ஐந்தாவது மனைவி.. எம்ஆர் ராதாவின் துணிச்சல் யாருக்குமே வராது.. சரத்குமார் மாமியாரின் நிறைவேறாத ஆசை
சென்னை: ராதிகாவின் மகள் ரயானே தன்னுடைய இன்ஸ்டாவில், :"திருமணம், கொண்டாட்டம் போன்ற விஷயங்களில் கலந்துகொள்ளாவிட்டாலும், இறுதி அஞ்சலியிலாவது கலந்துகொள்ள வேண்டும் என்பார் என் அப்பா. பழைய பகை எதுவாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு மரியாதை செலுத்து என்பார்" என்று பதிவிட்டுள்ளார். ஆனால் திடீரென யாருக்காக இப்படி பதிவிட்டுள்ளார் என்று தெரியவில்லை. இந்நிலையில், பத்திரிகையாளர் சேகுவேரா நடிகவேள் எம்ஆர் ராதா பற்றி பல்வேறு விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Realone Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "ராதிகா நிரோஷாவின் தாயார் கீதா.. எம்ஆர் ராதாவின் 4வது மனைவி கீதா.. வெளிப்படையாகவே 5 மனைவிகளை வைத்திருந்தவர் எம்ஆர் ராதா.. ஆனால், மனைவிகளை பொது மேடைகளுக்கு அழைத்து வந்ததில்லை.. எந்த மீடியா வெளிச்சத்துக்கும் அழைத்து வந்ததில்லை,

முதலமைச்சர் மாப்பிள்ளை
சரத்குமார் சமீபத்தில் ஒருபேட்டியில், என் மாமியார் எப்போது நீங்க முதலமைச்சர் ஆவீங்க மாப்பிள்ளை? என என்னை எப்போதும் கேட்டுக் கொண்டேயிருக்கிறார் இருக்கிறார்" என்றார்..
சரத்குமார் சொன்ன இந்த விஷயம் அப்போது ட்ரோல் ஆனதால், அப்போதுதான் சரத்குமார் மாமியார் யார் என்றும் பலருக்கும் தெரியவந்தது.. அப்போது இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் பேசி, அதற்கு ராதிகா ரியாக்ட் செய்ததும் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டது. அன்றைய தினம் சரத்குமார் அப்படி சொன்னதை தவிர்த்திருக்கலாம். அல்லது அன்று எந்த சூழலில் இதை சொன்னாரோ தெரியாது.. அதற்காக இப்போது வந்து சரத்குமார் பேச்சை ட்ரோல் செய்வது நியாயமில்லை.
எம்ஆர் ராதா வெளிப்படைத்தன்மை
எம்ஆர் ராதாவுக்கு மேடை நாடகங்கள் போடும்போது, அங்கேயே சில மாதங்கள் தங்கி வேலை பார்க்கும் சூழல் ஏற்படும்.. அதுபோன்ற நேரங்களில் தனக்கு பிடித்த பெண்களிடம் காதல் வயப்பட்டுள்ளார்.. அப்படி காதலித்த பெண்களையே திருமணம் செய்து, மனைவி என்ற அங்கீகாரத்தையும் அவர்களுக்கு தந்தவர்.. ஆனால், எக்காலத்திலும் கள்ளத்தனமாக எதையும் செய்தில்லை.. வெளிப்படைத்தன்மையுடன் வாழ்ந்தவர் எம்ஆர் ராதா.
அதேபோல குடும்பத்துக்குள் பல உரசல்கள் இருக்கலாம்.. ஆனால், எங்கள் அப்பா சொத்து தரவில்லை என்று எந்த வாரிசும் புலம்பவில்லை.. என் கணவர் ஏமாற்றிவிட்டார் என்று எந்த மனைவியும் புகார் சொல்லவில்லை. அன்று பலரும் வாங்க முடியாத பல சொத்துக்களை எம்ஆர் ராதா வெவ்வேறு மாநிலங்களில் வாங்கியிருந்தார்.. அவைகள் எம்ஆர் ராதா காலத்துக்கு பிறகு விற்கப்பட்டும் உள்ளன..
தேனாம்பேட்டை வீடு
5 மனைவிகள் என்றாலும் எந்த மனைவியுடன் கடைசிவரை நெருக்கமாக வாழ்ந்தார் என்பது எம்ஆர் ராதாவுக்குதான் தெரியும்.. ஆனால், கடைசிவரைக்கும் எம்ஆர் வாழ்ந்தது தன்னுடைய தேனாம்பேட்டை வீட்டில்தான்.. அங்குதான் இப்போது ராதாரவி இருக்கிறார்.. அந்தவகையில் தேனாம்பேட்டை வீட்டில் கடைசிவரை வாழ்ந்துள்ளார்.. மற்றவை எல்லாம் அவருக்கு பயணப்படும் வீடுகளாகவே இருந்துள்ளன..
எனினும் சிலர் 5 மனைவிகளா? என்று ஆச்சரியமாகவும், கேலியாகவும், கிண்டலாகவும் பேசுகிறார்கள்.. எத்தனை மனைவி இருந்தாலும், அது அவருடைய சொந்த விருப்பம்.. இதில் பொறாமைப்பட என்ன இருக்கு?
நடிகர் திலகம் அண்ணே
ராதிகாவின் அம்மா என்பதை காட்டிலும், எம்ஆர் ராதாவின் மனைவி என்பதுதான் மிகப்பெரிய அங்கீகாரம்.. அந்த அளவுக்கு எம்ஆர் ராதா மிகப்பெரிய ஆளுமை.. நடிகர் திலகம் எப்போதுமே எம்ஆர் ராதாவை அண்ணன் என்றுதான் அழைப்பார்.. ராதாரவியை அண்ணன் மகனே என்றுதான் கூப்பிடுவார்..
ராதிகா மிகச்சிறந்த ஆளுமை.. நடிப்பு ராட்சசி.. இன்றுள்ள நடிகைகளுக்கு இன்ஸ்பிரேஷன் யார் என்றால் உடனே சாவித்ரியை சொல்வார்கள்.. ஆனால் இன்றைய நடிகைகள், ராதிகா, ரேவதியின் நடிப்பை கற்க வேண்டும்.. அப்படிப்பட்ட ராதிகாவை சினிமாவுக்கு தந்தவர் கீதா.. வயது மூப்பு காரணமாக இறந்துள்ளது துக்கத்தை தந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications