சரிகமப வின்னர் திவினேஷ்க்கு டி ராஜேந்தர் கொடுத்த பரிசு.. மகன் சிம்பு பற்றி கண்கலங்க சொன்ன வார்த்தை
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் சரிகமப சீனியர் 5 நிகழ்ச்சியில் மீண்டும் பாட வந்திருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் டி ராஜேந்தர் திவினேஷுக்கு பரிசு கொடுத்திருந்தார். அதோடு தன்னுடைய மகன் சிம்பு பற்றி கண்கலங்க பேசி இருந்தார்.
டி ராஜேந்திரனுக்கு அறிமுகமே தேவையில்லை. இயக்குனராக பல நடிகர்களை இயக்கி இருக்கிறார். அதோடு தான் இயக்கிய பல ஹிட் திரைப்படங்களில் அவரே நடித்திருக்கிறார். அதுபோல அவருடைய மகன் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகிறார். இப்போது கதாநாயகனாக கலக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் தக் லைஃப் திரைப்படத்தில் சிம்புவின் நடிப்பை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

டி ராஜேந்தர் வருத்தம்
இப்படியான நிலையில் தான் தன்னுடைய மகனுக்கு சின்ன வயதில் கிடைக்காத அங்கீகாரம் குறித்து டி ராஜேந்தர் சரிகமப நிகழ்ச்சியில் கண்கலங்க பேசி இருந்தார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர்களுக்கு என்று தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஜூனியர்களுக்கான சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக திவினேஷ் வெற்றி பெற்றிருந்தார்.
நடுவரான டி ராஜேந்தர்
திவினேஷ் பாடிய பழைய பாடல்கள் இப்போது உள்ள தலைமுறையும் கேட்டு ரசிக்க வைத்தது. அதுபோல சமீபத்தில் சீனியர்களுக்கான சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இதில் நடுவராக டி ராஜேந்தர் கலந்து கொண்டார். அப்போது திவினேஷ் இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக வந்திருந்தார். அவருடைய பாடலை கேட்டு உருகிப்போன டி ராஜேந்தர் மேடைக்கு வந்து திவினேஷை பாராட்டி இருந்தார். நான் ரொம்ப பேசுவேன், ஆனால் இப்போது திவினேஷ் பாட்டை கேட்டு பேச முடியாமல் வாயடைத்து போய் இருக்கிறேன்.

திவினேஷுக்கு ராஜேந்தர் கொடுத்த பரிசு
இப்போது உள்ள குழந்தைகளின் திறமையை பார்க்கும்போது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. என்னுடைய பையன் சிம்புவும் இதுபோல பொடியனா இருக்கும் போதே அருமையா பாடுவார். அப்போதெல்லாம் இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கிடையாது. இதுபோன்று பாடும் குழந்தைகளை அப்போது தொலைக்காட்சியில் ஊக்கப்படுத்தாததால் தான் என்னுடைய மகனை என் படத்திலேயே பாட வைத்து அழகு பார்த்தேன். அதில் இருந்து அவன் படிப்படியாக வளர்ந்து இன்று ஒரு நிலைக்கு வந்திருக்கிறான்.
டி ராஜேந்தர் பாராட்டு
ஆனால் இது போல ஒரு மேடை அப்போதே சிம்புவுக்கு கிடைத்திருந்தால் இப்போது இருக்கும் நிலைமையை விட அப்போது அதிகமான ஒரு உயரத்திலும் இருந்திருப்பான் என்று நினைக்கிறேன் என்று பேசும்போதே டி ராஜேந்திரன் கண் கலங்கி குரல் கரகரத்தது. ஆனாலும் திவினேஷுக்கு தன்னுடைய சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து பரிசாக கொடுத்திருந்தார். இந்த பணத்தை நீ வைத்துக் கொள். நீ இன்னும் நிறைய சாதிக்கணும், உன்னால் இந்த கலை துறையில் நிறைய மாற்றம் வரணும். நீ சிறந்த பாடகராக வளரனும் என்று திவினேஷை டி ராஜேந்தர் பாராட்டி இருந்தார்.












Click it and Unblock the Notifications