வீட்டுல விசேஷம்.. மகிழ்ச்சியை பகிர்ந்த நாக சைதன்யா மனைவி சோபிதா! சமந்தாவுக்கு போட்டியா? குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிகை சமந்தாவின் திருமணம் சில நாட்களுக்கு முன்பு எளிமையாக நடைபெற்றது. அதை தொடர்ந்து சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா துலிபாலா மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்து இருக்கிறார். அவருக்கு திரை துறை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
திரைத்துறையில் ஒரு சில திரைப்படங்களில் ஒன்றாக நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களுடைய திருமண வாழ்க்கை ஒரு சிலருக்கு மட்டும் தான் நீண்டு பயணிக்கிறது. ஒரு சிலர் பாதியிலேயே அதை முறித்துக் கொள்கிறார்கள். அதேபோல நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் ஒன்றாக நடித்த திரைப்படத்தில் காதலர்களாக பழகி பிறகு பெற்றோர் சமூகத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை சில வருடங்களிலே முடிவுக்கு வந்தது.

நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவருமே மியூச்சுவல் ஆக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதேபோல ஒரு வருடம் கழித்து நடிகை சமந்தாவும் தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸின் இயக்குனர் ராஜ் நெடிமோருவை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.
சமந்தாவின் திருமணம் சமீபத்தில் தான் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது. டிசம்பர் ஒன்றாம் தேதி நடந்த இந்த திருமணம் யோகா பாரம்பரியத்தின்படி எளிமையாக நடைபெற்றது. இந்த திருமண செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது சமந்தாவின் திருமண புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் சமந்தாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சமந்தா மற்றும் ராஜ் இருவரும் பூத சுத்தி விவாதம் என்ற தனித்துவமான யோக பாரம்பரியத்தின்படி மாலை மாற்றிக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு சோசியல் மீடியாவில் சமந்தா தன்னுடைய திருமண புகைப்படங்கள் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டு வருகிறார். இந்த நிலையில் நாக சைதன்யாவின் இரண்டாவது மனைவி சோபிதா ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

அதாவது நாக சைதன்யாவிற்கும் சோபிதாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதே மாதத்தில் தான் இப்போது சமந்தா டிசம்பர் ஒன்றாம் தேதி திருமணம் செய்து இருக்கிறார். சூழல் இப்படி இருக்க டிசம்பர் 4ஆம் தேதியான நேற்று சோபிதா மற்றும் நாக சைதன்யா தம்பதி தங்களுடைய திருமண நாளை கொண்டாடி இருக்கின்றனர். அதற்காக சோபிதா ஒரு ஸ்பெஷல் போஸ்ட் ஒன்றை insta பக்கத்தில் போட்டு இருக்கிறார்.
அதில் தன்னுடைய திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் சடங்குகளின் அழகிய தருணங்களை அந்த வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார். அதோடு அந்த பதிவிற்கு "காற்று எப்போதும் வீடு நோக்கி வீசும். நான் கணவர் என்று அழைக்கும் மனிதருடன் சூரியனை சுற்றி ஒரு பயணத்தில் நெருப்பால் சுத்திகரிக்கப்பட்டது போல நான் புதியதாக உணர்கிறேன்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications