கரு விழி பார்வையால் சுண்டியிழுக்கும் ரோஷினி...தத்தளிக்கும் ரசிகர்கள்
சென்னை: கூந்தல் காற்றில் பறக்க கலக்கலான பார்வையால் ரசிகர்களின் மனதை கவர்ந்து இழுத்து இருக்கும் ரோஷ்னி ஹரிப்ரியனை பார்த்ததும் ரசிகர்களின் மனதும் பறக்கிறதாம்.
கருமேகம் சூழ்ந்து இருக்கும் நிலாவைப் போல பிரகாசமான தன்னுடைய முக அழகை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்து விட்டார்.
ஏக்கமான பார்வையை காட்டி ரசிகர்களை ஏக்கம் அடைய வைத்திருக்கும் கண்ணம்மாவை பார்த்ததும் ரசிகர்கள் கலாய்ப்பதற்காக ஓடோடி வருகின்றனர்.

ஹார்ட்டின்கள் பறக்குது
எத்தனை முறை பார்த்தாலும் குறையாத பேரழகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரோஷ்னி ஹரிப்ரியன் தற்போது தன்னுடைய ரசிகர்களை கதிகலங்க வைக்கும் வகையில் ஒரு சில போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்ததும் ரசிகர்கள் பலரால் கமெண்டுகளை அனுப்பாமல் இருக்க முடியவில்லையாம். அதுவும் எந்த மாதிரி இவரை வைப்பது என்று தெரியாமல் ஹார்டின்களையே பறக்கவிட்டு வருகிறார்கள் இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

அப்போவே அப்படி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலின் மூலம் முதல் முறையாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கும் ரோஷ்னி ஹரிப்ரியன் சீரியலுக்கு வருவதற்கு முன்பே சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக தான் இருந்து கொண்டிருக்கிறார். இவர் ஐடி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் மாடலிங் போட்டோ ஷூட் இவரே எடுத்து எடிட் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். அவருடைய இன்ஸ்டாகிராம் போட்டோக்கள் மூலமாகத்தான் இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

குறைகள் எல்லாம் மாறிப்போச்சு
முதல் சீரியலில் இந்த அளவிற்கு பிரபலம் ஆவார் என்று அவரும் நினைக்கவில்லை. அவருடைய ரசிகர்களும் நினைக்கவில்லை. முதல்முறையாக இவர் சீரியல் அறிமுகமாகும்போது கருப்பாகவும், எண்ணெய் வடிந்த முகத்தோடு, தலையை இறுக்கி பின்னிக்கொண்டு நடித்திருந்தார். அதனை பார்த்த பல ரசிகர்கள் இவரா கதாநாயகி என்றெல்லாம் இவரைப் பார்த்து கலாய்த்து வந்தனர். ஆனால் தற்போது நிலைமை அப்படியே மாறிவிட்டது. பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி பல பெண்களுக்கு ரோல் மாடலாகவும் மாறிவிட்டார்.

விழிகளில் ஒரு வானவில்
என்னதான் இவர் சீரியலின் கதாநாயகியாக மாறிவிட்டாலும் தான் வளர்ந்து வந்த சமூக வலைத்தளத்தை மறந்துவிடவில்லை. ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் எல்லாம் தன்னை அழகாக அலங்கரித்து போட்டோசூட் எடுப்பதுதான் இவருடைய பொழுதுபோக்காம். தான் எடுக்கும் போட்டோக்களை தானே எடிட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். லேட்டஸ்டாக இவர் வெளியிட்ட போட்டோக்கள் செம வைரலாக பரவி வருகிறது. அதுவும் "விழிகளில் ஒரு வானவில்" எனும் கேப்ஷன் போட்டு இவருடைய அழகினை காட்டியிருப்பது வேற லெவல் தான் இருக்கிறது. இந்த கண் அழகை பாத்து தான் இவருக்கு கண்ணம்மா என்று பெயர் வைத்துவிட்டார்கள் போல,அந்த அளவிற்கு கண்ணாலேயே பேசுறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications