தனுஷ் பொறாமைப்படுவதை நான் பார்த்தேன்..! மேடையில் வெளிப்படையாக பேசிய சரண்யா.. வியப்பில் ரசிகர்கள்
சென்னை: நடிகர் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சரண்யா பொன்வண்ணன் தனுஷ் குறித்து பேசி இருக்கிறார். அதில் தனுஷ் பொறாமைப்படுவதை நான் சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து பார்த்தேன் என்று கூறியிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
நடிகை சரண்யா பொன்வண்ணன் ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் இப்போது பல முன்னணி நடிகர்களின் அம்மாவாக நடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். அதுவும் நடிகர் தனுஷுக்கு அம்மாவாக வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தது பலராலும் பாராட்டப்பட்டது.

வேலை இல்லா பட்டதாரி திரைப்படத்தில் இடம் பெற்ற "அம்மா அம்மா" என்ற சென்டிமென்ட் பாடல் பல இளைஞர்களின் எவர்கிரீன் பாடல். சில இளைஞர்கள் இதுபோல எங்களுக்கு அம்மா இல்லையே என்று ஃபீல் பண்ணி வருகின்றனர். இன்னும் ஒரு சில இளைஞர்கள் இதுபோன்ற அம்மாவை தவற விட்டுவிட்டு பீல் பண்ணுவதையும் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் தனுஷ், ராயன் திரைப்படத்திற்கு பிறகு "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அந்த திரைப்படத்தில் சரண்யா பொன்வண்ணனும் நடித்திருக்கிறார். அதுபோல இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை அனிகா சுரேந்தர் நடித்திருக்கிறார்.

இதை தவிர நான் மாத்தியோ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ்மேனன் என பெரும் பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் பவிஷ் அம்மாவாக சரண்யா நடித்திருக்கிறார். வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்து இப்போது அவருடைய மருமகனுக்கு அம்மாவாக இந்த படத்தில் நடிப்பது பற்றி சரண்யா பொன்வண்ணன் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசி இருக்கிறார்.
அதில், இந்த படத்தில் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எப்படி நான் நடித்த நாயகன் படம் பற்றி இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்களோ அதுபோல வேலையில்லா பட்டதாரி படத்தை இன்றளவும் பலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். வெளியே என்னை பார்க்கும் பலர் தனுஷின் அம்மா வருகிறார் என்று சொல்வார்கள் அதைக் கேட்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கும்.

சினிமா என்னை தனுஷோடு ஒரு குடும்பமாகவே இணைத்திருக்கிறது. இவ்வளவு நாள் தனுஷ் என்னுடைய மகனாக இருந்தார். இந்த படத்தில் பவிஷ் தான் என்னுடைய மகன். செட்டில் பவிஷுடன் நடிக்கும் போது தனுஷ் பொறாமைப்படுவதை பார்த்தேன். தனுஷை எல்லோரும் மல்டி டாஸ்க் நபர் என்று சொல்வார்கள். ஆனால் அதை எல்லாம் விட தனுஷ் ஒழுக்கமான மனிதர். கடினமாக உழைக்கக்கூடியவர். அதனால் தான் அவர் வெற்றியடைந்து கொண்டு இருக்கிறார் என்று அந்த நிகழ்ச்சியில் சரண்யா பேசியிருக்கிறார்.

-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications