Roshini : பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு திடீர் கல்யாணம்… ஒன்று கூடிய பிரபலங்கள்! லீக் ஆன போட்டோஸ்
சென்னை: விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ரோஷினி ஹரிப்ரியன், (Roshini Haripriyan Surprise Wedding) எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கு உண்மையிலேயே இனிய அதிர்ச்சியாக மாறியுள்ளது. காதலர் தினத்துக்கு அடுத்த நாளும், அதே நேரத்தில் சிவராத்திரி தினத்திலும் திருமணம் நடந்திருக்கிறது என்பதால் இந்த கல்யாணம் குறித்து சமூக வலைதளங்களில் கூடுதல் பேச்சு எழுந்திருக்கிறது.
இந்த திருமணம் மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றிருக்கிறது. ஆனால் சின்னத்திரை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பாரதி கண்ணம்மா சீரியல் குடும்பமே அங்கு ஒன்று கூடியிருந்தது.

அந்த அது சீரியலில் வில்லியாக கலக்கிய ஃபரீனா, கண்ணம்மாவுக்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா அறிவுமணி, ஹீரோவாக நடித்த அருண் பிரசாத் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அனைவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக வைரலாகி வருகிறது.
திருமண மண்டபத்தில் ரோஷினி ட்ரெடிஷனல் உடையில் மிகவும் அழகாக இருந்ததாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். சீரியலில் பார்த்த கண்ணம்மாவை விட இன்னும் வேற மாதிரி மணமகளாக ஜொலிக்கிறார் என்றே பலரும் பாராட்டி வருகின்றனர்.
ரோஷினியின் வாழ்க்கை துணை யார் என்ற கேள்விக்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது. அவருடைய கணவர் கே.எஸ். சுந்தரமூர்த்தி - இவரும் சினிமா துறையைச் சேர்ந்தவர்தான். இதனால் "திரை உலகிலேயே காதல் மலர்ந்திருக்கிறதா?" என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சின்னத்திரையில் கண்ணம்மாவாக குடும்ப பெண்களின் மனதில் இடம் பிடித்த ரோஷினி, இப்போது வாழ்க்கையின் புதிய கட்டத்தை தொடங்கியிருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. "திரையில் சந்தோஷமாக இருக்கணும் என்று நினைத்தோம்... இப்போது வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருக்கணும்" என்று ரசிகர்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்து வீடு தோறும் அறிமுகமானவர் ரோஷினி. அந்த ஒரு கதாபாத்திரமே அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. ஆனால் திடீரென அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார் அதற்கு பிறகு 2022-ஆம் ஆண்டு குக் வித் கோமாளி (சீசன் 3) நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது கலகலப்பான இயல்பால் இன்னும் நெருக்கமான முகமாக மாறினார்.

சின்னத்திரையைத் தாண்டி சினிமாவிலும் கவனம் செலுத்திய ரோஷினி, மெட்ராஸ் மேட்டினி மற்றும் கற்கி படங்களில் நடித்தார். 2024-ல் வெளியான கருடன் திரைப்படத்தில் சூரியின் தங்கையாக நடித்தது அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்தார்.
இப்படி தொடர்ந்து தனது கரியரில் அடுத்தடுத்த படிகளை எடுத்து வந்த ரோஷினி, எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் இன்று திருமணம் செய்து கொண்டிருப்பது ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
ரோஷினியின் இந்த திடீர் திருமணம் - சீரியல் நட்சத்திரங்கள் கலந்து கொண்ட உற்சாகம் - சிவராத்திரி தினத்தின் சிறப்பு - சினிமா துறையைச் சேர்ந்த மாப்பிள்ளை... எல்லாம் சேர்ந்து இந்த கல்யாணத்தை சின்னத்திரை ரசிகர்களின் ஹாட் டாப்பிக்காக மாற்றியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications