2000 பேர் பங்கேற்ற சரிகமப சீசன் 4 ஆடிஷன்..பிரம்மாண்டமான மெகா சூட்டிங்..ரசிகர்களுக்கு சொன்ன சர்ப்ரைஸ்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். இந்த தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சரிகமப. பல சாமானிய மக்களின் கனவை நனவாக்கி அவர்களின் இசை திறமையை உலகறிய செய்யும் மேடையாக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது.
ராக்ஸ்டார் ரமணியம்மா, வாவ் கார்த்திக், புருஷோத்தமன், நாகர்ஜுன், லக்ஷ்னா, அசானி, பிரியன் என பல பேரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய நிகழ்ச்சியாக இந்த சரிகமப அமைந்துள்ளது.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 27-முதல் சரிகமப நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மெகா ஆடிஷன், போட்டியாளர்கள் தேர்வு குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த சீசனுக்காக தொடர்ச்சியாக 75 நாட்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக ஆடிஷன் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 20,000 பேர் ஆடிஷனில் பங்கேற்றதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 12,000 பேரில் திறமையான 50 போட்டியாளர்கள் மெகா ஆடிஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் மெகா ஆடிஷன் ஷூட்டிங் மிக பிரம்மாண்டமான செட்டில் நடந்து முடிந்துள்ள நிலையில் இதில் நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, ஸ்வேதா மோகன், கே. எஸ் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கே. எஸ் ரவிக்குமார் 49 படங்களை இயக்கிய அனுபவத்தை இந்த மேடையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முதல் இரண்டு வாரங்கள் மெகா ஆடிஷன் சுற்று ஒளிபரப்பாகும் எனவும் இதன் மூலமாக இந்த நிகழ்ச்சியில் தொடர இருக்கும் திறமையான போட்டியாளர்களை தேர்வு செய்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதுவரை இந்தியாவில் உள்ள மக்கள் மட்டுமே ஆடிஷனில் பங்கேற்க ஆர்வம் காட்டி வந்த நிலையில் நிலையில் இந்த முறை மலேசியா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்த் என பல நாடுகளில் இருந்து பலர் ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளனர்.
பெயிண்டர், ஓலை பின்னுபவர், போஸ்ட் woman என பல விதமான குடும்ப பின்புலங்களை கொண்டவர்கள் இந்த மெகா ஆடிஷனில் பங்கேற்று இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் இந்த சரிகமப சீசன் 4 நிகழ்ச்சியும் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 27-ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 7 மணிக்கு சரிகமப சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications