1 கோடி கூட சாய் தன்ஷிகா கிட்ட இல்லை.. நோ வரதட்சணை.. விஷாலுடன் காதல் பற்றியது இப்படித்தான்: பிரபலம்
சென்னை: 15 ஆண்டுகளுக்கும் மேலாக விஷால் அவர்களை தெரியும். நானும் அவரும் வரும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம். ஊடகத்தினர் அனைவரும் எங்களை வாழ்த்த வேண்டும் என்று சாய் தன்ஷிகா மேடையிலேயே அறிவித்தார். இதை விஷாலும் ஆமோதித்ததையடுத்து, இருவருக்கும் திரையுலகில் வாழ்த்துக்கள் குவிகிறது. இந்நிலையில், இவர்களின் காதல் குறித்தும், விஷாலின் குடும்பம் குறித்தும் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார்.
Metro Mail என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், பல படங்களில் நடித்தும், தனி முத்திரை பதிக்கவில்லை சாய் தன்ஷிகா.. கிடைத்த படங்களில் நடித்து வந்தார்.. அதிலும் சில படங்களில் முறையாக அவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை..

இந்த சம்பளம் வாங்கி வராத விவகாரத்தில் விஷால் உதவியதால், அவர்களுக்குள் நல்ல நட்பு இருந்து வந்துள்ளது.. 47 வயதாகிவிட்டதால், திருமணம் செய்ய வேண்டிய அவசியம் வந்துள்ளது.
"லட்சுமி"கரமான பெண்ணை மணக்க போவதாக சொன்னார்.. இறுதியில், லட்சுமி பெயர்கொண்ட 2 நடிகைகளும் விஷாலைவிட்டு விலகினார்கள்.. ஆந்திர பெண் ஒருவருடன் நிச்சயார்த்தம் வரை சென்று நின்றது..
திருமணம் தேதி
நடிகர் சங்கம் கட்டி முடிக்கப்பட்டதும்தான் திருமணம் செய்வதாக அறிவித்து, இப்போது திருமண தேதியை அறிவித்துள்ளார்.. கட்டிட திறப்பு விழாவும் விரைவில் நடக்க உள்ளது. யோகி டா விழாவில், ஆகஸ்ட் 29ம் தேதி எனுற அறிவித்துள்ளார்.
குருபெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி எல்லாமே விஷாலுக்கு சாதகமாக இருக்கிறது.. எனவே திருமணம் நிச்சயம் நடக்கும்..விஷால் வீட்டில் அனைவருமே ஜாதகம் பார்ப்பவர்கள்.. அந்த நல்ல நேரம் இப்போது விஷாலுக்கு அமைந்துள்ளது..
பாடி பில்டர் - மதுப்பழக்கம்
ஒருவர் எவ்வளவுதான் பாடி பில்டராக இருந்தாலும் மது பழக்கத்துக்கு விழுந்துவிட்டால், அது ஆரோக்கியத்தை குலைத்துவிடும். 5 வருடம் முன்பு வரை கெட்டவனாக இருந்து, தற்போது மாறியிருக்கிறேன் என்று விஷாலே சொல்லுகிறார்.. எனினும், ஏற்கனவே இருந்த பாதிப்பு இப்போதும் அவருக்கு உடலில் ரியாக்ட் செய்யலாம்.. கூவாகம் விழாவில் மயங்கி விழுந்தபோது, காலையில் சாப்பிடாமல் வந்துவிட்டதாகவும், மேடையில் சுவாசிக்க காற்று வசதி இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
கிரானைட் பிசினஸ்
விஷாலின் அப்பா கிரானைட் பிசினஸ் செய்பவர்.. சரத்குமாரை வைத்து ஐ லவ் இந்தியா என்ற படத்தை எடுத்தார்.. அது பிரம்மாண்டமான படம் என்று அப்போதே பேசப்பட்டது. காஷ்மீரிலேயே சென்று அந்த படத்தை எடுத்தார்கள். ஆனால், அந்த படம் ஓடாமல் நஷ்டமாகிவிட்டது. பிறகு மூத்த மகன் நடிக்க வந்தார்.. அவரும் ஒரு நடிகையை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். இப்போது இளைய மகனும் நடிகையையே திருமணம் செய்ய போகிறார்.
மூத்த பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சிலர், திருமணம் குறித்து தவறான தகவல்களை அளிக்கிறார்கள்.. குறிப்பாக, 1000 கோடி வரதட்சணையுடன் விஷாலை தன்ஷிகா திருமணம் செய்ய போவதாக சொல்கிறார்கள்.. ஒரு கோடி ரூபாய்கூட சாய் தன்ஷிகா கையில் இருக்காது. பிறகு எப்படி 1000 கோடி? இதுபோன்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.
வரதட்சணை கிடையாது
விஷால், சாய் தன்ஷிகா இருவருமே சம்பாதிக்கக் கூடியவர்கள்.. இருவர் சம்பாதித்த பணம், இருவர் கையிலும் இருக்கும். இது ஒரு காதல் திருமணம் என்பதால் வரதட்சணை என்பது கிடையாது. சாய் தன்ஷிகா தஞ்சாவூர் தமிழச்சி ஆவார்.. வறுமைக்கோட்டுக்கு கீழே இருந்தவர் என்பதால், சினிமாவில் நடிக்க போவதாக சொல்லி சென்னைக்கு வந்தவர்.
விஷாலிடமும் இப்போது அந்த அளவுக்கு பணம் இல்லை.. படங்கள் வரிசையாக அவருக்கு தோல்வி.. ஏகப்பட்ட கடன்கள் இருக்கிறது. அதனால்தான் பெரிய தனவந்தர்களோ, பெரிய நடிகைகளோ, கோடீஸ்வர வாரிசுகளோ திருமணம் செய்ய முன் வரவில்லை. தன்ஷிகாவுக்கு அப்படி எந்த கடனும் இல்லை.. இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சாய் தன்ஷிகா" என்று தெரிவித்துள்ளார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications