அந்த மாதிரி செக்ஸ் டார்ச்சர்..5 நாட்கள் மோஷன் போக முடியாத வலி..புது குற்றச்சாட்டு வைத்த சம்யுக்தா
சென்னை: சீரியல் நடிகை சம்யுக்தா தன்னுடைய கணவர் விஷ்ணுகாந்த் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.
தன்னுடைய கணவர் மீது செக்ஸ் டார்ச்சர் என்ற புகாரை கொடுத்திருக்கும் சம்யுக்தாவிற்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது.
விஷ்ணுகாந்த் தன்னிடம் நடந்து கொண்ட முறையினால் தன்னால் பாத்ரூம் கூட போக முடியாமல் கஷ்டப்பட்டதாக கூறியிருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை சம்யுக்தா அவரோடு சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஜோடியாக நடித்த விஷ்ணுகாந்த் என்பவரை கடந்த மார்ச் மாதம் காதலித்து திருமணம் செய்து இருந்தார்.
திருமணம் முடிந்த ஒரு சில நாட்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கி இருக்கிறது. அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனைகளால் சம்யுக்தா விஷ்ணுகாந்துடன் கோபித்து கொண்டு அவருடைய அம்மா வீட்டுக்கு வந்து விட்டாராம். விஷ்ணுகாந்த் எவ்வளவோ முயற்சி செய்தாலும் சம்யுக்தா மனம் மாறவில்லை என்று கூறப்படுகிறது.
எப்படியாவது சம்யுக்தா மனதை மாற்றி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் சம்யுக்தா தன்னுடைய திருமண புகைப்படங்களை டெலிட் செய்தது அதிர்ச்சியாக இருந்தது என்று விஷ்ணுகாந்த் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாறி மாறி ஜாடையாக பதிவுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.

அதைத் தொடர்ந்து இவர்களுடைய பிரச்சனை சமூக வலைத்தளத்தில் வேகமாக பேசப்பட்டு வந்த நிலையில் தன் மீது தவறு இல்லை என்று விஷ்ணுகாந்த் முதல் முறையாக youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து அதில் பல குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்கும் வகையில் சம்யுக்தா இன்ஸ்டாகிராம் லைவில் பேசியிருந்தார்.
சம்யுக்தா பற்றிய சில ஆடியோக்களையும் விஷ்ணுகாந்த் வெளியிட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் சம்யுக்தா முதல் முறையாக youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் விஷ்ணுகாந்த் தனக்கு அதிகமான செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கூறியிருக்கிறார். தாம்பத்திய விசயத்தில் அவர் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தால் தன்னால் ஐந்து நாட்கள் பாத்ரூம் கூட போக முடியவில்லை.
எனக்கு வயிறு வலித்து பாத்ரூம் வந்தா கூட போக முடியாமல் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். நான் விஷ்ணுகாந்த்தை கல்யாணம் செய்யும் போது வரைக்கும் நான் வெர்ஜின் ஆகத்தான் இருந்தேன் என்பது அவருக்கும் தெரியும் அதை என்னால் நிரூபிக்கவும் முடியும். ஆனால் அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் எங்கள் திருமணத்திற்கு முன்பு நாங்கள் லிவிங்கில் இருந்தோம் எங்களுக்கு எல்லாம் முடிந்து விட்டது என்று கூறி இருந்தார்.
ஆனால் அது சுத்தமான பொய். திருமணத்திற்கு பிறகு தான் எங்களுக்கு முதலிரவு நடந்தது. அதற்கு முன்பு அவரை பற்றி எனக்கு இந்த விஷயத்தில் எதுவும் தெரியாது. அப்படி தெரிந்திருந்தால் நான் கண்டிப்பாக திருமணத்திற்கு சம்மதித்திருக்கவே மாட்டேன். அவருக்கு 24 மணி நேரமும் செக்ஸ் வேணும். அவர் எப்போதும் அந்த நினைப்பாக தான் நடந்து கொள்வார். அதற்கு நான் கம்பெனி கொடுக்கவில்லை என்பதால் என்னை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்ய முடியுமோ அப்படி எல்லாம் பண்ணுவார் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
தற்போது இவர் சொன்னா குற்ற சாட்டு குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் பலர் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்துவிட்டு எதற்காக இப்ப மட்டும் இத்தனை பெரிய குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டும். விஷ்ணுகாந்த் எல்லா எவிடன்ஸ்களையும் உங்களுக்கு எதிராக வெளியிட்டதால இப்படி செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இன்னும் ஒரு சில ரசிகர்கள் எந்த விஷயத்தில் ஒரு பெண் பொய் சொன்னாலும் இந்த அளவிற்கு ஒரு பொண்ணு பொய் சொல்ல மாட்டாங்க. சம்யுக்தா பட்ட வேதனையை தான் இப்போது சொல்லி இருக்காங்க. அதனால்தான் அவரால் 15 நாட்கள் கூட அவரோடு தாக்கு பிடிக்க முடியவில்லை. இவர்கள் பிரிந்ததற்கு இதுதான் உண்மையான காரணமாக இருக்குமோ என்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications