சன் டிவியில் முக்கியமான சீரியலை விட்டு விலகும் கதாநாயகன்..காரணம் அவர்தானாம்!? இனி வரும் திருப்பங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் இருந்து அந்த சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் சஞ்சீவ் விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே கயல் சீரியலில் பல நடிகர்கள் விலகி விட்ட நிலையில் தற்போது கதாநாயகன் எடுத்திருக்கும் முடிவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கிறது.

கயல் சீரியல் நடிகர்

கயல் சீரியல் நடிகர்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் ரசிகர்களின் மத்தியில் குறுகிய காலத்திலே நல்ல வரவேற்பு பெற்ற சீரியல்களில் ஒன்றாக கயல் சீரியல் இருந்து வருகிறது . இந்த சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். கதாநாயகியாக கயல் கேரக்டரில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு முன்பு ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் வில்லியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போதே அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருந்த நிலையில் தற்போது கதாநாயகி அவதாரம் எடுத்ததும் இவருடைய ரசிகர்கள் இரட்டிப்பாக தொடங்கி விட்டனர் .இந்த சீரியலின் கதாநாயகி அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வரப்படுகிறது. ஆனாலும் ராஜா ராணி சீரியலுக்கு பிறகு சஞ்சீவ் இந்த சீரியலில் நடித்து வருகிறார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

சஞ்சீவ் சின்னத்திரை நடிகையான ஆலியா மானசாவை முதல் சீரியலில் காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இவர்கள் இருவரும் ராஜா ராணி சீரியலின் மூலமாக சின்னத்திரையில் ஒன்றாக பழகி திருமணம் செய்து கொண்ட பிறகு சஞ்சீவ் கயல் சீரியலிலும் ஆலியா ராஜா ராணி இரண்டாவது சீரியலிலும் நடித்துக் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததால் அந்த சீரியலில் இருந்து ஆலியா விலகி இருந்தார். ஆனால் சஞ்சீவ் தொடர்ந்து இந்த சீரியலில் நடித்து வருகிறார் .இந்த நிலையில் தற்போது ஆலியா மீண்டும் சன் டிவி சீரியலில் நடிக்க இருக்கிறார்.

இனியா சீரியல்

இனியா சீரியல்

ஆலியா, இனியா என்ற சீரியலில் புதியதாக நடிக்க இருக்கும் நிலையில் அந்த சீரியலின் கதாநாயகனாக சஞ்சீவ் தான் நடிக்க இருக்கிறாராம். அதனால் அவர் தன்னுடைய கேரக்டருக்கு அதிகமாக முக்கியத்துவம் தராத கயல் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுபோல இனியா சீரியலில் ஆரம்பத்தில் சஞ்சீவ் வரப்போவது இல்லையாம். ஒரு சில எபிசோடுகள் கடந்து தான் கதாநாயகன் என்ட்ரி கொடுக்கப் போகிறார். அதனாலே அதுவரைக்கும் கயல் சீரியலில் இவர் தொடர்வார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே கயல் சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே பல நடிகர்கள் விலகி இருக்கின்றனர். புதியதாக பலர் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

உண்மைதானா

உண்மைதானா

இந்த நிலையில் கதாநாயகன் விலகினால் டிஆர்பி குறையுமே என்று பலர் கூறிவரும் நிலையில் இப்போது தான் கயல் மற்றும் எழில் இருவருக்கும் புரிதல் ஏற்பட்டும் காதல் ட்ராக் ஏற்பட தொடங்கி இருக்கிறது. அதற்குள் இப்படி ஒரு மாற்றமா? இனி ஒரு புது நடிகர் வந்தால் இந்த இடத்திற்கு செட் ஆவாரா என்று பலர் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர் ஆனால் சஞ்சீவ் இதை குறித்து எனது தகவலையும் உறுதியாக கூறவில்லை. சீரியல் தரப்பில் இருந்தும் கதாநாயகன் விளக்குவதாக என்ற தகவலும் வெளியாகவில்லை .இதனால் இனியா சீரியல் தொடங்கி சஞ்சீவ் அந்த சீரியலில் அறிமுகமானால்தான் இந்த செய்தி உண்மையா? இல்லையா? என்பது தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+