சங்கீதா பாலிடிக்ஸ்.. விஜய்க்கு காவித்துண்டு.. எடப்பாடியும் ரெடி.. எல்லாரும் கமலாலயம் நோக்கி: பிரபலம்
சென்னை: அதிமுக, பாஜக கூட்டணியில் தவெக கூடிய சீக்கிரம் இணைய போகிறது. இதோ இப்போது எடப்பாடியே அமித்ஷாவிடம் சேர்ந்துவிட்டார். கருணாநிதியே தாக்குப்பிடிக்க முடியவில்லை.. 1999-ல் வாஜ்பாய் அரசை தூக்கி நிறுத்தியவர்கள் கருணாநிதியும், முரசொலி மாறனும்தான்.. எனவே, இவர்கள் என்ன வேண்டுமானாலும் மேடையில் பேசிக் கொள்ளலாம். ஆனால், முடிவு செய்வது டெல்லிதான் என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.
BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார் தமிழா தமிழா பாண்டியன். அதில், "இன்று மேடையில் பேசிய அத்தனை பேரையும், கையில் பேப்பர் இல்லாமல் பேச சொல்லுங்க பார்ப்போம்.. அரசியல் என்பதையும் சினிமாவாகவே பார்க்கிறார்கள்..

இவர்களுக்கு எழுதி கொடுப்பதற்கு ஆள் இல்லாவிட்டால், இந்த கட்சியே காணாமல் போயிடும்.. எழுதி கொடுப்பவர்களை 10 நாள் ரிமாண்டு செய்துவிட்டால், இந்த கட்சி திணறிவிடும். ஒருகாலத்தில் ஜெயலலிதாவுக்கே எழுதி தரணும். இதுதான் தமிழ்நாட்டு அரசியல்.
தமிழ்நாட்டு அரசியல்
கள நிலவரம் தெரிந்த நபர்கள் தமிழகத்தில் மிக மிக குறைவு.. காரணம், அரசியல்வாதிகள் என்பவர்கள் திணிக்கப்படுகிறார்கள். அந்தவகையில் விஜய்யை 50 வயதில் திணிக்கிறார்கள்.
அறிஞர் அண்ணாதுரை 1935-ல் பெரியாரிடம் உதவியாளராக இணைந்து அரசியல் கற்றுக் கொண்டுதான் முதல்வர் ஆனார். அண்ணாவுக்கு புற்றுநோய் வந்துவிட்டதால், சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.. ஆனால், அதற்கு முன்பு இத்தாலியில் போப்பாண்டவரை சந்திக்க ஆசைப்படுகிறார்.. கேன்சர் நோயாளி என்பதால், அண்ணாவை 5 நிமிடம் சந்திக்க போப்பாண்டவரும் ஒப்புக் கொள்கிறார்.
அறிஞர் அண்ணா - போப்பாண்டவர்
அதன்படியே சந்திப்பு நடக்கிறது. ஆனால், ஒன்றரை மணி நேரம் சந்திப்பு நீள்கிறது.. அண்ணாதுரை ஆங்கிலத்தில் பேசப்பேச மலைத்து போய்விட்டார் போப்பாண்டவர். "5 நிமிடத்தில் சந்தித்து உங்களை அனுப்பிவிடலாம் என்று நினைத்தேன். இவ்வளவு அறிவு உங்களுக்கு இருக்கும் என்று தெரியவில்லை.. உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள்" என்றார்.
அதற்கு அண்ணா, "எனக்கு எதுவும் வேண்டாம், கோவாவில் சுதந்திர போராட்ட வீரர், போர்ச்சுக்கல் சிறையில் உள்ளார், அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். உடனே அதை நிறைவேற்றினார் போப்பாண்டவர். ஆனால், விடுவிக்கப்பட்டு வெளியே வந்தபோது, அண்ணா உயிருடன் இல்லை. இதுதான் பட்டறிவு... இதுதான் அரசியல் அறிவு. இதுதான் பேச்சாளர். பேப்பரில் எழுதி வைத்து கொண்டு பேசுவதெல்லாம் அரசியலா?
கருணாநிதி, முரசொலி மாறன்
அதிமுக, பாஜக கூட்டணியில் தவெக கூடிய சீக்கிரம் இணைய போகிறது. "நீங்கள் சொல்வது போலவே செய்கிறேன்" என்றெல்லாம் அமித்ஷாவிடம் சொல்லியிருப்பார் விஜய்.
இதோ இப்போது எடப்பாடியே அமித்ஷாவிடம் சேர்ந்துவிட்டார். கருணாநிதியே தாக்குப்பிடிக்க முடியவில்லை.. 1999-ல் வாஜ்பாய் அரசை தூக்கி நிறுத்தியவர்கள் கருணாநிதியும், முரசொலி மாறனும்தான்.. எனவே, இவர்கள் என்ன வேண்டுமானாலும் மேடையில் பேசிக் கொள்ளலாம். ஆனால், முடிவு செய்வது டெல்லிதான்.
சங்கீதா, விஜய், அரசியல்
இந்த நிகழ்வு பேசுபொருளாக இருக்க வேண்டுமானால், மோடி, ஸ்டாலின் பெயரை சொல்ல வேண்டும் என்று எழுதி தந்திருக்கிறார்கள். விஜய், புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன், வெங்கட்ராமன் எல்லாரும் தவெக துண்டை உதறித்தள்ளிவிட்டு, காவித்துண்டை போட்டுக் கொள்வார்கள். டிசம்பர் மாசம் இது நடக்கும். அதுவரை என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். அக்டோபர், நவம்பர் வரும்போது, "எல்லா பாதைகளுமே கமலாலயம் நோக்கி".
விஜய் அரசியல், சங்கீதா அரசியல், கீர்த்தி சுரேஷ் அரசியல், புஸ்ஸி ஆனந்த் அரசியல், எல்லாமே கடைசியில் டெல்லியில் அமித்ஷா ஆபீஸ் வாசலில் போய் நிற்கும்" என்று தெரிவித்துள்ளார்.
-
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications