Run Serial: விகடன் டெலிவிஸ்டாஸ் ரன் வேகம் எடுக்குமா?
சென்னை: சன் டிவியின் நேற்றைய புதுவரவு சீரியல் ரன். இந்த சீரியலை எடுத்த எடுப்பில் அதிக செலவில் பிரமாண்டமாய் தயாரித்து இருக்கிறது. பாங்காங்கில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து நேற்று முதல் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
மற்றபடி நமது ஊரில் நடக்கும் கதையாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது. ஹீரோயின் ஹாஸ்பிட்டாலிட்டி மெயிட்டெயின் படிப்பில் இன்டெர்ன் செய்வதற்காக பாங்காங்கில் உள்ள புகழ்பெற்ற ஆஸ்பிடலில் சேர்கிறார்.இன்டெர்ன் முடிந்து அவர் ஊருக்கு வர இருக்கிறார்.
இந்த நேரத்தில் ஆஸ்பத்திரில நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்பதால் இன்டெர்ன் முடிச்ச சான்றிதழ் இவருக்கு கிடைக்காமல் போகிறது. எல்லா இடங்களிலும் எல்லாமே நடக்கும் போல!

மக்களை ரசிக்க வைக்க
டிவி சீரியல், சீரியல் என்று மோகத்தில் இருக்கும் மக்கள் ஒரு பக்கம். எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரி சீரியல்கள் பார்க்க வேண்டி இருக்கிறதே என்று சலித்துக் கொள்ளும் மக்கள் ஒரு பக்கம். என்று பலவித எண்ண குவியலோடு சீரியல் ஆர்வலர்கள் இருக்க, அவர்களை திருப்தி படுத்த, ரசிக்க வைக்க புதுப்புது யுக்திகளை கையாள வேண்டி இருக்கிறது. அந்த விதத்தில் ரன் சீரியல் பாங்காங்க் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

கரப்பான் பூச்சி
ஹாஸ்பிடல் கேன்டீன் சாப்பாட்டில் கரப்பான் பூச்சி விழுந்துருது. இதை வைத்து அவர் கன்னா பின்னான்னு கத்த, இதை ஹீரோயின் சமாளிக்கும் விதத்தை அருமையாக காமிச்சு இருக்காங்க .ஆனால், அதுவும் தப்புதான்.இது மாதிரி தவறுகள் அதுவும் ஹாஸ்பிடல் கேன்டீனில் சத்தியமாக நடக்கவே கூடாது. இது மாதிரி சும்மா உங்களை டெஸ்ட் பண்ணினோம் என்கிற சமாளிப்புக்களும் கூடவே கூடாது.

பிரைம் டைம் ஸ்லாட்
சன் டிவி ரன் சீரியலுக்கு பிரைம் டைம் ஸ்லாட்டை வழங்கி உள்ளது. கதை முழுக்க ஹீரோயின் ஆஸ்ப்பிட்டாலிட்டி மெயின்டெயின் பண்ணுவதாக இருக்கும் என்பதால், அதை ஒரு கடமையாக நினைத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒரு நாளைக்கு ஒரு சில நிமிடங்களாவது ஹாஸ்பிடாலிட்டி அட்மினிஸ்ட்ரேஷன் முக்கியத்துவம் பற்றி கதையைக் காண்பித்தால் நன்றாக இருக்கும்.

வேகம் ரன்
ஆரம்பித்த முதல் நாளில் ரன் சீரியல் ஓகே என்றாலும் இன்னும் பெயருக்கு ஏற்றாற் போல கதையில் வேகம் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். விகடன் டெலிவிஸ்டாஸ் சீரியல்களில் இதுவும் ஒரு சீரியல், எண்ணிக்கை அதிகமானது என்கிற போக்கில் நகர்ந்தால் மக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து விடும். ஏற்கனவே அந்த நிலையில்தான் இருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு ரன் சீரியலைக் கொண்டு போனால் வெற்றி நிச்சயம்.












Click it and Unblock the Notifications