சோதனையை தாண்டி சாதித்த கில்மிஷாவுக்கு கிடைத்த அடுத்த வெற்றி.. சரித்திரத்தை மாற்றிய சரிகமப
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக கடந்த வாரம் இலங்கையை சேர்ந்த கில்மிஷா தேர்வாகி இருந்தார்.
அவருக்கு எப்படி சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது என்று சுவாரசியமான தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி டைட்டில் வின்னரானதும் கில்மிஷாவிற்கு பிரபல பாடகர் பெரிய வாய்ப்பு ஒன்றை கொடுத்து இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்ப்போம்.

சின்னத்திரையில் இசை துறைக்கான ரியாலிட்டி ஷோ என்றால் அனைவருக்கும் டக்கென்று ஞாபகம் வருவது ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சி அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்திருக்கிறது. திறமை இருந்தால் போதும் யாரும் ஜெயிக்கலாம் என்பதற்கு உந்து கோளாக இந்த நிகழ்ச்சி இருக்கிறது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதனாலையே ஜூனியர், சீனியர் என இருவருக்கும் தனித்தனியாக ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு கோலாக்கலமாக தொடங்கிய சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக பைனல் நிகழ்ச்சியில் நிறைவு செய்தது.
நேரு ஸ்டேடியத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் ரிஷிதா, கில்மிஷா, ரித்தேஷ், சஞ்சனா, கனிஷ்கர், நிஷாந்த் கவின் என மொத்த ஆறு போட்டியாளர்கள் இறுதி கட்டத்தில் மோதி இருந்தனர். அதில் மக்கள் தேர்வு செய்த பாடல் மற்றும் சேலஞ்ச் ரவுண்டு என்று இரண்டு சுற்றுகளுடன் ஒளிபரப்பான கிராண்ட் பைனலில் இறுதியாக மக்களின் ஓட்டுக்கள் மற்றும் நடுவர்களின் மதிப்பெண் அடிப்படையில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான கில்மிஷா டைட்டிலை ஜெயித்திருந்தார்.

இவருக்கு வெற்றி பயணம் எப்படி சாத்தியமானது, இவர் எப்படி இந்த நிகழ்ச்சிக்கு வந்தார் என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது, பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. அது பற்றி பார்க்கலாம். அந்த வகையில் சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 3க்கான போட்டியாளர்களை தேர்வு செய்ய தமிழகம், கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் ஆடிஷன் நடத்தப்பட்டு இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் சோசியல் மீடியா மூலமாகவும் தங்களுடைய வீடியோக்களை அனுப்பி ஆடிஷனில் பங்கேற்கலாம் என்று சேனல் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது இலங்கையில் ஜாப்னாவில் வசித்து வந்த கில்மிஷா இந்தியாவிற்கு வந்து ஆடிஷனில் பங்கேற்க முடியாத நிலையில் சோசியல் மீடியாவில் தனது வீடியோவை அனுப்பி அதன் மூலம் தான் சரிகமப நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.
சோசியல் மீடியா மூலம் மொத்தம் 241 பேர் ஆடிஷனில் பங்கேற்று இருந்த நிலையில் அதில் முதல் ஆளாக கில் மிசா தேர்வாகி இருக்கிறார். சோசியல் மீடியாவை தனது வெற்றிக்கு முதல் படியாக பயன்படுத்தி சரிகமப நிகழ்ச்சியில் மூலமாக போட்டியாளராக தேர்வாகி இப்போது மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று டைட்டிலை ஜெயித்து தன்னுடைய நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கும் கில்மிஷாவிற்க்கு அதிகமானோர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
இலங்கையில் இருந்து வந்து தமிழகத்தில் வெற்றியை பதிவு செய்த முதல் ஈழத்து தமிழ் பெண்ணாகவும் கில்மிஷா இடம் பிடித்திருக்கிறார். அதே சமயம் நேரடி ஆடிஷன் மட்டுமல்லாமல் சமூக வலைத்தள மூலமாகவும் மூலை முடுக்கெல்லாம் இருக்கும் திறமைசாலிகளை தேர்வு செய்து வெளி உலகத்திற்கு தெரியப்படுத்திய பெருமை ஜீ தமிழுக்கே சேரும் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் கில்மிஷா சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் டைட்டில் ஜெயித்த பிறகு அவருடைய அதிகமான வாய்ப்புகள் வர தொடங்கி இருக்கிறது. அதிலும் பிரபல பாடகர் சந்தோஷ் நாராயணன் லைவ் கான்செப்ட் ஒன்றில் கில்மிஷாவிற்கு பாட வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இது குறித்து பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications