SaReGaMaPa: சரிகமபவால் உடைந்து போன சமயம்! தேவயானியே இப்படி சொன்னாங்க! உருக்கமாக பேசிய சபேசன்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சிகளில் டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக வந்த சபேசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த நிகழ்ச்சி தனக்கு கொடுத்த மாற்றம் மற்றும் கஷ்டங்கள் குறித்து பேசி இருக்கிறார். அதில் நடிகை தேவயானி தன்னிடம் நேரடியாக சொன்ன விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார்.
ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சி பலருடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எப்போதும் அழுகாட்சி சீரியலுக்கு மாற்றாக இந்த பாடல் நிகழ்ச்சிகள் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. வீட்டில் இருந்து சீரியல் பார்க்கும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலர் மொபைல்களிலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பலருக்கு திரைப்படங்களில் பின்னணி பாடகர்களாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனாலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிலும் சமீபத்திய சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் நடிகை தேவயானி மகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதுவே பெரிய அளவில் பேசப்பட்டது.
தேவயானி 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்போது வரைக்கும் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவருடைய கணவர் ராஜகுமாரனும் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நிலையில் அவர்களுடைய மகள் தன்னுடைய திறமையை காட்டுவதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் என்று பெரிய அளவில் பேசப்பட்டது. அதுபோல இலங்கை சார்ந்த சபேசன் என்ற போட்டியாளரும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.
சபேசன் டாப் 3 போட்டியாளர்களில் ஒருவராக செலக்ட் ஆனார். ஆனால் அவரைப் பற்றிய சில விமர்சனங்களும் வந்தது. அதாவது சபேசன் ஒவ்வொரு ரவுண்டிலும் எமோஷனலாகி அழுது இருக்கிறார். இதனால் இவர் அழுதே வெற்றி பெற்றுவிட்டார் என்று கூட சிலர் வசைப்பாடி வந்தனர். இந்த நிலையில் தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு சபேசன், சமீபத்தில் ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
அதில் அவர் பேசும்போது, நான் இதுவரைக்கும் என்னுடைய வாழ்க்கையில் எந்த இடத்திலும் வெற்றியே பெறவில்லை. வெற்றியே பெறாமல் இருந்த ஒருவருக்கு திடீரென ஒரு வெற்றி கிடைக்கும்போது அது எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தான் தெரியும். அந்த இடத்தில் இருந்தவர்களால் தான் அதை ஃபீல் பண்ண முடியும். அதனால்தான் நான் அழுதுவிட்டேன். அதுபோல என்னுடைய எக்ஸ்பிரஷனை இப்படித்தான் காட்ட முடிகிறது.
நானும் அழக்கூடாது என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் என்னுடைய மகிழ்ச்சி அழுகையாகத்தான் காட்ட முடிகிறது. ஒரு சமயம் நான் என்னைப் பற்றி வந்த நெகட்டிவ் கமெண்ட்களால் சோர்ந்து போய் இருந்தேன் அந்த சமயத்தில் தேவயானி மேடம் என்னிடம் வந்து நீ எந்த இடத்திலும் அழுது ஜெயிக்கவில்லை.
நீ பாட்டு பாடி எல்லோரையும் மகிழ்வித்து தான் ஜெயித்து வந்திருக்க, அதனால நீ எதையும் நினைச்சு பீல் பண்ணாத அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்பதுதான் உன்னுடைய குறிக்கோளா இருக்கணும் என்று சொன்னாங்க. அது எனக்கு ஒரு பெரிய உத்வேகம் கொடுக்கிற மாதிரி இருந்துச்சு. அதற்கு பிறகு என்னைப் பற்றி வரும் நெகட்டிவ் கமெண்ட்களை எல்லாம் நான் கண்டு கொள்வது கிடையாது என்று சபேசன் உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications