விஜய் தான் எனக்கு பிடிச்ச நடிகர்! ஏன் தெரியுமா? சரிகமப திவினேஷ் சொன்ன காரணம்.. இவருக்கு இப்படி ஒரு ஆசையா?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான திவினேஷ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது தனக்கு பிடித்த நடிகர் விஜய் தான் என்று கூறியிருக்கிறார். அதோடு தான் பாடகராக மட்டுமல்லாமல் நடிகராக வேண்டும் என்றும் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறார் அதோடு சில சுவாரசியமான சம்பவங்களையும் திவினேஷ் பகிர்ந்திருந்தார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
70ஸ் பாடல்களில் இத்தனை அர்த்தங்களும் இனிமையும் இருக்கிறது என்று இப்போதுள்ள ஜெனரேஷன் குழந்தைகளையும் கூட கேட்க வைத்த குரலுக்கு சொந்தக்காரர் தான் திவினேஷ். இசையமைப்பாளரும் பாடகருமான எம்எஸ் விஸ்வநாதன் உட்பட பல மெல்லிசை நாயகர்களின் இனிமையான பாடல்களை பாடி எல்லோரையும் வியக்க வைத்திருந்தார். அதனாலேயே சரிகமப நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

சரிகமப டைட்டில் வின்னர் திவினேஷ்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவருடைய பாடலை கேட்டு பாராட்ட தொடங்கி இருந்தனர். ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் இந்த நிகழ்ச்சி சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் இதுவரைக்கும் நடக்காத ஒரு அதிசயத்தை திவினேஷ் செய்து காட்டியிருந்தார். ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே அதில் மக்கள் மனதில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களை பாடினால் தான் எல்லோரும் ரசிப்பார்கள் என்ற கருத்தை மாற்றி பழைய பாடல்கள் மூலம் திவினேஷ் பிரபலமடைந்தார்.
பழைய பாடல்கள்
இவருடைய பாடல்கள் பல தாத்தா பாட்டிகளின் மனதிற்கு மருந்தாக அமைந்ததாக இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்கள். அதுபோல தங்கள் வீட்டில் இப்படி ஒரு பேர குழந்தை இல்லையே என்று பலர் அந்த நிகழ்ச்சியில் வருத்தம் தெரிவித்தனர். சரிகமப நிகழ்ச்சியின் மூலம் பலர் வீட்டு செல்ல பிள்ளையாக வலம் வரும் திவினேஷ் இப்போது தொடங்கிய சரிகமப சீனியர் சீசன் 5 நிகழ்ச்சியில் அடிக்கடி வந்து பாடிக் கொண்டிருக்கிறார்.
திவினேஷ் ஆசை
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது உங்களுக்கு பிடிச்ச நடிகர் யாரென்று கேட்கப்பட்டபோது எனது விஜய் தான் பிடிக்கும் என்று சொல்லி இருந்தார். அதோடு நீங்க அருமையா பாடுறீங்க, பிற்காலத்தில் சினிமாவில் நடிப்பது போன்ற ஆசை எதுவும் இருக்கிறதா? என்று கேட்டதற்கு கண்டிப்பா இருக்கு. நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது எனக்கு ரொம்ப ஆசை. அதுவும் விஜய் உடன் நடித்தால் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்லி இருந்தார். திவினேஷ் அமைதியின் சொரூபமாக சரிகமப மேடையில் பார்த்த ரசிகர்களுக்கு இவருக்குள் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறதா? என்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications