கதறி அழுத நடிகை அபிராமி.. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. அம்மா மகன் தவிப்பு..கலங்கும் ரசிகர்கள்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா லிட்டில் சாம்பியன் சீசன் 3 நிகழ்ச்சியில் நடுவராக நடிகை அபிராமி கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் பாடிய ஒரு சிறுவன் பாடிய பாடலை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அந்த சிறுவன் சொன்ன கதையை கேட்டு நடிகை அபிராமி கண்கலங்கி அழுது இருக்கிறார்.

மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கும் தன்னுடைய தாயின் ஆசையை நிறைவேற்ற மகன் செய்த செயல் பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறது.
அம்மாவின் அன்புக்கு ஈடு இணை எதுவும் கிடையாது என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும், பல குழந்தைகள் தங்களுடைய அம்மா அப்பா மீது வைத்திருக்கும் பாசமும் பார்ப்போரை நெகிழ்ச்சி அடைய செய்து கொண்டு தான் இருக்கிறது. அந்த மாதிரி தான் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா லிட்டில் சாம்பியன் நிகழ்ச்சியில் ஒரு நெருடலான காட்சி நிகழ்ந்திருக்கிறது.

பொதுவாக ரியாலிட்டி ஷோக்களில் டிஆர்பிஐ கூட்டுவதற்காக பல சுவாரசியமான நிகழ்வுகளை காட்டிக் கொண்டிருப்பினர். சிலர் ஜாலியான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி வருவார்கள். ஒரு சிலர் அழுகாச்சி சீன்களை காட்டி அனுதாபத்தை பெற முயற்சி செய்கிறார்கள். எப்படியோ டிஆர்பி அதிகரித்தால் போதும் என்று சில சேனல்கள் நினைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமபா லிட்டில் சாம்பியன் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறது. காரணம் சமீபத்தில் முடிவடைந்த சரிகமபா நிகழ்ச்சியை தொடர்ந்து குழந்தைகளுக்கான லிட்டில் சரிகமபா லிட்டில் சாம்பியன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சிறுவன்," ஆராரிராரோ தாயே நீ கண்ணுறங்கு" எனும் ராம் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலை பாடி இருக்கிறார்.

அந்தப் பாடலில் அத்தனை சோகங்களும் வலிகளும் இருப்பது பார்ப்பவர்களுக்கே தெரியும் நிலையில் இந்த பாடலை பார்த்து நடுவர்கள் இந்த பாடலில் உனக்கு ஏகப்பட்ட வலி இருக்கிறதே என்ன என்று கேட்க? அதற்கு அந்த சிறுவன் அம்மா நான் டிவில வரணும்னு ஆசைப்பட்டாங்க. ஆனால் இப்போ அம்மாவால அதை பாக்க முடியல. அம்மா ஆபத்தான நிலையில் தான் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்காங்க. அவங்களுக்கு சுயநினைவு இன்னும் வரல என்று கண்கலங்கி அழுகிறார்.
அதைத்தொடர்ந்து அந்த சிறுவன் சொன்ன கதையை கேட்டு அரங்கத்தில் இருந்த அத்தனை பேரும் அழுது இருக்கின்றனர். அதே நேரத்தில் தொகுப்பாளர் அர்ச்சனா இங்கே இருக்கிற அத்தனை அம்மாக்களும் உனக்கு அம்மாவாக இந்த இடத்தில் இருப்பாங்க என்று கூற மேடையில் இருந்த நடுவர்கள் உட்பட அனைத்து பெண்களும் அந்த சிறுவனுக்கு ஆறுதல் கூறுகின்றனர். அப்போது நடிகை அபிராமி கண்கலங்கி அழுதபடியே மேடையில் உன் கூட உங்க அம்மா இருப்பாங்கன்னு நான் முழுசா நம்புறேன் என்று கூறுகிறார்.

பெற்றால் மட்டும் தான் பிள்ளையா ஒரு குழந்தை கண்கலங்குவதை பார்க்கும் போதே மனதிற்குள் ஏதோ செய்கிறது என்று அதிகமான ரசிகர்கள் கருத்துக்களை குவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் அந்த சிறுவனுக்கு ஆறுதல் கூறி அவருடைய அம்மா விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்றும் பலர் தொடர்ச்சியாக ஆசீர்வாதங்களை கொடுத்து வருகின்றனர்.
-
சென்னையை விட்டு கிராமத்துக்கு போக போறேன்.. இதுதான் காரணம்! உருக்கமாக பேசிய விஜய் ஆண்டனி -
மகனின் 2வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. பாராட்டு குவியுது -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
சரிகமபா லிட்டில் சேம்ப்ஸ் 5 டைட்டில் வின்னர் அபிஷேகா... ரூ.1 கோடி மதிப்பிலான வீடு பரிசு! யார் இந்த குட்டி பாடகி? -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
ஆண் பாவம் பாண்டியனின் சோகமான மறுபக்கம்.. பிரபல நடிகரை வீழ்த்திய "பந்தய குதிரை".. நடந்தது என்ன -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications