சரிகமப சீசன் 3யின் வின்னர் யார் தெரியுமா? கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்.. பரிசு இத்தனை லட்சமா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப சீசன் 3 கிராண்ட் பினாலே நேற்று நடைபெற்றது.
இதில் டைட்டில் வின்னராக புருஷோத்தமன் தேர்வாகி இருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து முதல் ரன்னராக ராகவர்ஷினி தேர்வாகி இருக்கிறார். அதுபோல இரண்டாவது ரன்னர் அப் ஆக லக்ஷனா தேர்வாகி இருக்கிறார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசன் நேற்றோடு முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீநிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ் மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடுவராக இருந்து வந்தனர்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது விஜே அர்ச்சனா தான். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 23 போட்டியாளர்கள் பங்கேற்று கடைசியில் நேற்றைய கிராண்ட் பினாலேவில் மூன்று போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனில் டைட்டில் ஜெயிக்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருந்தது. அதன்படி முதல் இடத்தை புருஷோத்தமன் பெற்றிருக்கிறார். அதாவது மக்களின் அதிகமான வாக்குகள் மற்றும் நடுவர்களால் வழங்கப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தான் இவர் வின்னராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
வின்னராகி ஜெயித்த புருஷோத்தமனுக்கு ரூபாய் பத்து லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல் ரன்னராக ராகவர்ஷினி தேர்வானார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. அவரைத் தொடர்ந்து மூன்றாவது இடம் லக்ஷனாவுக்கு கிடைத்திருக்கிறது. அவருக்கு மூன்று லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது.
அதுபோல டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக நாகார்ஜுன் வரவில்லை என்று அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு மக்களின் மனம் கவர்ந்த பாடகன் என்று விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications