சம்சாரம் அது மின்சாரம்! கிஷ்மு கொடுத்த ஐடியா! கடைசி நேரத்தில் சீனை மாற்றிய விசு.. ஹைலைட்!
சென்னை: சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கடைசி நேரத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் கிஷ்முவால் திடீரென மாறியது தெரியுமா?
சம்சாரம் அது மின்சாரம்! இந்த படத்தை இன்று பார்த்தாலும் நடுத்தர, கூட்டுக் குடும்பத்தின் யதார்த்தை காமெடி கலந்து சொல்லியிருப்பது புரியும். இதுதான் அந்த காலத்தில் பல வீடுகளில் சந்தித்து வந்த பிரச்சினையாகவே இருந்தது.

இந்த படத்தை விசு இயக்கினார். இது 1986 இல் வெளிவந்த படமாகும். இந்த படத்தில் ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ், வாகை சந்திரசேகர், மாதுரி, விசு, கமலா காமேஷ், இளவரசி, கிஷ்மு, திலிப், மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இது ஒரு ஏவிஎம் தயாரிப்பு படமாகும்.
இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய விசு இயக்கியுள்ளார். அதாவது கூட்டுக் குடும்பம் சில பிரச்சினைகளால் பிளவுப்படுத்துவதையும் அது மீண்டும் எப்படி இணைகிறது என்பதுதான் கதை. அதாவது உறவுக்கு கை கொடுப்போம், பணம் இரண்டாம் பட்சம்தான் என்பதும் இதன் கருவாகும். இந்த படம் 25 வாரங்கள் ஓடியது.
அம்மையப்பன் கேரக்டரில் விசு நடித்திருப்பார். அவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள். அம்மையப்பன் தனது சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்துவார். பின்னர் அவர் ஓய்வு பெற்றதும் குடும்ப பொறுப்பை இரு மூத்த மகன்களும் ஏற்பர். மூத்த மகன் சிதம்பரம், காசு காசு என குழந்தையின் பால் டப்பாவை அடுக்கி வைத்து கணக்கு பார்ப்பவர்.
அது போல் இரண்டாவது மகன் சிவா. அப்பா, அம்மாவுக்கு ஏற்ற மகன். குடும்ப கஷ்டத்தை புரிந்து கொண்டு உறவுகளை மதிப்பார். மூன்றாவது மகன் பாரதி எழுதினான், எழுதுகிறான் எழுதுவான் என 10ஆம் வகுப்பு தேர்வில் தொடர் தோல்வி அடைந்து ஒரு வழியாக பாஸ் செய்வார். அது போல் மகள் சரோஜினி கிறிஸ்துவரான பீட்டரை பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார்.
அங்கும் பீட்டரின் நண்பருடன் இரவில் பைக்கில் வருவதை மாமனார் ஆல்பர்ட் (கிஷ்மு) கேள்வி கேட்க அதற்கு கோபித்து கொண்டு வீட்டை விட்டு தாய் வீட்டுக்கு சென்றுவிடுவார். இரண்டாவது மருமகள் வசந்தா தன் கணவருடன் சந்தோஷமாக இருக்க முடியாமல் தவிக்கிறார். மூத்த மருமகள் உமா பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு போனதும்தான் இத்தனை பிரச்சினைகள் நடந்து வீட்டுக்கு நடுவே கோடு போடும் நிலை ஏற்படுகிறது.
குழந்தையுடன் புகுந்த வீட்டிற்கு வரும் உமாவை ஆரத்தி எடுக்க கூட மாமியார் கோதாவரி வராததாலும் குழந்தை பால் குடிக்காமல் பால் கட்டும் நேரத்திலும் கூட தனது மருமகளுக்கு உதவாததாலும் உமா வேதனை அடைகிறார். கடைசியில் குடும்பத்தில் ஒவ்வொருவரையாக கண்ணம்மாவுடன் (மனோரமா) சரி செய்வார் உமா (லட்சுமி).
இந்த படத்தை எடுக்கும் போது விசு தான் என்ன வசனம், கதை எழுதியிருந்தாரோ அதுபடியே எடுத்தாராம். அந்த வகையில் அந்த படத்தில் ஒரு கிளைமாக்ஸ் காட்சி வரும். அதில் குழந்தையை எடுத்துக் கொண்டு மனோரமா நீளமான வசனத்தை பேசி இந்த குழந்தை யாருக்கு சொந்தம்? உங்களுக்கு வேண்டுமானால் குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வாருங்கள் என கூறிவிட்டு மனோரமா வீட்டுக்கு செல்வார்.
பிறகு குழந்தையுடன் விசு வீட்டுக்கு வரும் போது அனைவரும் ஒன்று சேர்வார்கள், ஆனால் உமாவோ அவர் தனிக்குடித்தனம் போகலாம் என சொல்வார். ஏற்கெனவே பிரிந்ததால் நொந்த தான், இனியும் ஒரு பிரிவு வந்தால் தாங்கும் சக்தி இல்லை. எனவே தூரத்தில் இருந்தே நீ நல்லா இருக்கியா நான் நல்லா இருக்கேன் என்ற அளவில் இருக்கலாம் என கூறி தனிக்குடித்தனம் போவார், வாரம் ஒரு நாள் அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பர்.
இந்த காட்சியில் கோயிலில் லட்சுமி தனது மாமனாரிடம் பேசி குழந்தையை விட்டுவிட்டு வருவதாகத்தான் விசு எழுதியிருந்தாராம். இந்த காட்சிக்கு முதல் நாள் ஷூட்டிங் முடித்துவிட்டு விசு தனது தம்பி கிஷ்மு, கோயிலில் குடும்பத்தை சேர்த்து வைக்க லட்சுமியே வாதாடிவிட்டு அவரே தனிக்குடித்தனம் போகிறோம் என சொன்னால் நல்லாருக்குமா என கேட்டுள்ளார்.
விசுவுக்கு அப்போதுதான் புரிந்ததாம். உடனே என்ன செய்வது என தெரியாமல் லட்சுமிக்கு போன் செய்து யதார்த்ததை கூறியுள்ளார். அப்போது அவர்தான் அந்த காட்சியில் மனோரமாவை நடிக்க வைக்கலாம் என கூறினாராம். அடுத்த நாள் காலை 9 மணிக்கு மனோரமாவுக்கு வேறு ஒரு படத்தின் ஷூட்டிங் இருந்த நிலையில் விசு அவரை காலை 7.30 மணிக்கெல்லாம் வரவழைத்து ஷூட்டிங்கை முடித்தாராம். இந்த கிளைமாக்ஸ் மாற்றத்தை நிறைய முறை விசுவே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications