இடுப்புல கையை வச்சு.. இப்படி பார்த்தா எப்படி.. கண்ணம்மாவிடம் விழுந்த ரசிகர்கள்!
சென்னை: என்னதான் மாடர்ன் உடை உடுத்திக்கொண்டு பலரும் போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டிருந்தாலும் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு ரோஷ்னி ஹரிப்ரியன் புடவையில் பின்னிப் பெடலெடுக்கிறார்.
சேலையில் நம்ம ஊரு பொண்ணுங்க வந்து நின்னாலே தனி அழகுதான். அதுவும் ரோஷ்னி மாதிரி எடுப்பாய், தெற்றுப்பல் தெரிய இடுப்பில் கையை ஊன்றி கேஷுவலாக பார்த்தால் மனசு படீர்னு விழாமல் இருக்குமா!
அப்படி ஒரு காந்தப் பார்வையால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு விட்டார் ரோஷ்னி ஹரிப்ரியன் என்ற கண்ணம்மா!

ஆசை கண்ணம்மா
பொதுவாக பலரும் செல்லமாக யாரையும் அழைக்க வேண்டும் என்றால் கண்ணம்மா என்று அழைப்பார்கள் .ஆனால் ரோஷ்னி ஹரிப்ரியன் அனைவருக்கும் செல்லப் பெண்ணாக வலம் வந்து கொண்டிருப்பதால் இவரை அனைவரும் கண்ணம்மா என்று அழைத்து வருகின்றனர் .பாரதியின் கண்ணம்மாவாக மட்டுமல்லாமல் ரசிகர்களின் கண்ணமாவாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு தற்போது ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துவருகிறது .

திறமைக்கு ரசிகர்கள்
இவரின் தனித் திறமையை பார்த்து அசந்து போன ரசிகர்கள் இவருக்காக கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் பலரும் அறிந்ததுதான் .இந்த சீரியலை பார்த்து ரசித்தவர்களை விடவும் இதற்கு மீம்ஸ் போட்டு அதனை கலாய்த்தவர்கள்தான் பலர் . ஆனாலும் தற்போது இந்த சீரியலுக்கு பலரும் அடிமையாகி மாறிவிட்டார்கள்.

அழகிய ரோஷ்னி
அதற்கு காரணம் அதில் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷ்னி ஹரிப்ரியன் . பக்கத்து வீட்டு பொண்ணு போல இருக்கும் இவருடைய முக அழகைப் பார்த்ததும் பிடித்துப் போன ரசிகர்களுக்கு எந்த மேக்கப்பும் இல்லாமல் கருப்பாக இருப்பதும் பேரழகு தான் என கருப்பு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் ரசிகர்களின் மனதில் தனி இடத்தில் சிம்ம சொப்பனம் போட்டு அமர்ந்து இருக்கிறார்.

முதலிலேயே முத்திரை
இவர் இந்த சீரியலில் தான் முதன்முதலில் அறிமுகம் ஆகியிருக்கிறார் என்று சொன்னால் யாரும் நம்ப முடியாது .அந்த அளவிற்கு நடிப்பில் அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்திருக்கும் இவருக்கு இந்த சீரியலுக்கான வாய்ப்பு இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் கிடைத்திருக்கிறது .இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது இடையில் கிடைக்கும் நேரத்தில் போட்டோஷூட்டில் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்.

வாய்ப்பு தந்த இன்ஸ்டா
மாடலாக தானே போட்டோஸ் எடுத்து அதனை எடிட் செய்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வந்திருக்கிறார் .இவருக்கு ஆரம்பத்தில் இருந்த ரசிகர்களை விடவும் நாள் போகப்போக ரசிகர்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றனர் .கண்ணியமான உடையினாலும் அதிக கவர்ச்சி இல்லாத காரணத்தினாலும் கூட ரசிகர்களின் மனதில் தனித்து இருந்து வருகிறார். முதலில் இந்த சீரியலின் கதாநாயகி இவர்தான் என தெரிந்ததும் கூட நடிப்பவர்களும் சூட்டிங் பார்க்க வந்தவர்களும் கூட அதிர்ச்சி அடைந்து வந்திருக்கின்றனர்.

இவரா நடிக்கப் போறார்
இந்த பொண்ணா ஹீரோயினியாக நடிக்க போகிறது என்றுதான் பலரும் கேட்கின்றனர் .அதுவும் இவர் காதுபடவே அவர்கள் பேசியதைக் கேட்டு இவர் மனம் கலங்கி இருந்தாலும் அதனை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தன்னுடைய திறமையை நிரூபிப்பதே முதல் வேலை என கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார் .இவரை முதலில் அலட்சியமாக பார்த்தவர்கள் தான் தற்போது இவருடைய வளர்ச்சியை பார்த்து ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

இதற்குத்தானே ஆசைப்பட்டார்
இதற்காகத்தானே இவரும் ஆசைப்பட்டார் அவருடைய ஆசைப்படியே எல்லாம் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலை தாண்டியும் இவர் ரொம்பவே அமைதியான பெண்ணாக இருந்திருக்கிறார். அதனால்தான் இந்த சீரியல் டீமுடன் முதலில் செட் ஆவதில் இவருக்கு கொஞ்சம் சிக்கல் இருந்திருக்கிறது. ஆனால் தற்போது நன்றாக பழகி விட்டதால் சூட்டிங் இல்லாத நேரத்தில் அனைவரும் சேர்ந்து லூட்டி அடித்து பல ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

பரீனாவுடன் கலாட்டா
சீரியலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் அந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் பரினா இவரை பாடாய் படுத்தி எடுத்துவிடுவார் .ஆனால் அதுவும் ஜாலியாகத்தான் இருக்கிறது என்று இவர் கூறியிருக்கிறார் . ஊரடங்கு காரணமாக சூட்டிங் இல்லாமல் இருந்த இவர்கள் மீண்டும் சீரியல் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்ததும் சூட்டிங்கிற்கு கிளம்பி விட்டார்கள் .

சிரிப்பில் விழுந்த ரசிகர்கள்
ஆனாலும் கிடைக்கும் நேரத்தில் ஒரு போட்டோ சூட்டை போட்டு விடலாம் என யோசித்து சிம்பிளாகவே சிரித்தபடி பல போட்டோக்களை எடுத்து விட்டார். பல நடிகைகள் போட்டோ சூட்டில் கலக்கிக் கொண்டு இருந்தாலும் நான் யாரையும் மாதிரி இல்லை என் வழி தனி வழி என்ன கேஷுவலாக இவர் எடுத்த போட்டோக்கள் தான் தற்போது செம வைரலாக இன்ஸ்டாகிராமில் சுற்றிவருகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications