இந்த மனசு தான் கடவுள்..சரிகமப நிகழ்ச்சியில் நெகிழ்ச்சி..இலங்கை பெண்ணுக்காக தியாகம் செய்த ஊர்காரர்கள்
சென்னை: ஜீ தமிழ் நிகழ்ச்சியில் சரிகமப லிட்டில் சாம்பியன் சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இலங்கையிலிருந்து அசானி என்ற பெண் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்த குழந்தைக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் இதில் கலந்து கொள்வதற்காக போதிய பணம் இல்லாமல் இருந்த நிலையில் சொந்த ஊர் காரர்கள் அனைவரும் தங்கள் கையில் இருந்து சிறு சிறு தொகையையும் கொடுத்து வழி அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களுக்கு பிறகு அசானி கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு ஜீ தமிழ் சார்பாக வாய்ப்பு கொடுத்திருக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக தமிழ் சேனல்களில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பாடல் நிகழ்ச்சிகள் போன்றவை தமிழில் மட்டுமல்லாமல் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் பார்க்கப்படுகிறது. அதனாலேயே பல நாடுகளில் இருக்கும் தமிழர்கள் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் ஜீ தமிழில் சமீபத்தில் தொடங்கி இருக்கும் சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியில் இலங்கையில் இருக்கும் அசானி என்ற ஒரு குழந்தை கலந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அசானி பற்றி முழு தகவலையும் பார்க்கலாம். இலங்கையில் இருக்கும் பெரும் தோட்டத்தில் தொழிலாளிகளான கனகராஜ் சத்திய பவானி ஆகியோரின் மகள்தான் அசானி இவருக்கு இப்போது 14 வயது ஆகிறது. ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய குடும்பம் 150 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் தான் இருந்திருக்கின்றனர்.
அதற்குப் பிறகு அவர்கள் இலங்கைக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து சென்று இலங்கையில் கண்டி பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். அசானிக்கு ஒரு சகோதரரும் அம்மா, அப்பாவும் மட்டும்தான் வீட்டில் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒரு நாள் தோட்ட வேலை பார்க்கையில் 200 ரூபாய் வருமானமாக கிடைக்குமாம். அசானியின் சகோதரரும் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறாராம். அசானி எப்பவுமே ரேடியாவில் பாடல்களை கேட்டு பாடுவது வழக்கமாக வைத்திருக்கிறார்.

அசானியின் பாட்டை கேட்ட அவருடைய உறவினர்களும் ஊர் மக்களும் அசானியை பாராட்டிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பற்றி தெரிந்திருக்கிறது. அந்த இந்த நிலையில் அசானி பாடிய பாடல் ஒன்றை சரிகமப நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இதில் கலந்து கொள்வதற்காக ஜீ தமிழ் தரப்பில் இருந்து கூறி இருக்கின்றனர்.
ஆனால் மெகா ஆடிஷனில் அசானியால் கலந்து கொள்ள முடியாமல் ஆகி இருக்கிறது. அதற்கு காரணம் பணம் பற்றாக்குறை தான். அசானி இலங்கையிலிருந்து சென்னைக்கு வருவதற்கு அவர்களுடைய இலங்கை பண மதிப்பில் 1.5 லட்சம் ரூபாய் ஆகுமாம். இந்த பணத்தை அவருடைய குடும்பம் சம்பாதிப்பதற்கு இரண்டு வருடம் ஆகுமாம். அதனால் எப்படி போக என்று அவருடைய குடும்பத்தினர் யோசித்து இருக்கவே இருந்தனர்.
அந்த நேரத்தில் இதை அறிந்த அவருடைய சொந்த ஊர் மக்கள் உறவினர்கள் எல்லாரும் சேர்ந்து தங்களால் முடிந்த பணத்தை கொடுத்து இருக்கிறீர்கள். பலர் கையில் பணம் இல்லாமல் இருந்தாலும் வீட்டில் இருந்த உண்டியலை கூட உடைத்து அதில் இருக்கும் பணத்தை கொடுத்து அதானிக்கும் அவருடைய அப்பாவிற்கும் டிக்கெட் போட்டு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அப்படியாக இந்தியாவிற்கு வந்த அசானிக்கு பெரிய இன்ப அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. அதாவது விமான நிலையத்தில் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று அங்கிருந்தவர்கள் கேட்டிருக்கிறார்கள். அப்போது இவர்கள் சரிகமப நிகழ்ச்சியில் தங்களுக்கு பாட வாய்ப்பு கிடைத்திருப்பது பற்றி சொல்ல, அசானியை இரண்டு பாடல்கள் பாட சொல்லி கேட்டு அனைவரும் ரசித்து பாராட்டி வழி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அசானி மெகா ஆடிஷனில் பங்கேற்காத நிலையிலும் அவருக்காக நடுவர்கள் சிறப்பு வாய்ப்பு கொடுத்து இருந்தனர். அப்போது அந்த மேடையில் ராசாவே உன்னை நம்பி என்ற பாடலை அழகாக பாடி அனைவரையும் வியக்க வைத்திருந்த அசானிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. வெறும் ரேடியோவில் மட்டுமே பாட்டை கேட்டு இப்படி பாடுவாங்களா? இது உங்களுக்கு கடவுள் கொடுத்த பரிசு, பயிற்சி அதிகமாக இருந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று நடுவர்கள் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில் அசானியின் இனிய குரல் அனைவர் மத்தியிலும் ஒலிக்க வேண்டும் என்பது இலங்கை மக்களுக்கு மட்டுமல்ல இப்போது அனைத்து மக்களுக்கும் எதிர்பார்க்கும் ஒன்றுதான்.
-
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications