ஈழ போராட்டத்தில் உயிரிழந்த மாமா.. கில்மிஷா பாடிய பாடல்.. சரிகமபாவில் நெருடல்..வலி நிறைந்த வார்த்தை
சென்னை: ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சமீபத்தில் சரிகமபா சீனியர் நிகழ்ச்சி முடிவடைந்தது. அதை தொடர்ந்து இப்போது சரிகமபா லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் இந்த வாரம் டெடிகேஷன் ரவுண்ட் தங்களுக்கு பிடித்தவர்களுக்காக பாடல்கள் பாடப்பட்டு வருகிறது.

அதில் ஈழத்துப் பெண்ணான கில்மிஷா பாடிய பாடல் பலரையும் கண் கலங்க வைத்திருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு மாற்றாக பல ரியாலிட்டி ஷோக்கள் புதிது புதிதாக தொடங்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சி தொடங்கி வெற்றி பெற்றுவிட்டால் அதை சார்ந்து பல சேனல்களில் அதையே பின்பற்றி விடுகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது பல பாடகர்களை உருவாக்கும் முயற்சியாக பல சேனல்களும் புதியதாக ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் சரி கம பா என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை பலருக்கும் காட்டி புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போதைய சரிகமபா லிட்டில் சாம்பியன் நிகழ்ச்சியில் பல குழந்தைகள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒருவராக யாழ்ப்பாணத்தில் இருந்து கில்மிஷா என்ற சிறுமியும் கலந்து கொண்டு தன்னுடைய குரல் வளத்தை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் டெடிகேஷன் ரவுண்ட் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிறப்பு விருந்தினராக பாடலாசிரியர் சினேகன் கலந்து கொண்டிருக்கிறார்.

அதில் பலர் தங்களுக்கு மனதிற்கு பிடித்தவர்களுக்கு பாடலை டெடிகேஷன் செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது பாடகி கில்மிஷா "கண்டா வர சொல்லுங்க" என்ற பாடலை பாடுகிறார். அந்த பாடல் அனைவருடைய மனதையும் உருக வைத்திருக்கிறது. காரணம் அந்த பாடலை தன்னுடைய மாமாவிற்காக பாடி இருக்கிறார். அவர் ஈழப் போராட்டத்தில் உயிரிழந்து விட்டாராம்.

அவரை நினைத்து அவருக்காக இதை டெடிகேஷன் செய்கிறேன் என்று அந்த சிறுமி கூறி இருக்கிறார். அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று கண்கலங்கி அழுது கொண்டிருந்தனர். அதுபோல இலங்கையில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசானி என்ற சிறுமியும் கில்மிஷா சொன்னதை கேட்டு கண் கலங்கி அழுதார். தற்போது இந்த பிரமோ வைரலாகி வருகிறது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications