சரிகமப டைட்டிலை மிஸ் செய்த யோகஸ்ரீ.. ஆனால் அடித்த பெரிய அதிர்ஷ்டம்.. திறமைக்கு எப்போதுமே மதிப்பு தான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் சேனலில் சமீபத்தில் முடிவடைந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்த யோகஸ்ரீ பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம். யோகஸ்ரீ இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வரவேண்டும் என்பது பலருடைய ஆசையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் திவினேஷ் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டார். அது யோகஸ்ரீயின் பாடலை ரசித்தவர்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தது. ஆரம்பத்திலிருந்து திவினேஷ் மற்றும் யோகஸ்ரீ இருவரும் தங்களுடைய தனித்துவமான பாடல்களால் ரசிகர்களை கவர்ந்திருந்தனர்.

Yogashree SaReGaMaPa ZeeTamil

யோகஸ்ரீக்கு சரிகமப நிகழ்ச்சியின் மூலமாக அதிகமான ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் 13 வயது சிறுமியின் தனித்துவமான குரல் பலருக்கும் ஃபேவரைட். எந்த பாடல்களை எடுத்தாலும் அதில் அப்படியே ரசிகர்களை மெய்மறக்க வைத்து விடுகிறார். அதிலும் இவருடைய பாடல்கள் செலக்சன் வேற லெவலில் இருக்கிறது என்பதுதான் பலருடைய கருத்தாக இருக்கிறது. யோகஸ்ரீயின் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று அவருடைய பழைய பாடல்களை கூட இப்போதும் பலர் தேடி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சரிகமப யோகஸ்ரீ ஹிட் லிஸ்ட்

இசை ரசிகர்களுக்கு யோகஸ்ரீயின் குரல் மட்டுமல்லாமல் அவருடைய சாந்தமான ரியாக்ஷனும் அதிகமாக பிடித்திருக்கிறது. அவர் பாடிய எங்கெங்கே எங்கெங்கே பாடல் தான் இவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. யோகஸ்ரீயின் திறமையை பார்த்து மெச்சிப்போன சிறப்பு விருந்தினர்கள் பலரும் யோகஸ்ரீயிடம் இதே பாடலை தான் பாட சொல்லி இருக்கிறார்கள். பைனல் மேடையில் கூட சிவகார்த்திகேயன் யோகஸ்ரீயிடம் இந்த பாடலை தான் மீண்டும் பாட சொல்லி இருந்தார்.

யோகஸ்ரீ பாடிய பாடல்கள்

இந்த பாடலை கேட்ட பிறகுதான் தான் சரிகமப நிகழ்ச்சியை பார்த்ததாகவும் சிவகார்த்திகேயன் கூறி இருந்தார். அவரை போல பலர் இந்த நிகழ்ச்சியை பார்க்கத் தொடங்கியதற்கு யோகஸ்ரீயின் பாடலும் காரணம். ஆனாலும் ஆரம்பத்தில் இருந்தே யோகஸ்ரீ மற்றும் திவினேஷ் இருவருக்கும் இடையில் தான் போட்டி அதிகமாக இருந்தது. இவர்கள் இருவரில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்ற கருத்து பலருக்கும் இருந்தது. ஆனால் கடைசியில் திவினேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதை சிலர் பாராட்டி இருந்தாலும் இன்னும் சிலர் யோகஸ்ரீ தான் முதல் இடத்திற்கு தகுதியானவர் என்று கூறி வருகிறார்கள்.

யோகஸ்ரீயின் சொந்த ஊர்

யோகஸ்ரீ வெற்றி பெறவில்லை என்றாலும் பலருடைய மனதை கவர்ந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலமாக இவருக்கு பல பரிசுகளும் கிடைத்திருக்கிறது. யோக ஸ்ரீயின் சொந்த ஊர் கரூர் மாவட்டம் தான். யோகஸ்ரீயின் குடும்பத்தில் இவர்தான் மூத்தவராம் இவருக்கு பிறகு இரண்டு சகோதரி மற்றும் ஒரு தம்பி இருக்கிறாராம். இவருடைய தந்தை ஆரம்பத்தில் ஸ்டுடியோ வைத்து போட்டோஸ் எடுத்து இருக்கிறார். அப்போது பேண்ட் ஷர்ட் போட்டு பார்ப்பதற்கு அழகாக இருப்பாராம், ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த வேலையை விட்டுவிட்டு டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்று விட்டாராம்.

சரிகமப யோகஸ்ரீயின் ஆசை

அதற்குப் பிறகு என்னுடைய அப்பா பேண்ட் ஷர்ட் போட்டு நான் பார்த்ததே இல்லை என்று டெடிகேஷன் ரவுண்டில் யோகஸ்ரீ பேசி இருந்தார். இது கேட்பவர்களை கண்கலங்க வைத்திருந்தது. ஆனால் அந்த நேரத்தில் யோகஸ்ரீயின் அப்பா பேண்ட் ஷர்ட்டில் வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். அதேபோல யோகஸ்ரீயின் பாடல் திறமையால் அவருடைய தந்தைக்கு தொழில் தொடங்குவதற்கும் சிலர் உதவி செய்து இருக்கிறார்கள். அதுபோல யோகஸ்ரீயின் வீடு மிகவும் சிறியதாக இருக்குமாம். பழைய வீடாக இருப்பதால் அந்த வீட்டில் பெரிதாக எந்த அடிப்படை வசதிகளும் இல்லையாம்.

யோகஸ்ரீக்கு கிடைத்த இடம்

இதனால் சரிகமப நிகழ்ச்சியின் சார்பாக யோகஸ்ரீக்கு 1700 ஸ்கொயர் பீட் இடம் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் யோகஸ்ரீ வீடு கட்டிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது எல்லாமே யோகஸ்ரீயின் பாடலால் கிடைத்தது தான். அது போல பைனல் நிகழ்ச்சியில் யோகஸ்ரீயின் பாடலை கேட்டு சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நான் நடிக்க போகும் படங்களில் இசை அமைப்பாளர்களிடம் உன்னுடைய பெயரைத்தான் ரெபர் செய்வேன். நீ கண்டிப்பாக என்னுடைய படங்களுக்கு பாடல்கள் பாட வேண்டும் அதற்காக நான் எல்லா இசையமைப்பாளர்களிடமும் பேசப் போகிறேன் என்று கூறியிருந்தார்.

Yogashree SaReGaMaPa ZeeTamil

தேவா செய்த உதவி

அதோடு பாடகர் ஸ்ரீனிவாஸிடம் சார் நீங்க ஏஆர் ரகுமானிடம் யோகஸ்ரீ பற்றி பேசுங்க என்று கூறியிருந்தார். அதேபோல தேவா ரவுண்டு பாடல் பாடப்பட்டபோது யோகஸ்ரீயின் பாடலை கேட்டு கண்கலங்கிய தேவா தன்னுடைய பாடலில் யோகஸ்ரீக்கு பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார். யோகஸ்ரீக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் பல அங்கீகாரமும் பாராட்டுகளும் கிடைத்திருக்கிறது. ஆனால் தொடர்ந்து இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் பலருடைய ஆசையாக இருக்கிறது. யோகஸ்ரீக்கு நம்முடைய வாழ்த்துக்களை கூறிக் கொள்ளலாம். யோகஸ்ரீ பாடிய பாடல்களில் உங்களுக்கு எந்த பாடல் பிடித்தது நண்பர்களே?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+