சாய் அபயங்கருடன் மோதலா? நடந்தது இதுதான்! ஆதாரம் இருந்தால் மியூசிக் பண்றதை நிறுத்திடுறேன்! சாம் சி.எஸ் ஆதங்கம்
சென்னை: சாய் அபயங்கர் தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியாக இருக்கும் இசையமைப்பாளராக வலம் வருகிறார் அவர் இசையமைத்த படங்கள் இதுவரை வெளியாகாதிருந்தாலும், சூர்யா, அல்லு அர்ஜுன், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் உட்பட எட்டு படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இந்த நிலையில் சாய் அபயங்கருக்கு எதிராக தான் பிஆர் வேலை செய்து வருவதை நிரூபித்தால் தான் இசை அமைப்பதையே நிறுத்தி விடுகிறேன் என இசையமைப்பாளர் சாம் சிஎஸ் கூறியிருக்கிறார்.
பிரபல பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி தம்பதியரின் மகனாக இருப்பதால் சாய் அபயங்கருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று கூறப்படுகிறது. இதனால் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, சாம் சி.எஸ் போன்ற திறமையான இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்புகள் குறைவதாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல மீம்ஸ்களும் பரவின.

இசையமைப்பாளர் சாம். சிஎஸ் பேட்டி
இந்த நிலையில் சாம் சி.எஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அப்போது, நெகடிவ் பி.ஆர் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். மக்கள் தன்னுடைய திறமையை உணர்ந்து கருத்து தெரிவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று அவர் கூறினார். மேலும், சிலர் தானே இதுபோன்ற பதிவுகளைப் போட்டு விளம்பரம் தேடுவதாகக் கூறுவதை மறுத்து, அப்படி நிரூபிக்கப்பட்டால் சினிமாவிலிருந்து விலகிவிடுவேன் என சவால் விட்டார்.
திறமையான இசையமைப்பாளர்
சாய் அபயங்கர் திறமையான இசையமைப்பாளர் என்று சாம் சி.எஸ் குறிப்பிட்டார். அவரை ஒப்பந்தம் செய்த இயக்குனர்களுக்கு அவரது திறமை தெரியும் ஆனால் அவரது படங்கள் வெளியாகாததால் ரசிகர்களுக்குத் தெரியவில்லை என்றும் கூறினார். மேலும், சாய் எந்தவிதமான விளம்பர யுக்திகளையும் பயன்படுத்தவில்லை என்றும், இரண்டு மூன்று பாடல்கள் மட்டுமே வெளியிட்டிருந்தாலும் இவ்வளவு வாய்ப்புகள் எப்படி வந்தது என்று சிலர் கேட்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
வளர வேண்டும்
சாய் மிகவும் நல்லவராக இருக்கிறார் என்றும், இப்போதுதான் இசையமைக்கத் தொடங்கியிருக்கிறார் என்றும், அவர் வளர வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் சாம் சி.எஸ் கூறினார். சாயின் தந்தை திப்பு தனது நல்ல நண்பர் என்றும், சாயின் படங்கள் வெளியான பிறகு இந்த விமர்சனங்கள் குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஒருபோதும் வருத்தப்பட்டதில்லை என்றும், தற்போது தனுஷ் நடிக்கும் எச்.வினோத் இயக்கும் படத்துக்கு முதன்முறையாக இசையமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே சாய் அபயங்கர் வளர்ச்சியால் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தான் பிரச்சனை என்று ஒரு வதந்தி பரவி வருகிறது. 2005 இல் அதிகம் கேட்கப்பட்ட டாப் 10 பாடல்களில் சாய்அபயங்கர் பாடல்கள் அதிகமாக இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் இப்போது அவருடைய புதிய பாடல்களும் வெளியாகும் போது அவருக்கு இன்னும் வரவேற்பு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications