சிம்பிளி வாவ்... ஜில்லுன்னு போஸ் கொடுத்த சனம்.. குவிந்த ரசிகர்கள்!
சென்னை : சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்களின் கண்கள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுதாம். அப்படி ஒரு சிலிர்க்க வைக்கும் போட்டோஷூட்டை நடத்தியிருக்கிறார் சனம் ஷெட்டி.
எதைப் பார்ப்பது எதை விடுவது என தெரியாமல் குழம்பிப்போய் தவிக்கிறார்களாம் ரசிகர்கள். காரணம், ஒவ்வொரு போட்டோவும் வேற லெவலில் இருப்பதால்.
தான் ஒரு மாடல் என்பதை இப்போதான் நிரூபித்திருக்கிறார் என்று சனத்தின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்படியே போ தல.. என்றும் பலர் ஊக்கம் கொடுத்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதுதான் மாடலிங் போட்டோஷூட்
அடடா ரொம்ப நாளைக்கு பிறகு சனத்தின் அழகு தரிசனத்தை பார்த்த ரசிகர்களால் கொண்டாடாமல் இருக்க முடியவில்லையாம். அதனால்தான் இன்ஸ்டாகிராமிலும், ட்விட்டரிலும் ரசிகர்களின் கமெண்டுகள் மலை போல குவிந்து வருகிறது. ரசிகர்களை பார்க்கும்போதே தெரிகிறது ,சனத்தின் லேட்டஸ்ட் போட்டோஸ் ரசிகர்களை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்று இதுவரைக்கும் இல்லாத வகையில் தற்போது கவர்ச்சியிலும் மின்னும் சனம் ஷெட்டியின் கிளாமர் போட்டோக்கள் தான் இன்ஸ்டாகிராமிலும், ட்விட்டரிலும் செம வைரலாக பரவி வருகிறது.

கண்ணுக்குள்ளே நிக்குதே
இதுவரைக்கும் இவர் ஒரு மாடலாக இருந்தாலும் மாடலிங் போட்டோகளை இன்ஸ்டாகிராமில் இவ்வளவு அழகாக பதிவிடவில்லை. ஆனால் ரசிகர்களின் ஏக்கங்களை புரிந்து தற்போதுதான் இவர் தரிசனத்தை கொடுத்திருக்கிறார், என்று அவருடைய ரசிகர்கள் குதூகலித்து வருகின்றனர். இப்படி எல்லாம் போஸ் கொடுத்தால் எப்படி நாங்க போனைக் கீழே வைப்போம்!! என சிலர் புலம்பவும் தவறவில்லை. அதுவும் இரவு நேரத்தில் இவருடைய இந்த மாடல் உடை போட்டோ தான் பல பேர் கண்ணுக்குள்ளேயே நிற்கிறதாம் அதனால் தூக்கத்தை தொலைத்து மீண்டும் மீண்டும் இன்ஸ்டாகிராமில் வலம் வருகிறோம் என்று சிலர் கமெண்ட் களில் கருத்துக்களை உதிர்த்து இருக்கின்றனர்.

பிக் பாஸ் டாட்டூ போல இருக்கு
அதுவும் தற்போது இவருடைய போட்டோக்களில் அவருடைய கையில் இருக்கும் அந்த டாட்டூவை பார்த்த ரசிகர்கள் அது என்ன என்று தான் ஆர்வமுடன் கேட்டு வருகின்றனர். அதுவும் இவர் இரு கைகளையும் மேலே தூக்கி மரத்தை பிடித்தபடி தன்னுடைய பின்னழகில் பாதியும் முன்னழகில் பாதியும் தெரியும் படியாக இருக்கும் போட்டோவில் அவருடைய கைகளில் அவர் போட்டிருக்கும் அந்த டாட்டு தான் அழகாக தெரிகிறது. ஆனால் அதைப் பார்க்கும்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரும் அந்த லோகோவை போலவே இருக்கிறது. அதனால் தான் அவருடைய ரசிகர்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மறக்கமுடியாமல் கையில் டாட்டூ போட்டு விட்டீர்களா?? இல்ல வேற எதுவும்மா!! என்று கேள்வி கேட்டிருக்கின்றனர். ஆனால் இந்தக் கேள்விக்கும் வழக்கம் போலத்தான் எந்த பதிலும் வரவில்லை. ஆனால் சீக்கிரத்தில் எப்படியும் ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்னதான் அந்த கையில் இருக்கிறது என்று.

தண்ணீரை விட்டு மீன் வெளியே வந்து விட்டதா
அதுவும் இன்னொரு போட்டோவில் நீச்சல் குளத்தின் பக்கத்தில் இவர் சாய்ந்து படுத்தபடி ரசிகர்களின் மனதை சாய்ந்து விழ வைத்துவிட்டார். சும்மா பார்த்தாலே கிறங்கிப் போகும் ரசிகர்கள் இந்த மாடர்ன் உடையிலும் மயக்கும் சிரிப்பில் மனதை கொள்ளை கொண்டு விட்டார்,என்று கவிதைகளை கொட்டுகின்றனர். பால்வண்ண மேனியும், அந்த அழகான கூந்தலும் தரையில் படலாமா?? இப்படி தரையில் படுத்து இருப்பதை பார்த்து ரசிகர்களின் மனது துடிக்கிறது. அதனால் இப்படி எல்லாம் இனி செய்யாதீங்க என்று அன்பு கட்டளை பறந்து வருகிறது.

போல்டான குணமும் அழகுதான்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இவருடைய கேரக்டரை வேறுவிதமாக ரசிகர்கள் புரிந்து வைத்திருந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவருடைய உண்மையான குணத்தை பார்த்த பிறகுதான் இவரை அதிகமாக ரசிகர்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டனர். அதனால் தற்போது இவர் என்ன செய்தாலும் அதனை ரசிக்க மட்டுமே ரசிகர்கள் செய்கின்றனர். பொதுவாக நடிகைகள் பலருக்கும் அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் வரும் ஆனால் சனத்துக்கு அந்த மாதிரி எந்த தொல்லையும் இல்லை. நெகட்டிவ் கமெண்டுகளை போடுபவர்களை விடவும் இவரை ஆதரிக்கும் ரசிகர்கள் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். தற்போதைய போட்டோ சூட் போட்டோக்களுக்கு கூட இவருக்கு அனைத்தும் பாசிட்டிவ் கமெண்டுகளாகவே வலம் வருகிறது. அதிலும் இவருடைய ரசிகர்கள் பலர் இவர் எப்போது வெள்ளித்திரையில் கதாநாயகியாக வருவார் என்றுதான் பலர் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications