"ஆசையில பாத்தி கட்டி” சரிகமபவில் தேவயானி மகள் பாடிய பாடல்! நேரடியாக கங்கை அமரன் சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் கங்கை அமரனின் ஸ்பெஷல் பாடல் சுற்று நடைபெறுகிறது. இதனால் கங்கை அமரன் அந்த நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டிருக்கிறார். கங்கை அமரனின் பாடல்களை போட்டியாளர்கள் பாடுகின்றனர். அப்போது நடிகை தேவயானியின் மகளான இனியா பாடிய பாடலை கேட்டு கங்கை அமரன் பாராட்டி இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனியருக்கான ஐந்தாவது சீசன் தொடங்கப்பட்டு சில வாரங்கள் கடந்துவிட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 28 போட்டியாளர்கள் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ரசிகர்களை போட்டியாளர்கள் வியக்க வைத்து கொண்டிருக்கின்றனர்.

SaReGaMaPa Devayani Zee Tamil

அதிலும் இந்த வாரத்தில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இசையமைப்பாளர் என்று பன்முகத்தன்மை கொண்ட கங்கை அமரனின் ஸ்பெஷல் பாடல்கள் பாடப்படுகிறது. அதற்கு சிறப்பு விருந்தினராக கங்கை அமரன் கலந்து கொண்டிருக்கிறார். அதுபோல பல இசை அமைப்பாளர்களும் பாடகர்களும் இந்த வாரம் கலந்து கொள்கிறார்கள். அப்போது கங்கை அமரனின் வெற்றி பாடல்கள் பலவற்றைப் போட்டியாளர்கள் பாடி கங்கை அமரனை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் வியக்க வைத்து இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தேவயானியில் மகளான இனியா "ஆசையில பாத்தி கட்டி நாத்து ஒன்னு நட்டு வச்சேன்" என்ற பாடலை பாடி இருக்கிறார். இந்த பாடலை கேட்டு மகிழ்ச்சியான கங்கை அமரன் இனியாவை பாராட்டி இருந்தார். அதுபோல இந்த பாடலை இனியா பாடும் போது நடுவராக இருக்கும் ஸ்வேதா மேனன் ஓடி சென்று இனியா உடன் சேர்ந்து பாடி இருந்தார். இனியாவின் பாடலை கேட்கும் போது சூப்பரா இருந்தது அப்படியே அந்த ஊருக்கு போன மாதிரியே இருந்தது என்று கங்கை அமரன் மற்றும் அங்கிருந்த பாடகர்களும் பாராட்டி இருந்தனர்.

அதுபோல "சொர்க்கமே என்றாலும் நம்ம ஊர போல வருமா" என்ற பாடலை அங்கிருந்து போட்டியாளர்கள் பாட அதைக் கேட்டு கங்கை அமரன் மிகவும் மகிழ்ச்சி ஆகி இருந்தார். இதுதான் ஸ்பெஷலான பாடல் என்று சிறப்பு விருந்தினரான பி. வாசு உட்பட பலர் பாராட்டி இருந்தனர். அதுபோல இதுவரை இல்லாத அளவில் இந்த சீசனில் வெற்றியாளருக்கு ஒரு மாபெரும் பரிசு காத்திருக்கிறது.

இந்த சீசனில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு ₹60 லட்சம் மதிப்புள்ள ஒரு வீடு பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் வீடு கட்டுவது என்பது பெரிய கனவு.. அப்படி இருக்கையில் ரூ 60 லட்சம் மதிப்புள்ள வீடே பரிசாக கிடைக்க போகிறது என்பது போட்டியாளர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, முதல் ரன்னர் அப் இடத்தை பிடிக்கும் போட்டியாளருக்கு ₹10 லட்சம் ரொக்கப் பரிசு காத்திருக்கிறது. மேலும், இரண்டாவது ரன்னர் அப் இடத்தை பிடிக்கும் போட்டியாளருக்கு ₹3 லட்சம் மதிப்புள்ள தங்கம் வழங்கப்படும். இவற்றுடன், மக்களின் மனம் கவர்ந்த ஒரு போட்டியாளருக்கு ₹5 லட்சம் மதிப்புள்ள தங்கம் சிறப்புப் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+