எங்க வீட்டில் விசேஷம்.. எளிமையாக கொண்டாடிய நடிகை சாயா சிங்.. சந்தோசத்தில் கணவர் தெய்வமகள் சீரியல் நடிகர்
சென்னை: திருடா திருடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை சாயா சிங் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதி இன்று மகிழ்ச்சியாக தங்களுடைய சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நடிகர் தனுஷ் நடித்த திருடா திருடி திரைப்படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்த நடிகை சாயா சிங் இப்போது சின்னத்திரையிலும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். மன்மத ராசா பாட்டுக்கு இவர் போட்ட ஆட்டம் 90ஸ் கிட்ஸ்கள் பலரையும் ஆட வைத்தது. இந்த படம் வெளியான சமயத்தில் டான்ஸ் தெரியாதவர்கள் கூட இந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இருக்கிறார்கள்.

காதல் திருமணம்
திருடா திருடி திரைப்படத்திற்கு பிறகு சாயா சிங் தொடர்ந்து சினிமாவில் ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அடுத்தடுத்து நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு பிரபலத்தை கொடுக்கவில்லை. இதனால் சின்னத்திரை பக்கம் திரும்பி இருக்கிறார். அதே நேரத்தில் நடிகர் கிருஷ்ணாவை தான் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். கிருஷ்ணா சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் கதாநாயகனாக நடித்தவர்தான்.
தெய்வமகள் பிரகாஷ்
தெய்வமகள் சீரியலுக்கு பிறகு கிருஷ்ணா ஒரு சில சீரியல்களில் நடித்து இருந்தார். ஆனால் கிருஷ்ணாவிற்கும் அதற்குப் பிறகு நடித்த சீரியல்களில் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. சுந்தரி சீரியலில் கிருஷ்ணாவின் கேரக்டர் சிறப்பாக இருந்தாலும் தெய்வமகள் சீரியலுக்கு தகுந்த மாதிரி இவருடைய நடிப்பை வெளிகாட்டும் கேரக்டர் இவருக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதுதான் ரசிகர்களின் வருத்தமாக இருக்கிறது.

ஜீ தமிழ் சீரியல் கதாநாயகி
அதுபோல கிருஷ்ணா ஒரு சில திரைப்படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மீண்டும் தெய்வமகள் பிரகாஷாக கிருஷ்ணா கம் பேக் கொடுக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். அதேபோல சாயா சிங் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கெட்டிமேளம் சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சாயாசிங் பதிவு
இந்த நிலையில் சாயாசிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் தன்னுடைய பிறந்தநாளுக்கு கணவர் கொடுத்த ஸ்பெஷல் கிப்ட் பற்றி மகிழ்ச்சியோடு பகிர்ந்து இருக்கிறார். அதோடு அவர் வெளியிட்ட பதிவில் "என் அன்பான கணவரால் மறக்க முடியாததாக மாற்றப்பட்ட ஒரு எளிய கொண்டாட்டம். அவர் மூன்று நாட்களில் இந்த ரோஜா கொத்தை எனக்காக உருவாக்கினார். இது ஒரு சிறந்த பரிசு" என்று குறிப்பிட்டு இருக்கிறார். சாயா சிங்கிற்கு சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications