Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சரிகமப” மேடையை சோகத்தில் ஆழ்த்திய இலங்கை இளைஞன்.. சொன்ன வார்த்தையை கேட்டு அழுத நடுவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக சரிகமப நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சாமானிய மக்களின் கனவு நினைவாகி அவர்களின் இசை திறமை உலகறிய செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சரிகமப சீசன் 3 முடிவடைந்ததை தொடர்ந்து வரும் 27ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து போட்டியாளராக கலந்து கொண்ட இந்திரஜித் என்பவர் பேசிய வார்த்தைகளை கேட்டு நடுவர்கள் கண்கலங்கி அழுது இருக்கிறார்கள். இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

saregamapa season 4 judges are crying after hearing the words spoken by Indrajith

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 27-முதல் சரிகமப நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மெகா ஆடிஷன், போட்டியாளர்கள் தேர்வு குறித்த பல சுவாரஷ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த சீசனுக்காக தொடர்ச்சியாக 75 நாட்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக ஆடிஷன் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 12,000 பேர் ஆடிஷனில் பங்கேற்றதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 12,000 பேரில் திறமையான 50 போட்டியாளர்கள் மெகா ஆடிஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் மெகா ஆடிஷன் ஷூட்டிங் மிக பிரம்மாண்டமான செட்டில் நடந்து முடிந்துள்ள நிலையில் இதில் நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, ஸ்வேதா மோகன், கே. எஸ் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கே. எஸ் ரவிக்குமார் 49 படங்களை இயக்கிய அனுபவத்தை இந்த மேடையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

முதல் இரண்டு வாரங்கள் மெகா ஆடிஷன் சுற்று ஒளிபரப்பாகும் எனவும் இதன் மூலமாக இந்த நிகழ்ச்சியில் தொடர இருக்கும் திறமையான போட்டியாளர்களை தேர்வு செய்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதுவரை இந்தியாவில் உள்ள மக்கள் மட்டுமே ஆடிஷனில் பங்கேற்க ஆர்வம் காட்டி வந்த நிலையில் நிலையில் இந்த முறை மலேஷியா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்த் என பல நாடுகளில் இருந்து பலர் ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் போட்டியாளராக சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையின் பதுளை மாவட்டத்தை சார்ந்த "இந்திரஜித்" என்ற இளைஞருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே கடந்த சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியில் கில்மிசா மற்றும் அசானி கலந்து கொண்டு பெரிய அளவில் சாதனை படைத்திருந்தனர். தற்போது இலங்கையை சேர்ந்த மற்றுமொரு இளைஞர் சரிகமப மேடைக்கு ஏறுவது பலராலும் வியப்பாக பேசப்பட்டு வருகிறது.

saregamapa season 4 judges are crying after hearing the words spoken by Indrajith

இவர் எஸ்பிபி பாலசுப்ரமணியத்தின் தீவிர ரசிகராக இருக்கும் நிலையில் சரிகமப மேடையில் அவருடைய பாடலை பாடி ரசிகர்களை கண்கலங்க வைத்திருந்தார். மேலும் எஸ்பிபி பாலசுப்ரமணியன் பாடிய பாடல் மிகவும் கடுமையான பாடல்களை அவர் பாடி அங்கிருந்தவர்களை வியக்க வைத்திருந்தார். அப்போது எஸ்பிபி பாலசுப்ரமணியன் இறந்தபோது தான் ஒரு நாள் முழுக்க சாப்பிடவே இல்லை.

saregamapa season 4 judges are crying after hearing the words spoken by Indrajith

என்னால் அந்த வருத்தத்தில் இருந்து மீண்டு வருவதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது என்று மேடையில் பேசியிருக்கிறார். இதை அடுத்து மேடையில் எஸ்பிபியின் புகைப்படம் போடப்பட்டதும் அங்கிருந்த நடுவர்கள் அழுத காட்சிகள் பார்ப்போரை பீல் பண்ண வைத்திருக்கிறது. அதே நேரத்தில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சென்டிமென்டாக பேசி போட்டியாளர்கள் நடுவர்கள் கண்கலங்குவது பல நிகழ்ச்சிகளில் வாடிக்கையாக மாறிவிட்டது என்று சிலர் கருத்து வெளியிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் வரும் ஏப்ரல் 27-முதல் சரிகமப நிகழ்ச்சியின் நான்காவது சீசன் மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மெகா ஆடிஷன், போட்டியாளர்கள் தேர்வு குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த சீசனுக்காக தொடர்ச்சியாக 75 நாட்கள் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக ஆடிஷன் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 20,000 பேர் ஆடிஷனில் பங்கேற்றதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 12,000 பேரில் திறமையான 50 போட்டியாளர்கள் மெகா ஆடிஷனுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் மெகா ஆடிஷன் ஷூட்டிங் மிக பிரம்மாண்டமான செட்டில் நடந்து முடிந்துள்ள நிலையில் இதில் நடுவர்களாக ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி, ஸ்வேதா மோகன், கே. எஸ் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கே. எஸ் ரவிக்குமார் 49 படங்களை இயக்கிய அனுபவத்தை இந்த மேடையில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

முதல் இரண்டு வாரங்கள் மெகா ஆடிஷன் சுற்று ஒளிபரப்பாகும் எனவும் இதன் மூலமாக இந்த நிகழ்ச்சியில் தொடர இருக்கும் திறமையான போட்டியாளர்களை தேர்வு செய்து இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதுவரை இந்தியாவில் உள்ள மக்கள் மட்டுமே ஆடிஷனில் பங்கேற்க ஆர்வம் காட்டி வந்த நிலையில் நிலையில் இந்த முறை மலேசியா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஸ்விட்சர்லாந்த் என பல நாடுகளில் இருந்து பலர் ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+