சரிகமப பைனல் போட்டியில் ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்.. இலங்கை அசானிக்கு இப்படி ஆகிவிட்டதே
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாம்பியன் சீசன் 3 வரும் ஞாயிற்றுக்கிழமை பைனல் நிகழ்ச்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் வைத்து டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை லைவாக ஒளிபரப்பாகும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் இறுதிப்போட்டியாளராக கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில் அது இந்த நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு உலக அளவில் தமிழ் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இரண்டு சீசன்களை கடந்து இப்போது மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல அர்ச்சனா தான் தொகுத்து வழங்கி வருகிறார்..
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்ட்டில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் சீனியர் மூன்றாவது சீசன் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து ஜூனியருக்கான சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் 28 போட்டியாளர்களோடு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதில் இலங்கை கண்டி என்ற பகுதியை சேர்ந்த அசானி என்ற பெண் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தன்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்று சில வாரங்கள் கழித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். ஆசானியின் தந்தை தேயிலைத் தோட்ட தொழிலாளியாக இருக்கிறார். இவர்களுடைய குடும்பம் 150 வருடங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் தான் இவர்களுடைய சொந்த ஊராக இருந்திருக்கிறது.
பிறகு இவர்கள் இலங்கைக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து போயிருக்கிறார்கள். அங்கு ஒரு தேயிலை தோட்டத்தில் பல வருடங்களாக இவர்களுடைய தலைமுறையே கொத்தடிமைகளாக வேலை செய்து வருகிறது. அங்கு சினிமா, டிவி என்று எதுவுமே பார்க்காமல் எப்எம் ரேடியோவில் வரும் பாட்டை கேட்டு ஆசானி பாடி பழகி இருக்கிறார்.
அவருடைய திறமையை அறிந்த அவருடைய குடும்பத்தினர் அசானி பாடிய வீடியோவை சரிகமப நிகழ்ச்சியின் ஆடிஷனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். பிறகு அசானியால் ஆடிஷனில் கலந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. அதற்கு காரணம் பண பிரச்சனையாக இருந்திருக்கிறது. இதனை அறிந்து அவருடைய ஊர் மக்கள் உறவினர்கள் எல்லோரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து அசானியை நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர்.
அசானி தமிழ்நாட்டை நம்பி வந்திருந்த நிலையில் அவருக்கு ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டும் என்று நடுவர்கள் முடிவெடுத்து இருந்தனர். முதல் பாடலின் மூலமாக அசானி அரங்கத்தில் இருந்தவர்களை மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களையும் வியந்து போக வைத்துவிட்டார். பிறகு சோசியல் மீடியா முழுவதும் இலங்கை பெண் அசானி குறித்து செய்திகள் தான் அதிகமாக உலா வந்தது.
பிறகு இந்த நிகழ்ச்சியின் அசானி செலிபிரிட்டியாக மாறி இருந்தார். அதைத்தொடர்ந்து அசானிக்கு ரசிகர்கள் அதிகளவில் இருந்தனர். இந்த நிலையில் இந்த சரிகமப சீசன் 3 லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சிக்கான பைனலிஸ்ட் பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் அசானியின் பெயர் இடம் பெயரவில்லை. அந்த வகையில் ரிஷிதா ஜவகர், கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ் குமார், கனிஷ்கர், கவின் என ஆறு பேர் இறுதிக்கட்ட நிகழ்ச்சிக்கு தேர்வாகி இருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.
இதனால் ரசிகர்கள் இலங்கைப் பெண்ணான கில்மிஷா பைனல் லிஸ்ட் இருந்தாலும் அசானி இல்லையே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அதோடு அசானியை ஜீ தமிழ் டிஆர்பிக்காக மட்டும் தான் பயன்படுத்திக் கொண்டார்களா என்று அதிகமான ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகிறார்கள்.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
சரிகமபா திவினேஷுக்கு நெப்போலியன் கொடுத்த சர்ப்ரைஸ்.. அமெரிக்காவில் நெகிழ்ந்த குடும்பம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்











Click it and Unblock the Notifications