பிக் பாஸ்க்கு பிறகும் திருந்தல.. கூல் சுரேஷ் ரகசியத்தை உளறிய சந்தானம்.. டி. ராஜேந்திரனும் மாட்டிக்கிட்டாரு
சென்னை: கார்த்திக், யோகி பாபு இயக்கத்தில் சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது அதில் சந்தானம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூல் சுரேஷ் குறித்து சில ரகசியங்களை பகிர்ந்து இருக்கிறார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் திருந்தி விட்டேன் என்று சொல்லிவிட்டு இப்போது அவர் செய்த வேலையை சந்தானம் அம்பலப்படுத்தி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முன்பு சந்தானம் ஒவ்வொரு திரைப்படமும் வெளியாகும் போது அந்த திரைப்படம் குறித்து தியேட்டர் வாசலில் நின்றபடி படத்திற்கு பிரமோஷன் வேலைகளை செய்து கொண்டிருப்பார். இது அதிகமாக இணையத்தில் கலாய்க்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கூல் சுரேஷ் செய்த வேலையை சந்தானம் வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் இன்று நடிகர் சந்தானம் நடித்த வடக்குப்பட்டி ராமசாமி என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திரைப்பட விழாவிற்கு திரை உலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவராக கூல் சுரேஷ் வந்து இருந்தார். காரணம் கூல் சுரேஷும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.
ஏற்கனவே கூல் சுரேஷ் சில திரைப்படங்கள் வெளியாகும் போது சர்ச்சைக்குரிய வகையில் அதை விளம்பரம் செய்து கொண்டிருப்பார். அதுபோலவே பிக் பாஸ்க்கு பிறகு முதல் முறையாக வடக்குப்பட்டி ராமசாமி திரைப்பட வெளியீட்டு விழாவிலும் அந்த திரைப்படத்தையும் விட்டு வைக்காமல் தன்னுடைய பாணியில் விளம்பரம் செய்திருக்கிறார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய சந்தானம், கூல் சுரேஷை பார்த்து, இவன் பிக் பாஸ்க்கு போனதுக்கு பிறகு திருந்திட்டேன்னு சொன்னான். ஆனா இப்போ கத்துகிறான்... பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் முதல்ல எனக்கு தான் போன் பண்ணுனான். மச்சி சால்வை, மாலை போடணும் வரட்டுமா என்று கேட்டான். நானும் சரி வா என்று சொல்லிட்டேன்.
ஆனா இங்கு வந்ததும் வாங்கிட்டு வந்த சால்வையையும், மாலையும் என்னிடம் கொடுத்து அவனுக்கு போட சொல்லி அதை போட்டோவும் எடுத்துக்கிட்டு பப்ளிசிட்டி பண்ணிகிட்டான், என்று கலாய்க்க அங்கிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அதோடு இதுபோல் தான் டி ஆர்க்கும் போன் பண்ணி அங்கே மாலை சால்வை வாங்கிட்டு போய் அவரையும் போடச்சொல்லி டார்ச்சர் பண்ணி இருக்கிறான் என்று அந்த மேடையில் கூல் சுரேஷை சந்தானம் பங்கம் செய்திருந்தார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கூல் சுரேஷுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான ஆதரவு கிடைத்து இருந்தது. அவர் மாயா கேங்குக்கு எதிராக தினேஷ் கேங் கோடு சேர்ந்து சில நேரங்களில் அமைதியாகவும், பல நேரங்களில் காமெடியாகவும் செய்த செயல் பலரையும் கவர்ந்திருந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தன்னுடைய பழைய மோடுக்கு மாறிவிட்டாரே என்று பலர் கலாய்த்து வருகின்றனர்.
-
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி பிளான் கேட்டு அதிர்ச்சியில் விஜயா.. இனியாவது திருந்துவாரா? மனோஜ்க்கு அசிங்கம் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications