ரூ.75 கோடி சிவகார்த்திகேயன் தொட்ட உச்சம்.. நடிகர் தனுஷூக்கு இது தேவையா? உடைத்து பேசிய பிரபலம்
சென்னை: சிவகார்த்திகேயன், தனுஷ் இடையே உள்ள பிரச்சனை என்ன, எப்படி கருத்து வேறுபாடு வெடித்தது என்பது குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.. சந்தானத்தை சினிமாவில் சிம்பு அறிமுகப்படுத்திவிட்டு போகட்டும் என்று அமைதியாக விட்டிருந்தால் தனுஷூக்கு இப்படியொரு நிலைமையே வந்திருக்காது என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Public Wing என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை செய்து கொண்டிருந்தார் சிவகார்த்திகேயன்.. அதற்கு முன்பு சந்தானம் விஜய் டிவியில் பிரபலமானார்.. எனவே, சிம்பு, சந்தானத்தை சினிமாவுக்கு அழைத்து வாய்ப்பு தந்தார்.. இதற்கு பிறகு சந்தானம் மிகப்பெரிய காமெடி நடிகராகவும், தற்போது ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார்..

சிம்பு, தனுஷூக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு போட்டி இருந்து வருவதால், சிம்பு சந்தானத்தை அறிமுகப்படுத்தியதால், தனுஷ் சிவகார்த்திகேயனை சினிமாவுக்கு அறிமுகம் செய்ய முடிவு செய்தார். ஆனால் அதற்குள் மெரினா என்ற படத்தில் சிவகார்த்திகேயனை இயக்குனர் பாண்டிராஜ் அறிமுகப்படுத்திவிட்டார்..
சிம்பு - தனுஷ் போட்டா போட்டி
பிறகு, 3 என்ற படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பு தந்தார்.. அதாவது சிம்பு சந்தானத்தை காமெடி நடிகராக கொண்டுவந்ததுபோல, தனுஷ் சிவகார்த்திகேயனையும் காமெடி நடிகராக கொண்டுவரவே நினைத்து, அதன்படியே 3 படத்தில் நடிக்கவும் வைத்தார்..
சிவகார்த்திகேயனும், விமல் அளவுக்கு ஒரு ஹீரோவாக வரவேண்டும் என்றுதான் நினைத்து வந்தாரே தவிர, இந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு கிடைக்கும், ஸ்டாராக வருவோம், 75 கோடிக்கு சம்பளம் வாங்குவோம் என்றெல்லாம் எந்த காலத்திலும் நினைத்து பார்க்கவேயில்லை.
3 படத்தில் சான்ஸ்
3 படத்தில் காமெடிக்கு பிறகு, அடுத்தடுத்த படங்கள் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்புகள் கிடைக்கவும், மீண்டும் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து படம் எடுக்க தனுஷ் முடிவு செய்தார்.. அப்படித்தான் எதிர்நீச்சல் படம் ஆரம்பமானது.
ஆனால், அப்போதே தனுஷிடம் நிறைய பேர் வந்து அறிவுரை சொன்னார்கள். "ஹீரோவான நீங்கள் ஒரு காமெடியனை அறிமுகப்படுத்தலாம், ஆனால், காமெடியனை ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டாம், ஒரு பெரிய நடிகராக இதை செய்ய வேண்டாம்" என்று சொல்லி உள்ளார்கள்..
அதற்கு தனுஷ் அவர்களிடம்" சிவகார்த்திகேயன் தன்னிடம் அன்பாகவும், மரியாதையாகவும் இருப்பதால், அவரை அடுத்தடுத்து வளர்த்து விடுகிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.
தம்பி பாசம்
சிவகார்த்திகேயன் மீது தம்பி போன்ற பாசம் காரணமாக தனுஷ், எதிர்நீச்சல் படத்தை எடுத்தார்.. அந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நல்ல பெயர் கிடைத்தது.. இதையடுத்து, சிவகார்த்திகேயன் தனக்கு அடுத்தடுத்த படங்கள் செய்ய தேதிகள் தருவார் என்று தனுஷ் நம்பினார்..
சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டாம், இது விஷப்பரீட்சை என்று தனுஷை சுற்றியுள்ளவர்கள் அவரை எச்சரித்தது போல, சிவகார்த்திகேயனை சுற்றியுள்ளவர்களும், நீங்கள் ஏன் தனுஷ் படத்திலேயே நடித்து கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் மார்க்கெட் லெவல் இன்று உயர்ந்துவிட்டது, மற்ற இயக்குனர்கள் படங்களிலும் நடியுங்கள் என்று தூபம் போட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன் ஹீரோ
அதன்படியே சிவகார்த்திகேயனும், மற்ற இயக்குனர்கள் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், அந்த படங்கள் சில பிரச்சனைகளிலும் சிக்கின.. இதற்கு பிறகு சொந்தமாக படத்தை எடுத்து ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்து, சினிமா தயாரிப்புக்குள் சிவகார்த்திகேயன் வந்தார். ஆனால், அதிலும் நஷ்டத்தை சந்தித்தார். இதற்காக வெளிப்படங்களில் அதிகமாக நடிக்க துவங்கினார்.
அதேபோல தனுஷூம் தயாரிப்பு செய்து பல படங்கள் எடுத்தார்.. அந்த படங்களும் நஷ்டம் அடைந்தன.. இதனால் பல சிக்கல்களை தனுஷ் சந்திக்க நேரிட்டது.
அந்த நேரத்தில் போயஸ் கார்டனில் நீண்ட காலமாக காலி இடம் இருந்தது.. அந்த இடத்தை வாங்க வேண்டாம் , வாஸ்து சரியில்லை என்று பலரும் சொல்லியும், அந்த இடத்தை தனுஷ் பல கோடி தந்து வாங்கினார்.. தனுஷூம், ஐஸ்வர்யாவும் சேர்ந்துதான், அந்த வீட்டிற்கான பூமி பூஜையை துவங்கினார்..
தனுஷூக்கு இது தேவையா
ஆனால், இதற்கு பிறகு சிறிது நாளிலேயே தம்பதிக்குள் பிரச்சனை வெடித்து, இருவரும் பிரிந்துவிட்டனர். வாஸ்து சரியில்லையோ? என்ற பயம் லேசாக தனுஷூக்கு இருந்தாலும், 150 கோடி ரூபாய் செலவு செய்து அந்த வீட்டை சிறப்பாக கட்டி முடித்துவிட்டார். ஏற்கனவே படம் எடுத்த நஷ்டம், வீடு கட்டுவதற்கான வாங்குவதற்கான கடன் என நிதி சிக்கலில் சிக்கி கொண்டார்.
பிறகுதான், தமிழ், இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் என தனுஷ் அதிகமாக நடித்தார்.. இப்போது கடனையெல்லாம் அடைத்துவிட்டார்.. வெற்றிப்படங்களையும் தற்போது தந்து வருகிறார்.
எனினும், சந்தானத்தை சிம்பு அறிமுகப்படுத்திவிட்டு போகட்டும் என்று அமைதியாக விட்டிருந்தால் தனுஷூக்கு இந்த நிலைமையே வந்திருக்காது. இன்று சிவகார்த்திகேயன் போட்டி நடிகராக வந்ததுடன், தனுஷைவிட அதிக சம்பளம் பெறும் நடிகராகவும் உயர்ந்துவிட்டார். இந்த சிக்கல் எல்லாம் தேவையா? " என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications