பாத்ரூம் கழுவிய ஆயா எங்க அம்மா.. சரிகமபவில் மிரள வைத்த ஆட்டோக்காரர்.. திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்று வருகிறது. அதில் ஆட்டோ ஓட்டுனர் வீரபாண்டி தன்னுடைய அம்மாவிற்காக டெடிகேஷன் ரவுண்டில் பாட்டு பாடி இருக்கிறார். அதோடு தன்னுடைய அம்மா தங்களை வளர்ப்பதற்காக ஸ்கூலில் பாத்ரூம் கழுவி ஆயாவாக வேலை பார்த்ததை சொல்லி எல்லோரையும் கண்கலங்க வைத்திருக்கிறார்.

அந்த வகையில் சின்னத்திரையில் ஒரு நிகழ்ச்சி ஒரு சேனலில் வெற்றி பெற்று விட்டால் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சேனல்களில் அதுபோல நிகழ்ச்சிகள் தொடங்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் தான் பல சேனல்களில் பாடல் நிகழ்ச்சி தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது.

Television

அதுபோல ஜீ தமிழிலும் சரிகமப நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சீனியர் மற்றும் ஜூனியர் என இரண்டு விதமாக தொடர்ந்து ஒளிபரப்பாகிறது. அந்த வகையில் இப்போது சரிகமப சீசன் 4 சீனியர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வகையில் இந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த வாரத்திலும் டெடிகேஷன் ரவுண்டு நடைபெற்றது. இதில் பல அழுகாட்சி காட்சிகள் தான் ஏகத்துக்கும் இருந்தது. டெடிகேஷன் ரவுண்டு என்றாலே இப்படித்தான் இருக்கும் என்பது எல்லா சீசன்களிலும் தொடர்ந்து வருகிறது.

அதற்கு இந்த சீசனிலும் விதிவிலக்கல்ல என்பதை கடந்த வாரத்தில் நிரூபித்து இருந்தார்கள். கடந்த வாரத்தில் தனக்கு சப்போர்ட் செய்யாத தன்னுடைய தந்தை குறித்து ஸ்வேதா ஒரு லெட்டர் எழுதி அவருக்காக ஒரு பாடலையும் டெலிவிஷன் செய்து இருந்த நிலையில் அவருடைய தந்தை
மேடையிலேயே கண்கலங்கி அழுதது, பிறகு ஸ்வேதாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது பலரையும் பீல் பண்ண வைத்தது.

அதுபோல பாடகி சைந்தவியின் தந்தையும் சிறப்பு விருந்தினராக கடந்த வாரத்தில் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து இந்த வாரமும் டெடிகேஷன் ரவுண்டு நடைபெறுகிறது. அதில் ஆட்டோ ஓட்டுனர் வீரபாண்டி தன்னுடைய அம்மாவிற்காக என்ன பெத்த ஆத்தா என்ற பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடலை பாடி முடித்து தன்னுடைய அம்மா தங்களுக்காக ஸ்கூலில் பாத்ரூம் கழுவி ஆயா வேலை பார்த்ததாகவும் ஆனாலும் பல நாள் நாங்க சாப்பாடு இல்லாமல் பட்டினியா இருந்திருக்கோம் என்றும் உருக்கமாக பேசி இருந்தார்.

அதுபோல எங்க அம்மா இதுவரைக்கும் பட்டு புடவை கட்டியது கிடையாது. நான் எடுத்துக் கொடுத்து கட்ட வேண்டும் என்று அம்மா ஆசைப்படுவாங்க என்று புது புடவை ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். அப்போது வீரபாண்டியின் அம்மா, இந்த ஆயாமாவின் பிள்ளை இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க எனக்கு பெயர் வாங்கி கொடுத்திருக்கான் என்று கண்கலங்கி அழுதிருக்கிறார்.

அப்போது பாடகி சைந்தவி இவங்க அங்க உட்கார்ந்து உங்க பாட்டை கேட்கக் கூடாது நடுவர்கள் சீட்டில் அவங்க உட்காரனும் என்று சொல்லி வீரபாண்டியின் அம்மாவை நடுவர் சீட்டில் உட்கார வைத்திருக்கிறார். இந்த ப்ரோமோ பலரையும் கண்கலங்க வைத்திருப்பதாக பலர் பீல் பண்ணி கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+