வரை முடிந்து துரதிர்ஷ்டவசமாக அது பிரேக்கப் ஆகி விட்ட.

 கல்யாணத்தை நோக்கி

கல்யாணத்தை நோக்கி

இருந்தாலும் அவரது காதலை இவரால் மறக்க முடியவில்லையாம். அதையும் பல நிகழ்ச்சிகளில் அவரே கூறியிருக்கிறார். சீக்கிரமாக நாங்கள் திருமணம் செய்துகொள்வோம் என்று கூறியிருக்கிறார். இவரது காதலர் மலேசியாவில் இருப்பதால் தங்களால் அடிக்கடி மீட் பண்ண முடியவில்லை என்றும் என்னால் அவருடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை. இதனால் எங்கள் இருவருக்கும் கொஞ்சம் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது. அதுவும் இன்னும் கொஞ்ச நாளில் தீர்ந்து விடும் என்றும் கூறியிருக்கிறார்.

 ரொம்ப ஓபன் டைப்

ரொம்ப ஓபன் டைப்

சில நடிகைகள் கடைசி வரைக்கும் இந்த மாதிரி விஷயங்களை வெளியில் சொல்லாமல் மூடி வைத்து திருமணத்தின் போது தான் வெளியே சொல்வார்கள். அதற்கு முன்பு பல கிசுகிசுப்பு ஏற்பட்டாலும் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று மழுப்பலாக சமாளித்து கொண்டிருப்பார்கள் ஆனால் இவர் அந்த மாதிரி இல்லை. பிரியங்காவின் காதலரும் இவரை உருகி உருகி தான் காதலித்து காத்துக் கொண்டிருக்கிறாராம். என்கேஜ்மெண்ட் முடிந்ததும் அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

போட்டோ

போட்டோ

பிரியங்கா ரோஜா சீரியலில் பிசியாக இருப்பதாலும் மற்றும் இவரது குடும்பம் மிடில்க்ளாஸ் குடும்பம் என்பதால் இவரை சார்ந்து இருக்கிறார்கள். அதனால் பினான்ஸ் லெவலில் கொஞ்சம் ரெடி ஆகி விட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று இவர் விருப்பம் தெரிவித்து இருக்கிறாராம். தற்போது இவர் இணையதளத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறாராம்.

 காயம் பட்டிருச்சா

காயம் பட்டிருச்சா

ஒற்றைக் காலில் மருதாணி ஓடும் ஒற்றைக் காலில் கட்டுடன் இவர் கொடுத்திருக்கும் கலக்கல் போசு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களிடம் வைரலாக பரவி வருகிறது. ஆனால் அவர் ரசிகர்கள் கேட்ட காலில் என்ன ஆச்சு என்ற கேள்விக்கு இன்னமும் பதில் சொல்லவில்லை. ஒரு வேளை ரோஜாவை முள் குத்தி அதனால் காயம் ஏற்பட்டிருக்குமோ என்று ரசிகர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+