ரூ.500 கோடிகளில் வசூல் ரெட்ரோ? சூர்யா படம் 1000 கோடி அடிக்குமா? இஷ்டத்துக்கு நம்பரை போட்டு?: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1000 கோடி ரூபாய் ரெட்ரோ அடிக்கும் என்ற ஜோசியத்தை சொன்னது யார் என்று தெரியவில்லை.. ஆனால் இதுபோன்ற ஆரூடங்களை நம்ப முடியாது.. 1000 கோடி வசூல் ஆகும், 500 வசூல் ஆகும் என்று சம்பந்தப்பட்ட படங்களில் பணியாற்றியவர்கள்தான் சொல்ல வேண்டுமே தவிர, போறவங்க வர்றவங்க எல்லாம் சொல்லக்கூடாது என்று மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கருத்து தெரிவித்துள்ளார்.

"பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ரெட்ரோ படம் உருவாகியிருக்கிறது.. 300 தியேட்டர்கள் ரெட்ரோ படங்களுக்கு போவதாக தெரிகிறது.. ஆனால், கடைசி நேர புரமோஷன்கள், இந்த படத்துக்கு வரவில்லை..

Television Rs1000 crore Retro 1000

அதேபோல, ரெட்ரோ என்ற அந்த டைட்டிலே, மிகப்பெரிய மைனஸ் என்று நினைக்கிறேன். பாமர ரசிகர்களுடன் இந்த படத்துக்கு கனெக்ட் ஆக முடியாது.. புல்லிங் பாயிண்ட் எனபது படத்தின் டைட்டிலை குறிக்கும்.. ஆங்கிலத்தில் டைட்டில் இருப்பது பெரிய மைனஸாக பார்க்கிறேன்.

டிரெண்டாக்கி விடுகிறார்கள்

ஒருசில யூடியூபர்கள், எந்தபடம் ரிலீஸானாலும் 500 கோடி வசூலாகும், 1000 கோடி ரூபாய் வசூல் என்று டிரெண்டாக்கி விடுகிறார்கள்.. இப்படியே 10 சேனலில் பேசி, அந்த லிங்குகளை சம்பந்தப்பட்ட நடிகருக்கும் அனுப்பிவிட்டு, அந்த நடிகர்களின் குட்புக்கில் இடம் பெற முயற்சிக்கிறார்கள்.. பிறகு அவர்களது கால்ஷீட்டுக்காக அவர்களிடம் போய் நிப்பார்கள்.

ஆனால், இந்த விவரம் எதுவுமே தெரியாத சாதாரண மக்கள், யூடியூப் வீடியோக்களை பார்த்துவிட்டு, நிஜமாகவே 500 கோடி, 1000 கோடி வசூல் என்று நினைத்து கொள்கிறார்கள்.. அதேபோல, சில ரசிகர்களும் ஆர்வ கோளாறு காரணமாக, இப்படி கிளப்பி விடுகிறார்கள். இப்படித்தான் குட்பேட் அக்லி படம், முதல்நாளே 50 கோடி வசூல், உலக அளவில் 300 கோடி வசூல், என்று பதிவிட்டார்கள்..

1000 கோடி வசூலாகும்

எந்தவிதமான புரிதலும் இல்லாமல், இவர்களாகவே ஒரு நம்பரை போட்டுவிடுகிறார்கள்.. ரெட்ரோ பொறுத்தவரை, வசூல் சாதனை படமாக எனக்கு தோன்றவில்லை.

1000 கோடி ரெட்ரோ அடிக்கும் என்ற ஜோசியத்தை சொன்னது யார் என்று தெரியவில்லை.. ஆனால் இதுபோன்ற ஆரூடங்களை நம்ப முடியாத.. 1000 கோடி வசூல் ஆகும், 500 வசூல் ஆகும் என்று சம்பந்தப்பட்ட படங்களில் பணியாற்றியவர்கள்தான் சொல்ல வேண்டும்


சம்பந்தப்பட்டவர்கள் சொல்ல வேண்டும்

"நான் இதுவரை நடித்த படங்களிலேயே, ரெட் ரோ சூப்பர் ஹிட்டாகும், இதுவரை சொல்லப்படாத விஷயம் ஒன்று இந்த படத்தில் சொல்லப்பட்டுள்ளது, அதனால் 500 கோடி வசூலாகும்" என்று சூர்யா சொன்னால் அதை நாம் பரிசீலிக்கலாம்.

"பேட்ட படத்தில்கூட வராத திருப்தி, எனக்கு ரெட்ரோ படத்தில் கிடைத்துள்ளதால், இந்த படம் 500 கோடி வசூலாகும்" என்று டைரக்டர் கார்த்தி சுப்புராஜ் சொன்னால், அதை நாம் பரிசீலிக்கலாம்..

ஆனால் புரமோட் செய்து, மக்களின் கவனத்தை திசை திருப்புவர்களின் பேச்சை எப்படி எடுத்துக் கொள்வது? அப்படியே 1000 கோடி ரூபாய் வசூல் செய்தால், அது தமிழ்நாட்டுக்குதான்.. ஆனால், 1000 கோடி வசூல் செய்யக்கூடிய கன்டன்ட் அவரவர் படங்களில் இருக்கிறதா? எனபதையும் கவனித்து பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டு தியேட்டர்கள்

1000, 500 என்று கிளப்பி விடுபவர்களுக்கு சினிமாவின் வியாபாரம் தெரியுமா? தமிழ் தியேட்டர்கள் எத்தனை? அதிகபட்சம் எத்தனை தியேட்டர்களில் படம் வெளியாகும்? எத்தனை தியேட்டர்கள் தமிழகம் அளவில் வசூல் ஆகும்? ஷேர் ஆக எவ்வளவு கிடைக்கும்? தியேட்டர்களின் வருமானம் எவ்வளவு? என்ற விவரங்கள் அனைத்தும் தெரிந்தவர்களால் மட்டுமே 500, 1000 கோடி என்று கணிக்க முடியும்..

ஆனால் தியேட்டர்கள் குறித்து அனைத்து விவரங்களையும் தெரிந்த நபர்கள், 1000 கோடி வரும் என்று கண்டிப்பாக சொல்லவே மாட்டார்கள்.. ஏனென்றால் அது சாத்தியமே இல்லை என்று அவர்களுக்கே தெரியும்.. சோஷியல் மீடியாவில் இப்படி கிளப்பிவிடுவது, அது தன்னைதானே ஏமாற்றிக் கொள்வதுடன், மக்களையும் சேர்த்து ஏமாற்றிக் கொள்வதாகும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+