500 கோடியை உதறியவராச்சே நடிகை சமந்தா.. இப்ப சொந்த கம்பெனி துவங்கி.. மா இண்டி பங்காரம் தரும் ஹேப்பி
சென்னை: 'ஓ! பேபி' படத்தின் டைரக்டர் நந்தினி ரெட்டி மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார்.. அவரது இயக்கத்தில் மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கிறார் சமந்தா.. 'த பேமிலிமேன்' இயக்குநர்களில் ஒருவரான ராஜ், கிளாப் அடித்து தொடங்கி வைத்துள்ள 'மா இண்டி பங்காரம்' படத்தின் படப்பிடிப்புதான் தற்போது ஆரம்பமாகியிருக்கிறது. இதுகுறித்து கூடுதல் செய்தியும் தெலுங்கு ரசிகர்களுக்கு வெளியாகியிருக்கிறது. அது என்ன?
கடந்த சில வருடங்களில் சோஷியல் மீடியாவில் அதிகமாக டிரோல் செய்யப்பட்ட பிரபலங்களில் ஒருவர்தான் நடிகை சமந்தா.

சாதாரண குடும்ப பின்னணி கொண்ட சென்னை பெண் சமந்தா, கல்லூரிக் காலத்தில் மாடலிங் உலகுக்குள் நுழைந்து, பிறகு நடிகையாகி சில படங்களில் மட்டுமே தலைகாட்டி, பிறகு தெலுங்குப் பட உலகில் நட்சத்திரமாக உருமாறியவர்..
நாகார்ஜுனா வீட்டில் மருமகளாக சமந்தா போனதுமே, மொத்த பேரும் வியந்து பார்த்தனர். இந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணம் நடைபெற்றது. பிறகு திடீரென விவாகரத்து அறிவிப்பும் உடனே வெளிவந்தது. இந்த டைவர்ஸ்க்கு முழுகாரணமே சமந்தாதான் என்றார்கள்.
4000 கோடி சொத்து
காரணம், நாகார்ஜூனாவுக்கு 4000 கோடி சொத்து உள்ளதால், ஜீவனாம்சம் கேட்பதற்காகவே திருமணத்தையும் செய்தும், டைவர்ஸும் செய்கிறார் என்று தெலுங்கு மீடியாக்கள் பரபரப்பை கிளப்பின. . எனவே, சமந்தா 500 கோடி ஜீவனாம்சத்தை வாங்காமல் விடமாட்டார் என்றும் கொளுத்தி போட்டன..
எனினும், இந்த விமர்சனங்கள் எதற்குமே சமந்தா வாய் திறக்கவில்லை. அமைதியாகவே இருந்தார். ஜீவனாம்சம் தேவையில்லை நாக சைதன்யா தரப்பில், எவ்வளவு ஜீவனாம்சம் வேண்டும்? என்று கேட்டதற்கு, "உன் காசு 10 பைசா எனக்கு வேண்டாம்" என்று துணிந்து சொன்னார் சமந்தா.
ஜீவனாம்சம் ரூ.500 கோடி
இப்படியொரு வார்த்தையை கேட்டதுமே, வியப்புற்ற தெலுங்கு மீடியாக்கள் சமந்தாவை உச்சத்தில் தூக்கி வைத்து கொண்டாட துவங்கியது.. அப்போதிருந்து கூடுதலான கிரேஸ் சமந்தாவுக்கு எகிறியது. அதற்கு பிறகு திரையுலகில் புதுப்புயலென பொங்கி பிரவாகமெடுத்தார்..
தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.. பாலிவுட்டில் வெளியான சிட்டாடல் தொடரில் நடித்திருந்தார். தற்போது மேலும் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார்.
இதையடுத்து, பிறகு சொந்தமாக படத்தயாரிப்பிலும் இறங்கினார்.. 2 வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் (Tralala Moving Pictures) என்கிற என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை அறிவித்திருந்தார்.
பூரித்து சொன்ன சமந்தா
"புதிய சிந்தனைகள் அடங்கிய கன்டென்டுகளை முன்னிலைப்படுத்துவதே இதன் நோக்கம். நமது சமூக கட்டமைப்பின் வலிமையானதும், சிக்கலானதுமான தன்மைகள் கொண்ட கதைகளை இந்தத் தளம் ஊக்குவிக்கும். அதேசமயம் படைப்பாளிகள் உண்மையான, அர்த்தமுள்ள உலகளாவிய படைப்புகளை வெளிப்படுத்த இந்தத் தளம் உதவியாக இருக்கும்" என்று சமந்தா அப்போது நம்பிக்கையுடன் பதிவிட்டிருந்தார்
பிறகு புதுமுகங்கள் அதிகளவில் இடம்பெற்றிருக்கிற 'சுபம்' என்ற தெலுங்கு படத்தையும் தயாரிப்பதாக சொல்லப்பட்டது. சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸின் கீழ் தயாராகியிருக்கும் "சுபம்" படத்தை பிரவீன் காந்த்ரேகுலா இயக்கியிருக்கிறார். இதில் சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
மா இண்டி பங்காரம்
இந்நிலையில் 'மா இண்டி பங்காரம்' படத்தின் ஷூட்டிங் இப்போது ஆரம்பமாகியிருக்கிறதாம்.. சமந்தா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார்.. ஓ! பேபி' படத்துக்குப் பிறகு நந்தினி ரெட்டியும், சமந்தாவும் இதில் இணைகிறார்கள்.
இதில், குல்ஷன் தேவ்வய்யா, திகாந்த் , கவுதமி, மஞ்சுஷா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது துவங்கப்பட்டுள்ளது.
வலிமையான கதை
இதுகுறித்து சமந்தா சொல்லும்போது, "இந்த படத்தின் கதையை கேட்டதுமே என்னுடைய மனதை கவர்ந்துவிட்டது.. ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இதைத் தயாரித்து நடிப்பது மிகவும் வித்தியாசமான உணர்வை ஏற்படுத்துகிறது.. காதல், உறவு மற்றும் வலிமையை அடிப்படையாகக் கொண்ட கதையம்சம் கொண்ட படமாக உள்ளது.. நந்தினி ரெட்டியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சி" என்று பூரித்து சொல்கிறார் சமந்தா.
மா இண்டி பங்காரம்' படத்தின் ஷூட்டிங்கில் சமந்தா நடித்து வருவதுதான், தற்போது தெலுங்கு, தமிழில் உள்ள சமந்தா ரசிகர்களுக்கு குஷியை தந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications