சரிகமப பவித்ரா என் அக்கா தான்! நெகிழ வைத்த சண்முக பாண்டியன்.. விஜயகாந்த் சாகல! கலங்க வைத்த காட்சி
நசென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'சரிகமப சீனியர் சீசன் 5' நிகழ்ச்சியின் இந்த வாரம் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் விஜயகாந்த் பாடல்கள் ரவுண்ட் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் கலந்து கொண்டார்.

சரிகமப ஒரு இசைப்பயணம்
'சரிகமப' நிகழ்ச்சியின் இந்த சீசனை விஜே அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார்கள். நடுவர்களாக பாடகர்கள் விஜய் பிரகாஷ், ஸ்ரீனிவாஸ், கார்த்திக் மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் பணியாற்றுகிறார்கள். இந்த நிலையில் விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக இந்த வாரம் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் விஜயகாந்தின் சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி மேடையை கலக்கினர். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த வாரம் நிகழ்ச்சியில் கிடைத்த டிஆர்பி வேறு எந்த நிகழ்ச்சிகளுக்கும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
சண்முக பாண்டியனின் மனிதநேயம்
சமீபத்தில் கணவரை இழந்த போட்டியாளர் பவித்ரா தனது கணவரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக 'சரிகமப' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடி வருகிறார். இந்த வாரம் பவித்ராவின் பாடலைக் கேட்டு சண்முக பாண்டியன் மனம் உருகிப் போனார். "பவித்ரா அக்கா இனி என்னுடைய சொந்த அக்கா தான். அவருடைய மகளின் படிப்புக்கு என்ன தேவையோ அதை நான் எப்போதும் செய்வேன். அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு தம்பியாக எல்லா விஷயத்தையும் நான் கவனித்துக் கொள்கிறேன். உங்களுக்கு யாரும் இல்லை என்று நினைக்காதீர்கள் அக்கா. நானும் என்னுடைய குடும்பமும் இருக்கிறோம்" என்று ஆறுதல் கூறினார்.
உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் விஜயகாந்த்
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குநர் ஆர்.கே. செல்வமணி மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் சண்முக பாண்டியனை விஜயகாந்தின் மற்றொரு உருவம் என்றும் 'கருப்புத் தங்கம்' என்றும் புகழ்ந்தனர். நடுவர் விஜய் பிரகாஷ், "விஜயகாந்த் சாரை நேரில் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது பார்க்கிறேன். தம்பி சண்முக பாண்டியன் வடிவில் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். உங்களுடைய அப்பாவின் கம்பீரம் அப்படியே உங்களிடம் இருக்கிறது" என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
கோரிக்கை
சண்முக பாண்டியன் ஒரு போட்டியாளரிடம் பேசும்போது, "நீங்கள் என் அப்பா விஜயகாந்தின் பாடலை பாடி இருக்கிறீர்கள். உங்கள் பெயருக்கு முன்பு 'கேப்டன்' என்ற பெயரைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அதுதான் என்னுடைய ஆசை" என்று வேண்டுகோள் வைத்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் சண்முக பாண்டியன் விஜயகாந்தின் சாயல் உருவத்தில் மட்டுமல்ல குணத்திலும் இருக்கிறது என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications