என் விவாகரத்தை அவங்க கொண்டாடுனாங்க.. எனக்கு அந்த நோய் வந்தபோது சிரிச்சாங்க! சமந்தா உருக்கம்
சென்னை: தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த நடிகை சமந்தா, தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை, உடல்நல போராட்டங்கள் மற்றும் திரைப் பயணத்தின் ஏற்ற இறக்கங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெற்றிகளும், விருதுகளும்
நடிகை சமந்தா, 2010களில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரு வலுவான கதாநாயகியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தமிழில், நடிகர் விஜயுடன் இணைந்து நடித்த 'கத்தி', 'தெறி' போன்ற படங்கள், தமிழ் சினிமாவில் அவருக்குப் பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தன. தெலுங்கில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் இவரை ஒரு முன்னணி நட்சத்திரமாக உயர்த்தின.
விருதுகள்
சமந்தா தனது சிறந்த நடிப்புக்காகப் பல ஃபிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். குறிப்பாக, அழுத்தமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அவர் ஆர்வம் காட்டி வந்தார். சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் காதல் வயப்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. இந்தச் சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விவாகரத்தின் வலியைத் தாங்கிக் கொண்டிருக்கும்போதே, சமந்தா 'மயோசிடிஸ்' என்ற அரிய சரும நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காகக் கடந்த சில வருடங்களாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நலப் பிரச்சனை காரணமாகவே கடந்த சில வருடங்களாகச் சமந்தா அதிகப் படங்களில் நடிக்கவில்லை. அவர் நடித்து வெளியான சில படங்களும் எதிர்பார்த்தப் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
சமந்தாவின் மனம் திறந்த பேட்டி
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த துயரங்களைப் பொதுவெளியில் சிலர் கொண்டாடியது குறித்துச் சமந்தா ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார். "என் வாழ்க்கையில் நான் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறேன். நான் கஷ்டத்தில் இருந்தபோது, அதைச் சிலர் கொண்டாடினார்கள். எனக்கு மயோசிடிஸ் நோய் வந்தபோது என்னை கேலி செய்தார்கள்... என் விவாகரத்தைச் சிலர் சந்தோஷமாகக் கொண்டாடினார்கள்."

வலியில் இருந்து மீள்வது
"இதையெல்லாம் பார்த்தபோது ஆரம்பத்தில் என் மனதில் வலி உண்டானது. ஆனால், படிப்படியாக அதற்கெல்லாம் கவலைப்படுவதை நான் நிறுத்திவிட்டேன்" என்று சமந்தா பேசியிருப்பது, அவரது மன தைரியத்தைக் காட்டுகிறது. தற்போது, சமந்தா தனது கவனம் மற்றும் திரைப் பயணத்தின் பாதையை மாற்றியிருக்கிறார்.

இப்போது பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கும் சமந்தா, 'ரக்த் பிரம்மந்த்' என்கிற படத்திலும், தெலுங்கில் 'மா இன்டி பங்காரம்' என்கிற படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இதற்கிடையில், பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ராஜ் நிடுமோருவுக்கும், சமந்தாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டிருப்பதாகச் சமீபத்தில் கிசுகிசுக்கள் வெளியானது. இதுபற்றி இருவரும் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
சினிமா உலகில் உள்ள கிசுகிசுக்கள், தனிப்பட்ட வலி மற்றும் உடல்நலப் போராட்டங்கள் ஆகிய அனைத்தையும் எதிர்கொண்டு, சமந்தா தனது மன உறுதியால் அடுத்த கட்டத்திற்கு முன்னேறத் தயாராகிவிட்டார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications