SaReGaMaPa: "கருப்பு நிலா நீ ஏன் கலங்குகிறாய்” தேவயானி மகள் பாடிய பாடல்! திண்டுக்கல் லியோனி சொன்ன வார்த்தை
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சரிகமப சீனியர் சீசன் 5' நிகழ்ச்சியில் நடிகை தேவயானியின் மகள் இனியா போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். அம்மாவைப் போல மகளும் நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன் சொந்த முயற்சியில் பாடகியாக வர வேண்டும் என்று இனியா எடுத்த முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள். கடந்த வாரத்தில் இனியா 'கருப்பு நிலா நீ ஏன் கலங்குகிறாய்" என்ற பாடலை பாடி பலருடைய பாராட்டை பெற்று இருக்கிறார்.

இனியாவின் பயணம்
இனியாவின் மெல்லிய குரலால் அவர் ஆரம்பத்தில் பாடிய 'மயில் போல பொண்ணு' பாடல் பலருடைய மனதில் இடம் பிடித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்', 'வா வா என் தேவதையே' போன்ற பாடல்கள் பிளே லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறது.
தேவயானியின் சப்போர்ட்
ஒவ்வொரு வாரமும் இனியாவுக்காக தேவயானியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார். மற்ற போட்டியாளர்களின் குடும்பத்தினர் போல தேவயானி நடந்து கொள்வதை பலரும் பாராட்டி வருகிறார்கள். தனது மகளுடைய வாழ்க்கைக்கு தாங்கள் எவ்வளவு துணையாக இருக்கிறோம் என தேவயானி அவருடைய குடும்பத்தினரோடு நிரூபித்து பலருடைய நன்மதிப்பை பெற்று வருகிறார்.
திண்டுக்கல் லியோனியின் பாராட்டு
சரிகமப நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் டவுன் பஸ் பாடல்கள் ரவுண்டு நடைபெற்றது அதில் போட்டியாளர்கள் இரவு நேரத்தில் பஸ்ஸில் இருக்கும் இனிமையான பாடல்களை பாடி இருந்தனர். அந்த வரிசையில் ' கருப்பு நிலா நீ ஏன் கலங்குகிறாய்' என்ற பாடலை தேவயானி மகள் இனியா பாட அதைக் கேட்ட சிறப்பு விருந்தினராக வந்த திண்டுக்கல் லியோனி நெகிழ்ந்து போனார்.
அவர் இனியாவை பார்த்து "நீ உன்னுடைய அம்மாவை விடவும் சிறப்பான ஒரு இடத்தை சினிமா துறையில் பெற வேண்டும். நீ ஒரு சிறந்த பின்னணி பாடகியாக வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ஒரு தாத்தாவாக என்னுடைய வாழ்த்துக்கள்" என்று சொல்லி இருந்தார்.
மரியாதை
ஆரம்பத்தில் திண்டுக்கல் லியோனி பாராட்டும் போது இனியா "நன்றி சார்" என்று சொன்னார். ஆனால் கடைசியில் திண்டுக்கல் லியோனி ஒரு தாத்தாவாக வாழ்த்துக்கள் என்று சொன்னதும் சந்தோஷத்தில் "தேங்க்ஸ் தாத்தா" என்று இனியா சொன்னார். பாடகி மட்டுமல்லாமல் பெரியோர்களுக்கு மரியாதை கொடுக்கும் குணத்தையும் இனியாவிடம் கண்ட பலரும் மனம் உருகி பாராட்டுகிறார்கள்.
அதுபோல போட்டியாளர்கள் பாடி முடித்ததும் சில சுவாரசியமான சம்பவங்களும் நடந்தது. அதாவது பஸ்ஸில் வெள்ளரிக்காய், மாங்காய் இஞ்சி மரப்பா போன்றவை விற்கப்படும் அதை போட்டியாளர்கள் சில நகைச்சுவையாக செய்து காட்டியிருந்தனர். அப்போது இனியா தன்னுடைய தலையில் ஒரு கூடையை வைத்து மாங்காய், வெள்ளரிக்காய் விற்பவர்களை போலவே கூவி கூவி விற்பனை செய்தார். இதை பார்த்த அனைவரும் இனியா பாடகி மட்டுமல்ல நல்ல நடிகை என்றும் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications